குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)

அன்பு marliya என் பெண்ணின் வயது 2(siva ranjani) , அவளுக்கு உரிய massage சொல்லவும். அப்படியெ பிறந்தது முதல் எப்படி செய்ய வெண்டும் என்பதயும் சொல்லவும்.என் அன்பு தொழி ஒருத்திக்கு இந்த மாதம் குழந்தை பிறக்க உள்ளது(I too follow for my next baby).

நான் என் பெண்ணின் முதல் blanket அவள் பிறக்கயில் அவளை வாங்கியது, முதல் வளயல்,முதல் உடை, பொன்றவற்றை வைதுல்லஎன், எல்லாம் அவள் கணவரிடம் , அவள் குழன்தையிடம் காட்டலாமெ என்று

நான் கூட ரொம்ப அழுதேன். இன்றக்கு நினத்தாலும் எனக்கு அந்த நாள் மறக்க முடியாது. என் தோழிகளிடம் ஊர்ல் இருக்கற அம்மா,அப்பா எல்லார்ட்டேயுன் நான் போன் பண்னி அழுதேன். அவன்க எல்லாம் சொன்னங்க நீ பார் இன்னும் அடுத்த போன்ல சொல்வே பார் நான் சரியாயிட்டேன். என்று.அந்த மாதிரி நம்ம குழந்தைகளை சொல்வதற்க்கு முடிவே இல்லை. ரஜினி என் பெண் கூட் 7 வயது அக்ஷ்யா, திவ்யா - 23 மாதம்.
2 வதொ ரொம்ப சுட்டி வால். தாங்க முடியல்லை.
சரியாக இருக்கு எனக்கு.நான் சில நேரத்தல் சாப்பிட கூட முடியாமல் போகிறது.
இன்னும் தொடரும்.

என் கனவர் என் குழந்தைகளின் முதல் முடி, முதல் பிக்சர், முதல் காதணி, முதல் ட்ரெஸ், முதல் செருப்பு,முதலில் எழுதின எழுத்து, படம், இப்படி எல்லாம் சேர்த்து வைத்துள்ளோம். அதை எல்லாம் scrapbook ஆக வைத்துள்ளோம்.எல்லாரும் அந்த மாதிரி செய்யலாம். நாள் அவங்க வளர்ந்து இதை பார்த்து சந்தோஷ படுவார்கள். இப்ப கூட என் மாமியார் என் கணவருக்கு முதல்ல யுஸ் பன்ணின ஸில்வர் கிண்ணம், ஸ்பூன்,தட்டு, சங்கு இதெல்லாம் எனக்கு குடுத்து யூஸ் பண்ண சொன்னாங்க. நானும் அதை தொடருகிறேன்.

தொடரும்...

நான் ஏற்கனவே என் மகனின் முதல் நேசறி பற்றி இங்கு எங்கேயோ கதைத்துவிட்டேன், எங்கே எனத் தெரியவில்லை. யாராவது கண்டால் தயவுசெய்து, அது எங்கிருக்கிறது என்பதை இங்கே எழுதிவிடுங்கள்... கோடி புண்ணியம் கிடைக்கும்.

இன்னுமொன்று, குழந்தை வயிற்றிலிருக்கும்போது , 7 மாதத்தின் பின் துடிப்பை உணரலாம் என நினைக்கிறேன். சிலர் சொன்னார்கள் அதிகமாக துடித்தால் அது ஆண்குழந்தை எனவும் குறைவாக இருந்தால் பெண்குழந்தை எனவும் ஓரளவுக்கு சொல்லலாம் என்று. ஏனெனில் சிலர் பயப்படுவார்கள், துடிப்பு மிகவும் குறைவாக இருக்கிறதே என்று. வேறு மருத்துவ ரீதியான காரணங்களும் உண்டு. ஆனால் பெண் குழந்தைக்கும் குறைவாக இருக்கும் என்கிறார்கள். யாராவது அனுபவத்தில் தெரிந்தால் சொல்லுங்கள்.

