குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)

இன்று ரொம்ப பிஸி உங்க பதிவை பார்கவே முடியல தாமதமாக பதில் தந்ததுக்கு சாரி...உங்க அம்மா பதிவு மனசுக்கு கஸ்டமாக இருந்தது அவங்க கூடிய சீக்கிரம் சரியாக ஆண்டவனிடம் வெண்டுகிறேன்..ஜலீலக்கா சொன்னது போல புட் கோடுங்க அம்மாக்கு நல்ல படியா பார்த்துகங்க..

வேலை ரொம்ப இருக்கு அப்புறம் வாரேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சிஜா உங்களுக்கு பதிலளிக்க நான் பெரும்பாடு பட்டேன் முடியவில்லை.
உங்களது வார்த்தைகள் மிகவும் சங்கடமாகப் போனது..ஆம் அம்மா நமக்காக எதுவும் செய்வார் என்ற நம்பிக்கையே பெரும்பலம் தான்.சரி இதோட போச்சு எல்லாம் சரியாகி மீன்டும் பழியது போல இருப்பார் பாருங்கள்.
நானும் ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் நேரத்தை சமாளிக்க வேண்டியதாக இருக்கு...நான் செய்வது ஒன்று தான் அய்யோ எனக்காக நேரத்தை ஒதுக்க முடியலையே என்று கவலைப் படுவதில்லை.
இங்கு ஒரு முக்கியமான விஷயம் என் பொண்ணு பிறந்ததிலிருந்து இன்று வரை 5 நிமிடத்திற்க் மேல் தனியா தூங்கியதில்லை;-)...நான் செய்து பார்க்காத எதுவும் இல்லை...என் நிலை தேவாவுக்கு மட்டுமே புரியும்.
அவளுடம் படுத்தால் மணிகணக்கில் தூங்குவாள்..மெல்ல எழுந்து வந்தால் 5 நிமிடத்திற்குள் வந்து விடுவாள்..அதற்காக நானும் கூட படுத்து தூங்கினால் வேஸ்ட் தானே..அதனால் ஒரு கைய்யில் டைப்பிங் பன்ன பழகிக் கொண்டு அவளை மடியில் போட்டுக் கொண்டு தூங வைத்து உங்களிடம் அறுசுவையில் பேசுவேன்..அதைத் தவிற் வேறு எந்த வேலையும் ஒரு கைய்யால் செய்ய முடியாது.
மற்றபடி எல்லாத்துக்கும் ஒரு நேரம் உண்டு எனக்கு..காலை 8.30 மணிக்குள் அவளுக்கு உணவு கொடுத்து விடுவேன்..முதலில் நான் சாப்பிடுவேன் 8 மணிக்கு..அவர்கள் சாப்பிட்ட பின் நாம் சாப்பிட நினைத்தால் 10 மணி ஆகிவிடும்.
மதியம் 1 மணி இரவு 8 மணி என்பது அவளுக்கு உணவு ஊட்டும் சமயம்..
மற்ற வேலைகளை என் கனவர் வந்து தான் சமாளிக்க முடியும்..ஆனால் அவர் வந்த பின் நான் கிச்சனிலேயே கிடந்தால் அவருக்கு போர் ஆகிவிடும்..அதனால் அவர் வருவதற்கு 1 மணிநேரம் முன்பு கிச்சனுக்கு வெளியே வாசலில் அவளுக்கு ஒரு டப்பில் தண்ணீர் நிரப்பி அதில் உட்கார வைத்து அவள் ஆட்டம் போட போட நான் கடகடவென சமையல் வேலை அன்று இரவுக்கும் அடுத்த நாள் காலைக்குமான ரெடி பன்னி விடுவேன்..சமையலை முடித்ததும் வெளியே வந்து விடுவேன் பிறகு கனவர் வந்து உண்டு கொடுத்து அவருடன் 2 மணிநேரமாவது செலவிட்ட பின் அவருக்கென்று செய்ய வேண்டிய வெளைகளை அவர் செய்யும்பொழுது நான் திரும்ப ஓடி பாத்திரம் கழுவ,துணி துவைக்க போட்டு விடுவேன்..பிறகு திரும்ப மூவரும் சேர்ந்து விளையாடுவோம்..இரவு இருவரும் தூங்கியபின் என் மகளும் தூங்கியதும் எழுந்து வந்து வீடு கூட்டி(இரவு கூட்டுவது சரியல்ல என்பார்கள் ஆன்னால் அதை கண்டு கொள்வதைல்லை)துடைத்து விட்டு வந்து படுப்பேன்.
