குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)

ஹாய் ப்ரெண்ட்ஸ்,
www.indiaparenting.com
இந்த website மிகவும் நன்றாக இருக்கின்றது. நான் என்னுடய 13 மாத பாப்பவுக்கு இதில் இருத்து தான் முன்பு எல்லாம் பாடி காட்டுவேன். rhymes comes only with lyrics.

with love,
geethaachal

அன்புள்ள தோழிகளுக்கு,
சமீபத்தில் தான் நான் அறுசுவையில் உறுப்பினர் ஆனேன். எனது சந்தேகங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினீர்கள்.
போன மாதம் எனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் நான் எனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்ததில் எனது குழந்தையை சரியாக கவனிக்கவில்லை. அதோட விளைவு எட்டரை கிலோ இருந்தவன், இப்போது எட்டு கிலோ ஆயிட்டான். அவனுக்கு இப்போ பதினொரு மாதம் ஆகிறது. ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லா அம்மாவும் குழந்தை யோட வெயிட்-ஏ கூட்டுவாங்க. நான் குறைத்து விட்டேன். :(
இப்போ, சென்னை வந்தபிறகு தான், அவனது மெனுவில் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறேன்.
இந்த தளத்தில் உள்ள குறிப்புகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.

மேலும், ஏதாவது ஆலோசனைகள் இருந்தால், தயவு செய்து சொல்லுங்கள். அடுத்த மாதம் எனது மகனின் பிறந்த நாள் வருகிறது. அப்போ, அவனது எடை குறைந்த பட்சம் ஒன்பது கிலோவாக இருக்க வேண்டும் என்று எண்ணி முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். ( பிறந்த போது 3.1 kg இருந்தான். சோ, ஒரு வருடத்தில், மும்மடங்கு அதிகரித்து இருக்க வேண்டும் அல்லவா? )
உதவுங்கள் தோழிகளே!
மர்ழியா,
nestum கொடுப்பது பற்றிய உங்களது பதிலே பார்த்தேன். ஆனால், எனது சூழ்நிலை அப்படி.... போன மாதம் நிறைய நேரங்களில், அவனுக்கு nestum மட்டுமே கொடுத்தேன். பாதிப்பு- எடை குறைவு. உணர்ந்து கொண்டேன். தாமதமாக பதில் அளிக்கிறேன். kindly adjust.
இன்னொரு முக்கியமான சந்தேகம்.... பொதுவாக எனது கணவர் அலுவலகத்திற்கு சென்றவுடன், எனது மகனே பார்த்துகொள்வதே எனது வேலை. மற்ற வேலைகள் எல்லாம் எனது கணவர் திரும்பி வந்தவுடன் தான் செய்ய முடியும். washing clothes, grooming, washing vessels போன்ற சில விஷயங்களை, அவன் தூங்கும் நேரத்தில் செய்வேன். ஆனால், (ஒரு பதிவில் அதிரா சொன்னது போல்) நான் அவனுடன் தூங்கினால், அவனும் அதிக நேரம் தூங்குவான். இல்லை என்றால், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் தான்! எழுந்துவிடுவான். என்னோட சந்தேகம் என்னவென்றால், நீங்கள் எல்லோரும் (especially to thalika!) எப்படி சமாளிக்கிறீர்கள்? மற்ற வேலைகளை செய்து, நெட் -ம் நேரம் செலவிடுகிறீர்கள். (இப்போதெல்லாம், நான் மாலை சிற்றுண்டி, இரவு உணவு செய்வதே இல்லை. எல்லாம் எனது கணவர் வந்து, மகனே பார்த்துக்கொண்டால் தான்! பஜ்ஜி போட்டு எவ்வளோ நாளாச்சு!!! :(((((
தயவு செய்து ஏதாவது ட்ரிக் இருந்தால் சொல்லுங்கள்.
thalika! I am expecting reply from u. u r telling a lot of tips abt child care. wats ur ed.qualification? when i see ur suggestions abt the menu for babies, i am wondering. really u r a caring mother! ur child is very lucky! Like ur child, i want my son also to be a lucky person! So, please help me to be a best mother! Thanks in advance.