(வயிற்றிலிருந்தபோது) என் 2வது மகன் கடுமையாக உதைக்கவில்லை. ஆனால் மூத்தவரின் உதைகள் இருக்கிறதே.... என்னால் மறக்கவே முடியாது. உதையத் தொடங்கிவிட்டால் நான் படுத்துவிடுவேன், அவ்வளவு கழைப்பு வந்துவிடும் எனக்கு. ஒருநாள் 8 வது மாதம் நான் வெஸ்பாவில் போய்க்கொண்டிருந்தேன், என் வயிற்றில் அவன் உதைந்தது அப்படியே என் ஹஸ்ப...னின் முதுகில் இடித்தது, அவர் திடுக்கிட்டு கேட்டார் என்ன குழந்தை உதைத்ததா என்று. ஆனால் மூத்தவர் இப்பவும் அதேபோல் ஸ்ரோங்... சும்மா அவரின் கை என்னில் இடிபட்டாலே எனக்கு நோகும். நிறைய எழுதிவிட்டேன்.. பின்னர் தொடரும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹ்ம்ம் ஒரு விஷயம் சொல்லி விட்டு போகிறேன் இப்ப...
முக்கியமாக குழந்தைகளுக்கு எந்த துணியாக இருந்தாலும் புதியதை அப்படியே அணிந்து விடாதீர்கள்..நல்ல சுடு நீரில் துவைத்து காயவிட்டு பிறகு போட்டு விடுங்கள்.
துணி தயாரிக்கும் கம்பெனிக்கு போய் பார்த்தால் ஆஹா..அவ்வளவு கெமிகலும் துணியில் இருக்கும்..போஹ்டாததுக்கு ஆயிரம் கை மாறி மாறி வரும் எல்லா கிருமிகளும் இருக்கும்.
இன்று சரியாக ஒரு மெயிலும் வந்தது அதனால் தவறாமல் இங்கு போட வந்தேன்.

ஓஹ் இரண்டு வயதா? சிவ ரஞ்சனி அழகான பெயர்..ஆலிவ் ஆயில்,அல்லது சுத்தமான தேங்காய் எண்ணைய் எடுத்து முகம் தவிர்த்து மேலில் இருந்து கீழ் நோக்கி மசாஜ் கொடுக்கனும்..ஒரு ஹாப் ஹவர் அப்படியே ஊற விடனும் பிள்ளைக்கு பொறுமை இல்லைனா 15 நிமிடம் போதும்..அஜீரண கோளாரு பிள்ளையின் எழும்பு இதுகெல்லாம் நல்லது...என் பொண்ணு விட மாட்டா...குழந்தைக்குன்னா மெதுவா மாசாஜ் கொடுக்கனும் அழுத்தி தேய்க்க கூடாது...இதே போல்தான் ஆனால் அவர்களை ரெப்ப்ர் சீட்டில் ஏதாவது ஒரு(குழந்தையின் துணிதான்)போட்டு அதில் போட்டு பின் குளிப்பாட்டனும்...

