சாக்லேட் பர்பி(கோக்கோ)

தேதி: May 8, 2008

பரிமாறும் அளவு: 8

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோக்கோ பவுடர் - ஒரு தேக்கரண்டி
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு டின்
முந்திரி - ஒரு தேக்கரண்டி
சீனி - 2 தேக்கரண்டி


 

ஒரு பௌலில் பால் விட்டு பிறகு கோக்கோ பவுடர் போட்டு சீனியும் சேர்த்து முந்திரியை பச்சையாக தான் போடவும். (சின்ன சின்ன துண்டுகளாக்கியது)
நன்றாக மிக்ஸ் செய்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கிளற வேண்டும்.
கொஞ்சம் கெட்டியாக நுரைத்து வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக போடவும்.
விரைவில் செய்ய கூடியது டேஸ்ட் ரொம்ப நன்றாக இருக்கும்.


செமி ஹோம்மெய்ட் ஸ்வீட் இது எளிதில் செய்வது.
நிறைய நேரம் அடுப்பில் வைத்து கிளற தேவையில்லை. இதில் கண்டென்ஸ்ட் மில்க் சேர்ப்பதினால் சீனி குறைவாக சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

விஜி மேடம்
உங்க சாக்லேட் பர்பி செய்து பார்த்தேன்,எனக்கு கொஞ்சம் சரியாக வரவில்லை,நீங்க சொல்லிருந்தீங்க 10 நிமிடம் கிளரியப்பின் நுரைத்துவரும் என்றும் எனக்கு அப்படி வரவில்லை அதற்கு பதிலாக சட்டியில் ஒட்டாத பதம் போல் வந்தது சரி இந்த பதத்தில் எடுத்துவிடல்லாம் என்று எடுத்துவிட்டேன் இந்த பதம் சரியா அல்லது நுரைத்து வருமா எனக்கு இந்த ஸ்வீட் ரொம்ப நேரம் கெட்டியாக வில்லை அதனால் பிரிட்ஜில் வைத்து எடுத்தேன்.ஸ்வீட் கம் மாதிரி ஆயிடுச்சு, எந்த இடத்தில் நான் தப்பா செய்தேன் சொல்லுங்க மேடம். நான் நீங்க சொன்ன அளவில் பாதிதான் செய்தேன்.

தப்பு நடந்தது வந்து ஒட்டாத பதத்தில் தான். அதாவது நுரைக்க தொடங்கும் போது அடுப்பை அனத்து விட்டு அந்த இடத்தில் இருந்து மாற்றி வைக்க வேண்டும் ஏன் என்றால் அந்த சூட்டில் கூட சில சமயம் முறுகிவிட வாய்ப்புகள் அதிகம், ஆனால் கண்டிப்பா கம் மாதிரி ஆக வாய்ப்பே இல்லை நிங்க முன்னாடியே எடுத்துட்டிங்க கவி. அடுத்த தடவை இந்த பதத்தில் செய்யுங்க கண்டிப்பா நல்லா வரும்.

விஜி மேடம்
ஒட்டாத பதம் வந்தப்பிறகு நுரைத்துவருமா?

ஆமாம் கவி

விஜி இன்னொரு முறை செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். அப்புறம் நான் கவி.எஸ்.

Hi Viji,
I tried this recipe today and it came out very well. My daughter liked it a lot.

Thanks.

Bindu Vinod

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)