நட்புடன்,
சிஜா தோட்டா.

life is not wat u think! It is more than that!!!

நலமா?உங்க பதிவை பார்த்தேன்..அம்மா க்கு இப்ப எப்படி இருக்கு?எல்லாம் சரியாகி விட்டதா?ஆமாம்Sija Thota பிள்ளைகளுக்கு ஒன்னுனா நம்மால் தாங்க முடியதுதான் ஆனால் சடன்னா ஏறனும்னா எப்படிமா? அது ஆபத்தும் கூட உங்க குழந்த பிறந்த வெயிட்டுக்கு இப்ப கூடிதான் இருக்கனும் அது சரிதான் ஆனால் பிறந்தநாளைக்குல் ஏறிடனும்னா அது தப்புமா..சத்தான ஆகாரம் கொடுங்க அது போதும் வெயிட் தானா வரும் என் பொண்ணு ஒல்லிதான் நிறைய பேர் அது கொடு இது கொடு சத்தான ஆகாரம் கொடுன்னுலாம் ஒச்ல்லி இருக்காங்க நான் எதையும் பாலோ பண்ணல நேரா டாக்டர்ட போனேன் இவ ஹெல்த்தை பற்றி கேட்டேன் பிராப்லம் இல்லை நல்லா இருக்கான்னு சொன்னாங்க சோ அதோட விட்டுட்டேன் சத்தான ஆகாரம் கொடுப்பது வேறு,உடம்பு வரனும்னு அப்ப்டி பண்ண கூடாது..டாக்டரிடம் போகும் போது உங்க செல்லத்தின் உடம்பை பற்றி கேளுங்க வயது க்கு ஏற்று வெயிட் வளர்ச்சி இருக்கான்னு அது போதும்..அதை பாலோ பண்ணுங்க..ஓவ்வொருத்தருக்கும் ஒவ்வோரு வெயிட்,உடல் வாக்கு அது டாக்டருக்குதான் தெரியும்

குழப்பம் ஓரளவு தீர்ந்து இருக்கும்னு நினைக்கிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நன்றி. இப்படி ஒரு த்ரெட் ஆரம்பித்தற்கு.

என்னுடைய திருமண நாள் 03.07.2006.

(உங்கள் சேவை அருசுவைக்கு எப்பொதும் தேவை)

மர்ழியா!
நீங்கள் சொல்வது புரிகிறது. இப்போது சத்தான உணவு வகைகள் கொடுக்க ஆரம்பித்துள்ளேன். விரைவில் ஆரோக்கியத்தோடு எனது மகன் சரியான எடையும் அடைவான் என்று நம்புகிறேன்.
அம்மாவின் உடல்நிலை பரவாஇல்லை. ஆனால், மீண்டும் நான் ஊருக்கு செல்ல வேண்டியது மாதிரியான சூழ்நிலை தெரிகிறது. அவர் பக்கவாதத்தின் ஆரம்ப கட்ட தாக்குதலால் பாதிக்க பட்டுள்ளார். சரியான நேரத்தில் கவனித்து மருத்துவமனையில் சேர்த்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பித்தோம். கை மற்றும் காலில் பலம் கொஞ்சம் கொஞ்சமா வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், மனதளவில் மிகவும் பலவீனமா இருக்கிறார்.
பொதுவாக நமது அம்மாக்கள் எப்போதும் நம்முடனே இல்லாவிட்டாலும் கூட, ஏதேனும் அவசரம், பிரச்சனை என்றால் உதவிக்கு அம்மா இருக்கிறார் என்ர உணர்வே பெரிய பலம்!!!
வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் அம்மா பார்த்துக்கொள்வார். அவங்களுக்கே முடியவில்லை எனும்போது...........:( விரைவில் பூரண குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன். உங்களது அன்புக்கு நன்றி.
நட்புடன்,
சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

