குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)

ரம்பா உங்க குழந்தைக்கு 10 மாஹம்தான் ஆகிறது நீங்க கெட்டி ஆகாரம் கொடுகின்றீர்கள்தானே?பருப்பு சாதம்,ஆப்பிள் அவியல்,ஆரஞ் ஜூஸ்,கேப்பை,இட்லி இதெல்லாம் கொடுங்க பிறகு வித்தியாசத்தை பாருங்க :-)
மையம் இவ்லோதான் நியாபகம் இருக்கு நியாபகம் வந்தா சொல்றேன்..மற்றவர்களும் சொல்லுவாங்க...இந்த திரட்டில் உங்களுக்கு நல்ல தவல்களெல்லாம் இருக்கு போஇ பாருங்க இதன் முதல் திரட்டும் இருக்கு அதையும் பாருங்க தேவையான கேள்விக்கு பதில் கிடைக்கும்...

ஹாய் பிரியா பீடியா சூர் 2 வயதுக்கு மேல்தான் குடுக்கனும் அதிலேயே போட்டு இருக்கும் கவனிக்கலயா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா, இந்த குழந்தைகள் மையம் நல்ல அருமையாகப் போகிறது. இதில் எனக்குப் பிடித்த விஷயம், எல்லோரும் தத்தமது சொந்தக் கருத்துக்களை, அனுபவங்களைச் சொல்வதால் இவை வேறு எங்கும் பெறமுடியாது. ஒரு புத்தகமே ஆக்கலாம் போல் இருக்கிறது.

எனக்கு ஒரு நல்ல ஐடியா தோணுகிறது. அதாவது குழந்தைகளுக்கு அறுசுவை படிக்க கற்றுக் கொடுத்துவிட்டால் அவர்கள் இதைப்பார்த்துப் பார்த்து ஒழுங்காக நடப்பார்கள்... தாய்மார்... சொப்பிங் போகலாம்.... சீரியல் பார்க்கலாம்... சட் பண்ணலாம்.... நோ.... புறொபிளெம்.... எப்படி என் ஐடியா?..... அதிரா... எஸ்கேப்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாயில் ஏதாவது நல்லதா வந்துடபோகுது அதிரா அதுக்கு முன் ஓடிடுங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா, நீங்க கேட்டதால்...
இங்கேயும் ஒருதடவை பேஸ்ட் பண்ணுகிறேன். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாகவும் குளிர்மையாகவும் இருக்க, உணவு ஒருபக்கமிருக்க. என்னுடைய கருத்து நன்கு தூங்க வையுங்கள். குழந்தைகள் நித்திரையின்போதுதான் வளர்வார்கள். நன்கு உறங்கும் பிள்ளை நன்கு சாப்பிடும் பிள்ளையைக் காட்டிலும் குளிர்மையாக இருக்கும் என்றும் சொல்லலாம். உணவுகளைக் கொடுங்கள். நல்லா பால் கொடுங்கள். நன்கு உறங்க வைக்க வேண்டும். சில பிள்ளைகள் தனியே படுத்தால் டக்கென்று எழுந்துவிடுவார்கள். அதனால் உங்கள் வேலைகளை முடித்ததும். அவருடன் சேர்ந்து படுங்கள். நன்கு ஆழ்ந்து உறங்கத் தொடங்கியதும் எழுந்து கொள்ளலாம். இரவில் கூட சீக்கிரமே உறங்க வைத்துவிடுங்கள். எங்கள் வீட்டில் சிறியவர்களாக இருந்தபோது, 7 மணியுடன் லைற் , ரீவி எல்லாம் ஓவ் பண்ணி எல்லோரும் படுப்பதுபோல் போய்ப் படுத்துவிடுவோம். அப்போ அவர்களும் படுத்துவிடுவார்கள்.பின்னர் மெதுவாக நாங்கள் பூனைபோல் இறங்கி வருவோம். முடிந்தால் இரவில் சீக்கிரமே படுக்க வையுங்கள்.

நன்றி,

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எப்படி இருகீங்க,வாழ்த்துகள் ஆலொசனை மையம் பாகம்- 2 க்கு,உங்க பொன்னு எப்படி இருக்காங்க?எனக்கும் பொன்னுதான்.என் பொன்னுக்கு நெத்தி,தலை எல்லாம் வியர்குரு போடிருக்கு எதாவது ஆலொசனை சொல்லுங்கள் plllss ரொம்ப கஸ்டமா இருக்கு.

