குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)

ஹஹஹா ஆமா ஜலீலக்கா எனக்கும் சிரிப்பு;-D...ஜலீலக்கா என் பொண்ணுக்கு அதிரா சொன்னது போல் ஒரு பாத்திரத்தில் தண்ணி நிரைத்து ஸ்பூன் க்லாஸ் எல்லாம் கொடுத்தால் 2 நிமிஷம் கூட இல்லை தண்ணியை அப்படியே கவிழ்த்து விட்டு இன்னும் வேற தண்ணி நிரைச்சு தர சொல்லி கத்தரா..இவளுக்கு நான் கூட இருந்தா மட்டும் பத்தாது கூட விதவிதமா வேனும்.அதனால் இப்பலாம் டப்பில் தண்ணி நிரைத்து உட்கார வச்சுடுவேன்...பிறகு சுத்தியுள்ள தண்ணியை தொடச்சுக்கலாம்..மத்தபடி கைய்யில் எதைக் கொடுத்தாலும் தூக்கி எரிஞ்சுட்டு உள்ள வந்து அட்டஹாசம் பன்னுவா.சிஜா பைய்யனும் அதே கேஸ் தான் போலிருக்கு
சமைக்கும்பொழுது சூடான பாத்திரத்தை பிடிப்பதிலேயே குறியாய் இருப்பாள்..ஐயர்ன் பன்னினால் ஐயர்ன் பாக்சிலேயே கண்ணாக இருக்கும்..போன வாரம் ஐயர்ன் போர்டை வச்சுட்டு ஐயர்ன் பாக்ஸ் எடுக்க போனேன் 1 நிமிஷம் கூட ஆகல அந்த போர்டை அப்படியே இழுத்து தொங்கி அதோட சேர்ந்து கீழ விழுதுட்டா.அதே சமயம் என் கசின் குழந்தையோ அவ இடுப்பில் தூக்கி வச்சாலும் சரி கீழே விட்டாலும் சரி அது பாட்டுக்கு எதையாவது ஒரு பொம்மை வச்சு விளையாடும் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்..சிஜா உங்க பைய்யனும் இப்டி தானா

தளிகா,
வயதிற்கேற்ப பிள்ளைகளிடம் மாறுதல் இருக்கும், 3 வயதை நெருங்கினால், கிச்சின் சிங்கில் ஒரு சின்ன கதிரை போட்டு, அதில் நிக்க விட்டு கொஞ்சமாக தண்ணியை திறந்துவிட்டு, அதனுள் நிறைய கப் போட்டு பிறஸ், சோப் எல்லாம் கொடுங்கள்... நிறைய நேரம் கழுவிக்கொண்டிருப்பார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எல்லாருக்கும் வணக்கம்!
என்னோட மகனும் அப்படித்தான்.. அவன் பண்றது எல்லாமே காமெடிதான்! ( சில நேரம் பொறுமையை ரொம்பவே சோதிப்பான்....அப்போஎல்லாம்... ஜெயா! நீ இப்போ அம்மா! டென்ஷன் ஆகா கூடாது... பொறுமை பொறுமை னு... எனக்கு நானே சமாதானம் சொல்லிக்குவேன்! )

இப்போ கிச்சன் குள்ள வந்தாலே குடம் கிட்ட தான் போறான். குத்த பிடிச்சு எழுந்து நின்னுகிட்டு.. உள்ள கை யா விட்டு விளையாட்டு தான்! அப்புறம்.. பக்கத்தில இருக்கிற.. காய்கறி ஸ்டாண்ட் -ஏ இருந்து ஒரு ஒரு கோவைக்காய எடுத்து குடதுக்குள்ள போட்டுட்டான்.... வீட்டு ல எந்த ரூம் ல அவன விட்டாலும், கொஞ்ச நேரம் போதும்.... " ஆதியோட வேலை யா னு ?" பாக்கறவங்க கேக்கணும்... அந்த மாதிரி அவனோட கைக்கு எட்டுற எல்லாத்தையும்... கீழை இழுத்து போட்டு... அக்கு வேற ஆணி வேற.... பிரிச்சு!!!! ( பையன் பெரிய அனலிஸ்ட்- ஆ வருவான் னு நான் மனச தேத்திக்கிட்டு.... அப்புறமா க்ளின் பண்ணுவேன்.

ஹப்பூ.... நம்ம வீட்டு செல்லங்கள் பண்ற லீலைகளை ஷேர் பண்ணிக்க தனிய ஒரு "த்ரட்" தான் ஆரம்பிக்கணும்! எனி வே... எல்லாமே அவங்களுக்கு புதுசு! கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்... ஆதனால், அத தொடதே.. இத எடுக்காதே னு... ரொம்ப அவங்கள டார்ச்சர் பண்ண குடாது.. இல்லையா? சோ, டேஞ்சரான விஷயங்கள் தவிர.. மத்த எத அவன் " " பண்ணினாலும்... நான் விட்டுடுவேன். அப்புறம்... அவனுக்கு சொல்லிக்கிட்டு.. எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு.. க்ளின் பண்ணுவேன்.
lets enjoy our baby!!
Sija thota.
life is not wat u think! It is more than that!!!

குழந்தைகள், நேசறி பற்றி கொஞ்சம்....கதைத்திருக்கிறோம் அதற்கு இங்கே போய்ப் பாருங்கள்....... மன்றம்---அரட்டை----please help me friends...

நஸ்றீன் பாத்திமாவினுடைய தலைப்பு.... பொறுமையாக வாசித்துக்கொண்டு போங்கள் கீழே நிறைய விஷயம் இருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்கள் சொன்ன பதிவை நான் தேடிப்பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை அதிரா. எங்கே என்று சற்று தெளிவு படுத்தவும்.

மன்னிக்கவும் சாரதா,
இதில் இருக்கிறது.... மன்றம் -- உடல் ஆரோக்கியம் -- உடற்பயிற்சி - pleeeeeeeeese help me friends.....இப்போ பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்