மர்ழியா!
நீங்கள் சொல்வது புரிகிறது. இப்போது சத்தான உணவு வகைகள் கொடுக்க ஆரம்பித்துள்ளேன். விரைவில் ஆரோக்கியத்தோடு எனது மகன் சரியான எடையும் அடைவான் என்று நம்புகிறேன்.
அம்மாவின் உடல்நிலை பரவாஇல்லை. ஆனால், மீண்டும் நான் ஊருக்கு செல்ல வேண்டியது மாதிரியான சூழ்நிலை தெரிகிறது. அவர் பக்கவாதத்தின் ஆரம்ப கட்ட தாக்குதலால் பாதிக்க பட்டுள்ளார். சரியான நேரத்தில் கவனித்து மருத்துவமனையில் சேர்த்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பித்தோம். கை மற்றும் காலில் பலம் கொஞ்சம் கொஞ்சமா வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், மனதளவில் மிகவும் பலவீனமா இருக்கிறார்.
பொதுவாக நமது அம்மாக்கள் எப்போதும் நம்முடனே இல்லாவிட்டாலும் கூட, ஏதேனும் அவசரம், பிரச்சனை என்றால் உதவிக்கு அம்மா இருக்கிறார் என்ர உணர்வே பெரிய பலம்!!!
வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் அம்மா பார்த்துக்கொள்வார். அவங்களுக்கே முடியவில்லை எனும்போது...........:( விரைவில் பூரண குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன். உங்களது அன்புக்கு நன்றி.
நட்புடன்,
சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

Hi, my name is also vidhya,
anyway i have seen lactofree milk
in milk section , which is particularly
for people having milk alergy.
My husband is having milk alergy,
here they say it is more for asians.
now he is using soya milk, u can try
lactofree milk bcoz its still cows milk.
some of my friends give goats milk,its very good for kids, but will take ages to put in practice(it will be bit smelly).

சிஜா ரொம்ப கழ்டமா இருக்கு உங்க பதிவு
முதலில் உங்க அம்ம இப்ப எப்படி இருக்கிறார்கள்.
நல்ல கவனிங்க, தாய் ரொம்ப முக்கியம் அதற்காக குழந்தைகவனிக்காம விட்டுட்டீங்களே?
பாவம் நீங்க தான் என்ன செய்வீர்கள்.
வேலை கொஞ்சம் அதிகமாக தான் இருந்திருக்கும்.
நெஸ்டம் குழந்தைகலுக்கு லூஸ் மோஷன் ஆனா குடிப்பது அது சத்தேல்லாம் ஒன்றும் கிடையாது அது ஒரு ஆகாரம்.
நீங்க டெய்லி முட்டை, சிக்கன் வெஜிடேபுள்ச், பாசி பருப்பு சேர்த்ஹு கிச்சிடி மதிரி செய்து கொடுங்கள்.
கீரை மசியல் செய்து சாத்தில் பிசந்ஹ்டு கொடுங்கள்,
இரண்டு மனி நேரத்திக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமா ஏதாவஹ்டு கொடுங்கள், கண்டிபா நீங்க நினக்கிற மாதிரி உங்க பையன் வருவான், என் குறிப்பில் நிறைய குழந்தைகளின் உணவு இருக்கு அவ்வளவா காரம் கூட கிடையாது பிடித்திருந்தால் செய்து கொடுங்கள்.
மெயினா வாரத்தில் முன்று தடவையாவது தக்காளி சூப், பாலக் கீரை சூப், சிக்கன் சூப் கொடுத்து விடுங்கல்.
சத்து மாவு பொடி வீட்டிலேயே அப்ப அப்ப தயாரித்து பலி காய்ச்சி கொடுங்கள்.
கவலை வெண்டாம்.
சில குழந்தைகள் நாம் எழுந்திருக்கும் போது பின்னாடியே துண்டி பிடித்து தொங்கி கொண்டே வருவார்கள்.
அவர்கலுக்கு தேவையான சாமான் கலை கொடுத்து கண்ணேதிரில் வைத்து கொண்டு வேலை செய்யுங்கள்.
நாம் செய்வது போல வே ஒரு பெரிய சட்டியும் ஒரு கரண்டியும் கொடுங்கள்,
கிண்டி கொண்டே இருப்பார்கள்.
அதாவது நம்ம மக்கள் திலகம் எம்,ஜி.ஆர் சொல்வாரே ஓட்டி ஓடி உழக்கனும் என்பது போல் குழந்தை வைத்திருப்பவர்கள் ஓடி கொண்டே இருக்கனுன்ம்.
சில குழந்தைகள் அப்படி உட்கார்ந்த் இடத்தை விட்டு நகர மாட்டார்கள்.
அந்த அம்மாமார்களுக்கு பிரசனை இல்லை, ஆனால் சில குழந்தைகள் தூக்கத்தை தவிர 24 மணி நேரமும் ஓட்டம் தான்
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா!
அன்புக்கு நன்றி. மிகவும் ஆறுதலாக இருக்கிறது. அம்மாவிற்கு இப்போது பரவாயில்லை.
உங்களது குறிப்புக்களை பார்த்து நான் குறிப்பெடுத்துக் கொண்டேன். சூப் வகைகள் மற்றும் பாலக் கீரை கடைசல். எனது மகனுக்கு செய்து கொடுக்கிறேன்.