Fathima

வ அலௌக்கும்ஸ்ஸலாம் நஸ்ரின்...
உங்க பாராட்டிற்க்கு என் நன்றி...
நான் நல்லா இருக்கேன் நஸ்ரின் நீங்க நலமா?ஓஹ் பொண்ணா..நல்லது என்ன பெயர்..எங்கு இருக்கீங்க?உங்க
பொன்னு ஏஜ் தெரிய வில்லையே.? 1 க்குமேல் வயது இருக்கும் எனில் சந்தனக்கட்டையை எடுத்து உரசி சந்தனத்தை பூசினால் மிக விரைவில் குணம் கிடைக்கும்..இல்லை சுத்தமான ச பாகெட் சந்தனம் கிடைத்தால் மட்டுமே யூஸ் பண்ணுங்க...சந்தனத்துடன் பன்னீர் கலந்து விற்பார்கள் அதை வாங்கிடாதீங்க..தலைக்கு எண்ணைய் வைப்பது சிறிது நாள் வேண்டாம்..நல்லா ஷேம்பு போட்டு குளிப்பாட்டனும்..முடி அதிகம் இருப்பின் கொஞ்சம் குறைக்கவும்..தினம் தலைக்கு ஊற்றனும் இடை இடையே உங்க குழந்தைக்கு ஒத்துக் கொள்ளும் என்றால் மட்டும் மேலை கழுவலாம்...பேபி லோஷன் யூஸ் பண்ணலாம்..இதும் கேட்கும் அடிக்கடி போட்டால் பலன் தரும்..சின்ன பிள்ளைகளுக்கு நைசில் போடுவதை கண்டிப்பாக தவிற்கவும்...வேற்காதவாறு பார்த்துக்கங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இன்று கண்ணில் பட்ட செய்தி. கர்ப்பமாக இருக்கும்போது செல் ஃபோனை அதிகமாக பயன்படுத்தினால் பிற்காலத்தில் குழந்தைக்கு behaviour problems போல வர வாய்ப்பு உள்ளதாம். இது போன்று செல் ஃபோன் பயன்பாடுகளினால் ஏற்படும் ப்ரச்சனைகள் குறித்து இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளதால் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்? மேலும் ஏழு வயதிற்குள் உள்ள குழந்தைகளை செல்ஃபோனில் அடிக்கடி பேச அனுமதிக்கவே கூடாதாம்.

மர்ழியா,
நீ ஆரம்பித்த இந்த திரட்"குழந்தை வளர்ப்பு,முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகமும் சூப்பர்.எல்லாமே பயனுள்ள குறிப்புகள்.எல்லோரும் இன்னும் நிறைய எழுதுங்கள்.எத்தனை விதமான அனுபவங்கள்.அதிரா சொன்னது போல் ஒரு புத்தகமே போடலாம் போல.

என் பையனுக்கு(3 வயது), ஒரு வாரமாக மிகவும் Mild-ஆன இரும்மல். சாதரணமாக இரும்மல் என்றால் பாலில் சிறிது மஞ்சள் தூள், மிளகு பனை வெல்லம் கலந்து தருவேன்.கடந்த மாதம் அலர்ஜி வந்து பால் தர வேண்டாம் என்றார்கள். அதனால் நான் எதுவும் தரவில்லை. கடந்த மூன்று நாட்களாக இரவு வேளையில் இரும்மல் கொஞ்சம் அதிகமாக இருந்ததால், டாக்டரிடம் சென்றோம். டாக்டர் அது வீசிங் என்று கூறி nebulizar உபயோகப்படுத்த சொன்னாங்க. இரும்மல் கூட ரொம்ப பயப்படும்படி இல்லை, சாதரணமாக சளி இரும்மல் போல் தான் உள்ளது. இதைப் பற்றி தெரிந்தவர்கள் எதுவும் உதவி பண்ண முடியுமா? என்னால் எதுவும் யோசிக்க கூட முடியவில்லை, ஒரே கவலையாக உள்ளது.கண்களை மறைத்து அழுகை தான் வருகிறது. ப்ளீஸ் உதவுங்கள்.

வீசிங் என்றால் என்ன? அது இரும்மல் போல் தான் இருக்குமா? என் குழந்தைக்கு இந்த மூன்று வருட காலத்தில் இப்பொழுதுதான் ஒரு வாரமாக இரும்மல் இருக்கு, இதுவரை இவ்வாறு இருந்ததில்லை. இம்மாதிரி இனி வாராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அவனுக்கு பால் ஒவ்வாமை என்று நிறுத்த சொல்லியுள்ளார்கள். சோயா பாலில் மிளகு, மஞ்சள் / குங்குமப் பூ கலந்து தரலாமா?

திருமதி.மனோகரி அவர்களின் அலோசனைப் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

vidya , 1, pepper, milk with turmeric ok.

2, badam milk with safran

3, very 20 min hot water

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்