அழகான ஆர்வம் உங்களுக்கு நான் ரொம்ப செண்டி மெண்ட்டான டிரசை மட்டும் என் அக்கா பொண்ணுக்கு வைத்து இருக்கேன்,அவளுக்கு போட்டு அழகு பார்ப்பென்..என் பொண்ணிடமும் சொல்வேன் இது உன் டிரஸ் பாரு தங்கச்சிக்கு எவ்லோ நல்லா இருக்குன்னு அவளும் பூட்டிபுல்(அதான் பியூட்டி புல்)அப்படி சொல்வாள்..மேலும் அவளுக்கு காது குத்திய பொழுது போட்ட கம்மல் பத்திரமாக இருக்கு..செயிந்தான் அந்து போச்சு..வளையல்,கொளுசு இப்படி ஜுவல்ஸ்லாம் இருக்கு அழிக்காமல் வைத்துட்டேன்..அக்கா பொண்ணுக்கு போட்டுட்டேன் அடுத்து அனேகமா பொண்ணுனா அதுக்கு வரும் இல்லை ஸ்ற்றைட்டா என் பொண்ணின் மகளுக்குதான் ஹா ஹா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மசாஜ் செய்யும் முறையை நானும் நெட்டில் இருந்து படித்து தான் செய்து கொண்டிருந்தேன்.இப்பொழுது மறந்துவிட்டது. ஏனென்றால் இவளுக்கு கடந்த 1 வருடமாக அதற்கு பொறுமையில்லை.
கொஞ்சம் நியாபகம் வந்ததை சொல்கிறேன்.பிறகு பார்த்து சொல்கிறேன்.
எண்ணை நாம் மசாஜ் செய்யும்பொழுது மென்மையாக வழுக்கிவிட்டு வருவதற்காகத் தான்..அதற்கு தேங்காய் எண்ணை,ஆலிவ் எண்ணை அல்லது பேபி ஆயில் அல்லது ஆல்மன்ட் ஆயில் தடவலாம்.
முதலில் எண்ணை தேய்த்தபின் குழந்தையை கொண்டு போய் குளிக்க வைக்க தேவைப்படும் பொருட்களை ரெடியாக வைத்து விட்டு வாருங்கள்
பின் ஒரு ரப்பர் ஷீட் விரித்துக் கொண்டு அதன் மேல் ஒரு காட்டன் துணி விரித்துக் கொள்ளுங்கள்...இதற்கென்றே 3 காட்டன் துணி வைத்து மாறி மாறி துவைத்து பயன்படுத்துங்கள்.டைரெக்டாக எண்ணை தேய்த்து ஷீட்டில் போடுவது சிறிதும் நல்லதல்ல.
அதன் மேல் குழந்தையின் ஆடையைக் களைந்து படுக்க வைய்யுங்கள்..அறையின் வெட்பம் குழந்தைக்கு சரியாக இருக்கும்படி அதிக குளிரில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கை சில்லென இருக்காமல் உரசி சூடு படுத்திக் கொள்ளுங்கள்.பிறகு கொஞ்சம் எண்ணையை கைய்யில் தடவிக் கொண்ள்ளுங்கள்.பிறகு கழுத்து முதல் பாதம் வரை இடது புறமும் வலது புறமும் நீளமாக தடவுங்கள்..இப்பொழுது அதற்கு விருப்பமில்லையென்றால் அழுகத் தொடங்கும்...அழுதால் நிறுத்தி விடுங்கள்..அழுக வைத்து செய்தால் செய்ததற்கான பலன் கிடைக்காது.
பிறகு குழந்தையின் ஒரு கைய்யை நமது ஒரு கைய்யால் பிடித்துக் கொண்டு மறு கைய்யால் மேலிருந்து கீழ் நோக்கி உள்ளங்கை குழந்தையின் கைய்யை சுற்றிய விதம் தடவுங்கள்..திரும்ப கீழிருந்து மேல் நோக்கி தடவுங்கள்..
இது போலவே காலுக்கும் உள்ளங்கைய்யை சுற்றி பிடித்து அழுத்தாமல் மென்மையாக கீழிருந்து மேல் மேலிருந்து கீழ் என மசாஜ் செய்யுங்கள்.
முகத்திற்கு கட்டை விரலால் மூக்கின் கீழிருந்து மேல் நெற்றி வரை வருடுங்கள்...குழந்தைக்கு தூக்கம் வரும்பொழுதும் இப்படி செய்தால் நல்ல சுகமாக அசந்து தூங்கும்
வயிற்றுக்கு செய்ய விரலால் சின்ன கமா போடுவது போல் மென்மையாக க்லாக்வைசில் குழந்தையின் வயிற்றில் செய்யுங்கள்.
குழந்தையின் கழுத்தில் சப்போர்ட் கொடுத்து சாப்பிட்டவுடன் திருப்பி வைப்போமே அது போல் போட்டு முதுகையும் மேலிருந்து கீழாக மசாஜ் செய்யலாம்
தலைக்கு லேசாக குட்டி குட்டி பொட்டு வைப்பது போல் தலையை சுற்றி விரலால் தொட்டு தொட்டு விடுங்கள் போதும்
இன்னும் என்னெனவோ முறைகள் உண்டு அவை எனக்கு தற்பொழுது நியாபகம் இல்லை
மேலே சொன்ன எல்லாம் செய்யும்பொழுது வயிறு முட்ட குழந்தையின் வயிற்றை நிரப்பி செய்யவும் வேண்டாம் ரொம்ப காலியாக்க செய்யவும் வேண்டாம் குழந்தை சாப்பிட்டு 20 நிமிடம் கழித்து செய்யவும்
மேலே சொன்ன மசாஜ் எல்லாம் செய்து ஒரு 10 நிமிடம் கசித்தோ அல்லது அப்பொழுஹே கூட குளிக்க வைக்கலாம்..எண்ணை தேய்த்த உடலானதால் நல்ல வழுக்கும்..அதேகாட்டன் எண்ணைபடிந்த துணியாலேயே சுற்றிக் கொண்டு பாத்ரூமுக்கு எடுத்து செல்லவும் அல்லது அருகிலுள்ள பாத் டப்பில் குளிக்க எடுக்கவும்
இந்த பாட்டிக்களை கொண்டு ஊரில் பாரம்பரியம் என்று செய்யப்படும் முறையும் குழந்தை வீரிட்டு அழும் பார்க்கவே அது கொடுமையாக இருக்கும்..
அந்த வெத்திலைப் போட்ட வாயால் குழந்தையின் காதில் ஊதுவார்கள் சுத்தமாகுதாம்??!
காலைப் பிடித்துக் கொண்டு தலைகீழாக குழந்தையை குலுக்குவார்கள்..நல்ல வளருமாம்??
இன்றைய இளம் தாய்மார்கள் கூட அப்படியெல்லாம் மசாஜ் செய்வதைக் கண்டு ஆஹா என் புள்ளை எப்படி வளரும் பாருங்க என்று பெருமையாக நின்று ரசிப்பதைக் கண்டுள்ளேன்.(அறியாமை)..அதனால் தயவு செய்து கூடுமானவரை குழந்தையின் எல்லா காரியங்களையும் அம்மாக்களே கற்றுக் கொண்டு செய்ய பழகுங்கள்..

