குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)

அப்ப இது வீசீங் இல்லையா? பால் தர வேண்டாம் என்று டாக்டர் சொன்னார், சோயா பாலிலேயே பாதம் போட்டு தரவா? என் கவலை எல்லாம் இது இரும்மலா?அல்லது வீசீங் அஸ்துமா போன்றதா? ஒன்றும் புரிய வில்லை. ஒரே கவலையாக உள்ளது.

ஹாய் வித்தியா,
மகனுக்கு இப்போ எப்படி இருக்கிறது? நீங்கள் பயப்பட வேண்டாம். வீசிங் என்பது... கன காரணங்களால் வரும் அதில் அஸ்மாவும் ஒன்று. அதாவது மூச்சுவிடக் கஸ்டப்படுவார்கள். மூச்சுக்குழாய் சுருங்க வீசிங் வரும். இதற்கு தூசு, அலர்ஜி... இப்படிக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் சின்ன வயதில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு இது வரலாம். அதற்கு, டாக்டர் நெபூலைசர் தந்தால் பயப்படாமல் பாவியுங்கள். பாவிக்க வேண்டும். பாவிக்காவிட்டால் மாறக் கஸ்டம். இழுபட்டுக்கொண்டு போகும். எனவே டாக்டர் சொன்னபடியே பாவியுங்கள். சின்ன வயதில் வருவது... நெபுலைசர் பாவிப்பதால், குறிப்பிட்ட வயதில் மாறிவிடும்.

தூசுக்குள் விட வேண்டாம். ஒவ்வொரு பிள்ளைக்கு அலர்ஜி ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதாவது சிலருக்கு தக்காழி, கொய்யா, அன்னாசி... சில வித துணிகள், தூசு, சில பூக்கள், புல் இவற்றாலும் வரலாம். அவற்றிலிருந்து மகனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் ஸ்பிறிங் தொடங்கினால் புல் வெட்டுவார்கள், அதில் விழையாடினாலும் அலர்ஜி வரும். இது ஒன்றும் பயப்படுவதற்கில்லை, டாக்டர் சொன்னபடி மருந்தைப் பாவியுங்கள். அவர் சீக்கிரமே நோர்மலாவார்.

ஒரு தமிழ் வைத்தியம் செய்யும் டாக்டர் எனக்குச் சொன்னார், சோயாவில் 100% அலர்ஜி(கிரந்தி குணம்) உள்ளதென்று. கவனித்தால் அது உண்மை. சிலருக்கு சோயாமீற் கறி சாப்பிட்டதும், கண்ணிரண்டும் கடிக்கும். எல்லோருக்கும் அல்ல. அதனால் சோயா பாலையும் பார்த்துக் கொடுங்கள். அத்துடன் ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்... சோயா, உண்பதால் ஆண்குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படலாம் என்று. அதேபோல் துளசி இலை.... ஈரல் சாப்பிட்டால் இருபாலருக்குமே மலட்டுத்தன்மை உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதென்று. அதனால் பார்த்துச் செய்யுங்கள்.

சிலபிள்ளைகளுக்கு ஒரேஞ்சும் அலர்ஜி, கார்பெட் அலர்ஜி... இப்படி நிறைய இருக்கிறது. நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்ன காரணத்தால் வருகிறதென்று.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹைய் ஹாஜா ஜஸ்மின்,

நலமா? எனக்கு உங்களை நன்கு நினைவிருக்கிறது. பழமொழிகள் நல்ல சுவாரஸ்யமாக போனதை அழகாக ஒரு ஓரத்தில் இருந்து ரசித்தீங்கள்... அவர்தானே நீங்க? ரசிகர்களை மறக்க முடியுமா? தமிழில் ரைப் பண்ணி எம்முடன் இணைந்து கலக்குங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. டாக்டர் கூறினப்படி நெபூலைசர் உபயோகப் படுத்துகிறேன். இரும்மல் கூட அவ்வளவாக இல்லை. அதனால் ஒரே சந்தேகம். இது சளினால அல்லது வேரெதுவுமா என்று. பசும் பாலுக்கு மாற்றாக வேரென்ன தருவது அதிரா? அலர்ஜி பரிசோதனையில் பால் என்று வந்ததால் மீண்டும் தருவதற்கு பயமாக உள்ளது. மூச்சுவிட என் பையன் கடவுள் அசிர்வாதத்தால் சிரமப்பட்டதில்லை. எதோ மனம் மிகவும் குழம்பி உள்ளது. கடவுள் தான்வழி காண்பிக்க வேண்டும்.