விடுமுறை நாட்களில் எனது மகளின் துணி என்னுடைய கனவருடைய வெளியே போகும்பொழுது போடும் துணிகளை அவர்கள் மதியம் தூங்கும் நேரத்தில் வந்து அயர்ன் பன்னுவேன்.
அவளுடைய உணவுகள் சும்மா நானாக எதையாவது மிக்ஸ் பன்னி ஒவ்வுன்னாக கண்டுபிடிப்பது தான்....1 மாதத்துக்கு முன் தான் ஒரு ரெசிபி கண்டு பிடித்தேன்..புட்டு செய்தால் அவளுக்கு தனியாக எதையவது சமைக்க வேண்டும்...தொண்டையில் மாட்டும் புறை ஏறும்..யோசித்தேன் உடனே மிக்சியில் ஒரு சுற்று ரவை போல் பொடிந்தது..அதில் சர்க்கரை நெய் கலந்து பால் பாலாக கொடுத்தேன்..அவளுக்கு ரொம்ப பிடித்தது..அது போல் அடிக்கடி கைய்யில் பட்டதெல்லாம் கொண்டு எதையாவது செய்து பார்ப்பேன்..பிரியானி சமைத்தால் அதிலிருந்து எலா பொருட்களை குக்கரில் போட்டு இருமடங்கு தண்ணீர் சேர்த்து விசில் விட்டு கொடுப்பேன்..அதுவும் அவளுக்கு பிடிக்கும்..அப்படி விதவிதமாக ஆனால் அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளாமல் எதையாவது செய்வேன்.
4 பர்னர் உள்ள அடுப்பு,ஆடோமேடிக் வாஷிங் மஷின்,இவை இருந்தால் ரொம்ப ஈசி
பிறகு சொல்ல மறந்த விஷயம் அரைக் கிலோ குழந்தைக்கு குறைந்து விட்டதென நீங்கள் குற்ற உணர்ச்சி கொள்ளாதீர்கள்.
மனுஷன் வெயிலுக்கு கறுப்பதும் வெளிநாட்டுக்கு வந்தால் வெளுப்பதும்,இளைப்பதும் குண்டாவதும் போன்ற மாற்றங்கள் நல்லது தானே..அதற்காக வருத்தப் படவே வேண்டாம்..சத்தானதாக அதே சமையம் ருசியாக சமைத்து கொடுங்கள்..சாப்பிடா விட்டால் தலையைப் புன்னாக்க வேண்டாம்;-)..இப்பொழுது அப்படி தான்..பிறகு வளர்ந்ததும் சாப்பிட பழகுவார்கள்..அதனால் நமது சந்தோஷத்தை நான் வீனடித்து கவலை கொள்ள வேண்டாம்.
இன்னொமொன்று நல்ல உணவு சாப்பிடக் கொடுங்கள் அதற்காக சிலர் சதா 24 மணிநேரமும் சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்...தினித்து தினித்து பின்னாளில் குழந்தைகள் ஒரு தீனிப்பண்டாரமாக மாறியிருக்கும்..எதுவும் அளவாக இருக்க வேண்டும்.அளவாக சாப்பிடட்டும் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்..ரொம்ப கவலைப் படாதீர்கள்..ரொம்ப கெட்டவர்களாக இருக்கும் பெண்கள் கூட தன் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக தான் இருப்பார்கள்.
சத்து மாவு காய்ச்சி கொடுங்கள்,முட்டை கொடுங்கள்,சாதம் பருப்பு,இறால் குழம்பு,சிக்கன்.,ராகி,ஓட்ஸ், ஸ்வீட் அப்படி எது விரும்புகிறதோ அதைக் கொடுத்து நல்ல பல்லை விளக்கி விடுங்கள்.
நான் சொன்னதில் ஒன்றும் உங்களுக்கு வருத்தமில்லையே சிஜா.