தளிகா எவ்லோ டிடலா கொடுத்து இருக்கே உன் பொண்ணு அதுவரை சும்மாவா இருந்தா?ஆச்சரியம்தான்...அனைத்தும் அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆம்..இப்ப இல்லையே இது 1 வருஷம் முன்பு..20 நிமிஷம் எல்லாம் பொறுமைய இருப்பா..முன்னாடி ஜிம் வச்சு கொடுத்துடுவேன்
பார்கத் தான் நீட்டி முழுங்கியிருக்கேன் ஆனால் அதில் பெரிசா ஒன்னுமில்ல

நான் சொல்வதை கேட்டு யாரும் என் மேல் கோப படகூடாது.உங்களுக்கு நிறையா பொருமை இருந்தாலே குழந்தை எல்லாத்திலும் முதலாவதாக வரும்.குழந்தைங்க கிட்ட நம்ம எவவளவு நேரம் செலவிடரோமோ பிள்ளைங்க அவ்வளவு ஸ்மார்ட்டா வருவாங்க.
1.காலையில் 1முதல் 2 வயது இருக்கிற குழந்தைகளை 8 மணிக்கு மேல் தூங்க விடாதீங்க.
2.எழுந்ததும் பிரஷ் பண்ண மாட்டேங்குதா நீங்களும் இன்னொரு முறை பிரஷ் பண்ணுங்க.சும்மா பிரஷ் பண்ணாத அம்மா போல நீயும் விளக்கனும்.என்று செல்லமா கொஞ்சி கெஞ்சி பொறுமையா செய்து காட்டினா அவங்களும் அதே போல் செய்வாங்க.இதே போல் தொடர்ந்து பத்து நாள் செய்தால் போதும் குழந்தைக்கு பல் பிரஷ் பண்ண தன்னால ஆசை வந்து விடும்.இதுல முக்கியமான விஷயம் என்னன்னா நாம் கோப படகூடாது,திட்ட கூடாது.முதலில் அவங்க செய்யறத ஊக்குவித்து பிறகு தவறுகளை பொறுமையா சுட்டி காட்டினோம் என்றால் அவங்க எளிதில் புரிந்து கொள்ளுவாங்க.
இது மாதிரி பிரஷ் பண்ண பழ்க்கினால் ஆரம்பத்தில் அரை மணிநேரம் கூட ஆகும்.பழக்கியாச்சுன்னா காலை டென்ச்ன் பாதி குறைந்த மாதிரி.
3.குளிக்கும் போது உங்க குழந்தை முகத்துக்கு சோப் போட மாட்டேங்குதா?நீங்க கண்களை மூடிகிட்டு உங்க முகத்துக்கு சோப் போடுங்க எக்காரணத்தை கொண்டு கண்ணை திறாக்காதீங்க.அம்மா கண்னை திறக்குல பாரு அதுனால அம்மாவுக்கு கண்ணு எரியல.நீயும் திறக்காத இருந்தா உனக்கு கண் எரியாதுன்னு பொறுமையா சொல்லி புரிய வைக்கனும்.
குழந்தங்களுக்கு இருக்கிறது பயம்.அம்மா செயறேன் நீயும் செய்து பாரு ஒன்னும் செய்யாதுன்னு நாம் அவங்களை ஊக்க படுத்தனும்.
குழந்தை எல்லாத்தையும் கத்துக்க நமக்கு பொறுமை வேண்டும் கத்து கொடுக்கா.

உங்கள் அனைவருக்கும் பொறுமையிறுந்தா மீதியை தொடர 2 நாள் வெயிட் பண்ணுங்க.வீக் எண்ட் அதனால் தான் 2 நாள் கேக்கரேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்