வித்யா பாதம் குழந்தைகளுக்கு நல்லது அது ஒன்றும் செய்யாது.
நல்ல மையா அரைத்து காய்ச்சி அதில் சாப்ரான் சேர்த்து கொடுங்கள்.
சாப்ரானை ஒரு ஸ்பூன் சூடானா பாலில் நல்ல கரக்கனும் பிறகு தான் பாலோடு சேர்த்து காய்ச்சனும்.
டெய்லி முன்று வேலை வெரும் கொதி வெண்ணீர் போட்டு ஆவி பிடிக்க வைய்யுங்கள்.
கவலை வேண்டாம் கண்டிப்பாக சரியாகும்.
அடிக்கடி மிளகு சேர்த்து சூப், (அ) மிளகு சேர்த்த குழம்பு அந்தமாதிரி செய்து கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

வித்யா நீங்கள் மிகவும் பயந்து போய் உள்ளீர்கள் என நினைக்கிறேன். அமெரிக்காவில் சீஸனல் அலர்ஜிஸ் மிகவும் common. நீங்கள் டாக்டர் சொன்னபடி செய்யவும். இருமல் கூட கம்மியாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளீர்கள். இதற்கு பயப்படவே தேவையில்லை. இங்கு ஸ்ப்ரிங் சீஸன் இப்போது இருப்பதால் புல்,பூக்களால் கூட இது வந்திருக்கலாம். உங்கள் குழந்தைக்கு முதன் முதலில் வருவதால் பயந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். ஆகவே கவலைப் ப்டடாதீர்கள். நாளடைவில் சரியாகிவிடும்.

நான் வெயிட் பன்றேன்.இன்னிக்கி அனுப்பலாம் என்று தான்.உங்ககிட்டே கேட்டேன்.

ஆமா வித்யா வீசிங் நம்ம ஊரில் என்னவோ நான் அந்தளவு கேட்டதில்லை..ஆனால் இங்கு வந்த பிறகு என் குடும்பத்தில் உள்ள 80% பிள்ளைகளுக்கு அந்த ப்ரச்சனை உண்டு...இதில் உங்கள் பிள்ளைக்கு அந்தளவு ப்ரச்சனை இல்லை என்றே தோன்றிகிறது..ஏனென்றால் என் கசின் பிள்ளைகளுக்கெல்லாம் 10 அடி ஓடினாவே இழுத்துக்குவாங்க..அதில் என் நெவியூ க்கு 15 வயசு இப்ப...சிறு வயதிலிருந்தே அவனுக்கு வீசிங் இருந்தது ஆனால் 13 ageக்கு பிறகு சுத்தமா அப்படி ஒரு ப்ரச்சனை இல்லை.
இதற்கு பயப்படவே வேண்டாம்...சோயா பாலே கொடுங்க.அதில் மால்ட்,சோகோலேட் எல்லாம் நல்ல இருக்கும்

வித்தியா,
3 வயதுப் பிள்ளைக்கு பால் கொடுக்காவிட்டால் மிகவும் கஸ்டம். ஏனெனில் அவர்கள் சாப்பிடுவதை விட பால்தானே குடிப்பார்கள். ஆனால் நான் நினைக்கிறேன். பசுப்பாலை நேரடியாகக் கொடுக்காமல் நிடொ பவுடர் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதுவும் பசுப்பாலில் இருந்துதான் செய்வது, ஆனால் பவுடர் என்பதால் ஒருவேளை அலர்ஜி இல்லாமலும் இருக்கலாம். முயற்சி செய்யுங்கள்.

இலங்கையில் குழந்தைகளுக்கு... ஓரளவு வழர்ந்தபின் தான் பசுப்பால் கொடுப்போம் அதுவரை பவுடர்தான். எனது வீட்டிலும் 2 வயதுவரைcow and gate powder பின்னர் nido, நான்கு வயதில்தான் பசுப்பால் தொடங்கியுள்ளோம். நிடோவிலும் அத்தனை சத்துக்களும் உள்ளது எந்தக் குறையுமில்லை. அல்லது தளிகா சொன்னதுபோல் கொஞ்சநாட்களுக்கு சோயா ஒத்துக்கொண்டால், நீங்கள் விரும்பினால் கொடுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜலீக்கா ரொம்ப நன்றி, குங்குமப்பூ வாங்கி வைத்துள்ளேன், சோயா பாலிலேயே போட்டு தருகிறேன். சூப்பும் அடிக்கடி தருகிறேன்.

உண்மை வின்னி ரொம்ப பயந்து விட்டேன். திரும்ப இந்தியாவே சென்றுவிடலாம் என்று கூட யோசித்தேன். டாக்டரும் சொன்னார்கள், இந்த சீசனில் அதுவும் இந்த வயதினருக்கு இதுப் போன்ற உபாதைகள் நிறைய வருகிறது என்று. இப்ப மனதுக்கு கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது.

நன்றி அதிரா, நல்ல யோசனை தான், எனக்கு இன்னும் கொஞ்சம் தைரியம் வந்த பிறகு, குழந்தைக்கும், இன்னும் சிறிது குணமான பிறகு தந்து பார்க்கிறேன்.
டாக்டர் இன்னும் ஆறு மாத காலங்களுக்கு பிறகு பால் தந்து பார்க்கலாம் என்றார்கள்.

உண்மை தான் தளிகா, இங்கு இந்த பிரச்சனை நிறைய இருக்கிறது. இப்போ carnation breakfast mix வாங்கி அதை தான் சோயா பாலுடன் கலந்து தருகிறேன்.அதில் மால்ட், சாக்கலேட், ஸ்ராபேரி, வென்னிலா அன்று எல்லா சுவைகளிலும் கிடைகிறது.

எல்லோரும் மனம் பதறி பதில் தந்து இருக்கீங்க. ரொம்ப நன்றிப்பா. மனசுக்கும் ஆதரவா இருக்கு.

மேலும் சில பதிவுகள்