நட்புடன் ஜலீலா, மர்ழியா மற்றும் தளிகா,
முகம் தெரியாவிட்டாலும், அன்பான வார்த்தைகளும், அக்கறையான விசாரிப்புகளும் உண்மையிலேயே மிகுந்த ஆறுதலை தருகிறது. நன்றி..... நான் யார் என்று உங்களுக்கு தெரியாது... நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. ஆனாலும், அன்பாக உதவுகிறீர்கள். உங்களை போன்றவர்களின் அன்பு, எனது அம்மாவை விரைவில் குணமடைய வைக்கும்.

திருமணத்திற்கு பிறகு.... படிப்படியா என்னோட நட்பு வட்டம் குறைந்துவிட்டது... ரொம்ப நெருங்கின தோழிகள் கூட.... அவரவர் வாழ்க்கையில் ரொம்ப பிசியாக இருப்பதால்... முன்புபோல் பேசிக்கொள்ள நேரம் இருப்பதில்லை...
ஆனால், மிகவும் மனம் வருந்தி நிற்கும் சூழ்நிலையில்..... மிக மிக ஆறுதலாக பதில் தருகிறீர்கள்..... மனமார்ந்த நன்றிகள். ( வேற எதுவும் சொல்ல தெரியலே...)

நட்புடன் ஜலீலா,
உங்களோட பிசி டைம் ளையும், பதிலளித்துள்ளீர்கள். மிக்க நன்றி. சத்து மாவு குறிப்பு கூட நான் பார்த்து குறித்துக்கொண்டேன். சத்து மாவு தயார் செய்து காலையில் கொடுத்ததும் விட்டேன். மூன்று கரண்டி மாவு போட்டு காய்சினேன். அதில், பாதியளவு சாப்பிட்டான். ரொம்ப சந்தோஷம் ஆகிவிட்டது எனக்கு !!!!! :)

நட்புடன் தளிகா,
அன்புக்கு நன்றி.
நீங்கள் நேரத்தை மேனேஜ் செய்யும் விதம்.. ரொம்பவே பயன்படும் எனக்கு! நானும் எனது வேலைகளை சரியான திட்டமிட்டு செய்து முடிக்கிறேன்.

இப்போதான் நானும் கிச்சனில், அவனை விளையாட வைத்துக்கொண்டு, வேலைகளை பார்க்க ஆரம்பித்துள்ளேன். ஜலீலா சொன்னதுபோல், அவனக்கு ஒரு தட்டும் கரண்டியும் கொடுத்தேன். அவன் தட்ட தூர தள்ளிவிட்டுட்டு, கரண்டியே பக்கத்திலிருந்த குடதிற்குள் போட்டு விட்டான். அடுத்த ஐயிடம் கேட்டு என்கிட்டே வர்றான். ( என்னத்த பண்ண.... கொஞ்சம் நேரம் எடுக்கும்....:) )