மற்றுமொரு சந்தேகம்.. பொதுவாக எந்த மாதிரி உணவு வகைகளை எப்போது கொடுக்க வேண்டும்? உதாரணமாக..1. காலையில் எழுந்ததும்.. நாம் காபி குடிக்கும் சமயம்... குழந்தைக்கு என்ன கொடுப்பது? தாய்பால் தவிர, வேறு பால் இன்னும் கொடுக்க ஆரம்பிக்க வில்லை. ( டாக்டர் கொடுக்க கூடாது என்கிறார்.) காரட் சூப் அவனுக்கு விருப்பம் இல்லை. காரட் -இ வேக வைத்து சாதத்தில் கலந்து கொடுத்தால் சாப்பிடுவான். மேலும், நீங்கள் கூறியவாறு மற்ற சூப் வகைகளை செய்து கொடுத்து பார்க்கிறேன்.
2. இரவில், வேக வைத்து மசித்த உருளை கிழங்கு கொடுக்கலாமா?
நன்றி :)
சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

சிஜா கொஞ்ச நேரம் கழித்து பதில் போடுகிறேன், வேலை அதிக மா இருக்கு.
தளிக்கா நாளைக்கு பதில் கொடுப்பார்கள்.அதையும் பார்த்து கொள்ளுங்கள்.
மசித்த உருளை, ராகி சாப்ப்ட்டௌ அயிட்டம் இதேல்லாம் மாலை 4 நணிக்குள் முடித்து விடுங்கள்.

இரவு சேமியா கஞ்சி, பால் சாதம் அந்த மாதிரி கொடுக்கலாம், இல்லை இரவு நெஸ்டம் கூட போதும் தினமு நாலு வேலை பால் கொடுத்துவிடுங்கள்.
ஹார்லிக்ஸ் அந்தமாதிரி இரவு வெரும் பாலே போதும் வெரும் பால் குடிக்க மாட்டான் என்றால் கொஞ்சமா ஏதாவது கலந்து கொள்லுங்கள்.
உங்களுக்கு நல்ல புழ்டியா ஆகனும் என்றால் ஆப்பில் கேரட், உருளை இது மூன்றும் நல்ல வேக வைத்ஹ்டு மசித்து கொடுங்கள் ஒரு மாதத்தில் ரெசல்ட் சொல்லுங்க.
ஆப்பிலை வெந்ததும் தோலெடுத்து விடுங்கள், உள்லே உள்ள கொட்டைகளையும் எடுத்து விடுங்கள்.

//சத்து மாவு பொடி என் குறிப்பில் இருக்கு, அதை காய்ச்சி காலையில் கொடுங்கள்.//
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்