பட், நீங்க சொன்னது ரொம்பவே சரி... முன்பெல்லாம், நானும் மாலையில் எனது கணவர் வரும்வரை காத்திருப்பேன். வந்த பிறகு குக்கிங் ஆரம்பித்து, அப்புறம் குழந்தையை தூங்க வைத்து நாங்க சாப்பிடவே லேட் நைட் ஆயிடும்.... இப்போ அப்பிடியில்லை.... அவனோடு சேர்ந்து சாப்பிடுகிறோம். அப்படியே விளையடிக்கிடே... டின்னேர் முடிஞ்சிடும்.
இன்னொரு விஷயமும் நல்ல புரிஞ்சிக்கிட்டேன் உங்க பதிலில் இருந்து... பொறுப்பான அம்மா ங்கிறது.... குழந்தை மட்டும் பாத்துக்கிறது இல்ல.... வீட்ட மற்றும் கணவரையும் கூட பார்த்துக்கணும்!!!
ரொம்ப ரொம்ப நன்றி.... ( நீங்கள் நல்ல விஷயாங்களைத் தானே சொல்லியிருக்கிறீர்கள்.. அதுக்கு எதுக்கு வருத்த படனும்? hey, just kidding! the matter u told n the way u told....very very useful n satisfied. nothing hurting!
நட்புடன்,
சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

சிஜா சத்து மாவு காய்ச்சியது குடித்தான் என்றீர்கள் ரொம்ப சந்தோஷம் .
ரொம்பவும் கொடுக்கவேன்டாம் அப்பரம் வெருத்து விடும், கொஞ்சகொஞ்சமா கட்டிதட்டாமால் நல்ல ஸ்ப்மூத்தாக இருக்கனும்..

அப்பரம் கொஞ்சமா கூட்டி கொடுங்கள்.

நான் என் பெரிய பையனை ஊரில் சாப்பாடு ஆக்கும் பெரிய 5 படி தேக் ஷா இருக்கும் அதில் உட்கார வைத்து விடுவேன் அத பிடித்து கொண்டு நிற்பான்.

அடுத்து ரூமில் வேலை செய்யும் போது ஒரு பெரிய பெரம்பு கூடை இருக்கும் அதில் உட்கார வைத்து விடுவேன், சில குழந்தைகளுக்கு நம்மை பார்த்து கொண்டு இருந்த்தாலே பேசாமல் இருப்பார்கள்.
அதோடு நல்ல மியுஸிக்கும் போட்டு விடனும்.

கை குழந்தை வைத்திருப்பவர்கலுக்கு, ஒரு வயது குழந்தைகல் வைத்திருப்பவரகள் எல்லாம் வழி மேல் விழிவைத்து கணவருக்காக காத்து கொண்டு இருந்தால் முடியாது.
நம்ம முதல் சாப்பிட்டனும் அப்பரம் கட கடன்னு வேலை பார்க்கனும்.

//இல்லை என்றால் பசி மயக்கத்தில் எரிச்சல் கோபம், தலை வலி எல்லாம் வரும்.//

நான் இன்றைக்கும் நான் முதல் சாப்பிட்டு விடுவேன் சும்ம ஒரு குருவி கொரிக்கிற மதிரி முன் பசி ஆறுவது அப்பரம் எல்லாம் முடித்து விட்டு ஒரு பிடி சாப்பீட்டு கொள்லலாம்.
ஜலீலா

Jaleelakamal

your great . thankyou for your advice

alhamdhulillah

your great . thankyou for your advice

alhamdhulillah

உங்க தலைப்பு பார்த்து இன்னும் சிரிப்பு அடங்கலை.........ஹா....ஹா...ஹீ..ஹீ.....

உங்க தலைப்பு பார்த்து இன்னும் சிரிப்பு அடங்கலை.........ஹா....ஹா...ஹீ..ஹீ.....

என்ன கே ஆர்
பேல் பூரி சாப்பிட்டச்சா தலைப்ப பார்த்து யார சொல்றீங்க

Jaleelakamal

உங்க தலைப்பு பார்த்து தான்.
அக்கா,இந்த திரட்ல இப்படி பேசினால் மர்ழி அடிக்க வருவா,சோ ஜூட் விட்டுக்கிரேன்..பேல் பூரிக்கு டயம் நஹீ.ஆனால் சீக்கிரமே செய்னும்

மேலும் சில பதிவுகள்