ஹாய் பிரண்ஸ் ! சினிமா

அறுசுவை தோழிகளுக்கு என் மாலை வணக்கம்!
ஹாய் பிரண்ஸ் !
எப்படியிருகிங்க, நல்லயிருங்களா?

இன்ரஸ்டிங்கனா ஒரு கேள்விங்க பதில் சொல்லுவிங்களா!

சமீபகால சினிமாவான
சிவாஜி,ப்ருத்தி வீரன்,பில்லா,கல்லூரி,யாரடிநீமோகினி.
அஞ்சாதே,அறைஎண்305 ல் கடவுள்,சந்தோஷ் சுப்பிரமணியம், சத்தம்போடதே,வேல்.
காளை,சாதுமிரண்ட, பீமா,பழனி,நேப்பாளி.
வேல், தோழா, குருவி,மிருகம்,அழகியதமிழ்....................................
இன்னும் சொல்லிக்கிட்டெயிருக்கலாம் சினிமா பட்டியலைய் ,அதுசரி நான் எழுதி நினைச்சதே மற்ந்துட்டென் போங்க

உங்களுக்கு பிடிச்சசினிமா எது?ஏன் அந்த சினிமா புடிசிருக்கு அந்த மனதை ஈர்த்த சினிமாவை பத்திசொல்லுங்க
லேட்டஸ்டா வரபோர தசாவதாரம் பத்தியும் சொல்லுங்க

அதுமட்டுமில்ல,நீங்க யாரோட ரசிகைனும, சொல்லனும் அவ்ங்க படத்தில முடிச்ச சீனும் சொல்லுங்க

naturebeuaty

என்னை சேர்த்துக்கொள்வீங்களான்னு தெரியலை இருந்தாலும் நானும் எழுதுகிறேன். எனக்கு பிடித்த படங்கள்
எதிர்நீச்சல்,
பாமா விஜயம்,
நீர்க்குமிழி,
சவாலே சமாளி
ஊட்டி வரை உறவு,
குலமா குணமா,
நூற்றுக்கு நூறு,
வெண்ணிற ஆடை,
மூன்றாம் பிறை,
சர்வர் சுந்தரம்,
புதிய பறவை
அவ்வளவுதான் எனக்கு பிடித்த படங்கள்
லேட்டஸ்ட் ( ?) படம் என்றால் , ஆஹா ( விஜயகுமார், ஸ்ரீவித்யா, ரகுவரன் மற்றும் பேர் தெரியாதவர்கள் நடித்தது.)
மற்றபடி நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் எல்லாம் நான் பார்க்கவில்லையே....

நீங்க சொல்லி இருக்கிற படங்களில் நிறைய படங்கள் எனக்கும் பிடிக்கும். பாமா விஜயம், எதிர் நீச்சல், மூன்றாம் பிறை, சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, நூற்றுக்கு நூறு அது மட்டுமல்லாமல் தில்லானா மோகானாம்பாள், காதலிக்க நேரமில்லை, இரு கோடுகள், வசந்த மாளிகை இதே போல நிறைய படம் எனக்கு பிடிக்கும். மேடம் இப்ப இருக்கிற ட்ரண்ட்லயும் மொழி, அரை எண் 305 ல் கடவுள் இதை போன்ற நல்ல படங்களும் இருக்கு. உங்களுக்கு பிடிக்கும்

இதில் நான் நிறைய படங்கள் பார்க்கவில்லை, பார்த்தவரை சிவாஜி அது சும்மா அதிரும் படம் சங்கர் என்றாலே ஏதோ ஒரு information கூட பிரமாண்டம் இருக்கும். மணிரத்னம், ரவிகுமார் entertaining இருக்கும்,இன்னும் பல டைரக்டர்ஸ் நல்லா படம் பண்றாங்க அடுத்து ராதா மோகன் a very good director, அடுத்து அஞ்சாதே படத்தோட டைரக்டர் மிஷ்கின் அவரோட இரண்டு படம் தான் வந்திருக்கு இரண்டுமே ரொம்ப எதார்த்தமா இருந்துச்சு அவர் பாடல்கள் எடுக்கும் விதம் நல்லா இருக்கும் எனக்கு பிடிக்கும். கல்லூரி ரொம்ப நல்லா இருந்துச்சு, பிரிவோம் சந்திப்போம் இதுல காமெடி அவ்வளவாக இல்லைனாலும் சொல்லி இருக்கிற விஷயம் நல்லா இருந்துச்சு ஒரு பெண்ணோட உணர்வு சம்தந்ப்பட்ட படம். இப்போ வந்திருக்கும் நிறைய புது டைரக்டர்களும் நல்ல entertaining படம் கொடுக்கறாங்க.

எனக்கும் உங்கள் லிஸ்டில் உள்ள படங்கள் பிடிக்கும். மற்றும்
எங்க வீட்டுப் பிள்ளை
சுமதி என் சுந்தரி
மைக்கேல் மதன காமராஜன்
அபூர்வ சகோதரர்கள்
பெரியார்
இந்தியன்
கேளடி கண்மணி
குழந்தையும் தெய்வமும்
அண்ணாமலை
படையப்பா
சந்தோஷ் சுப்பிரமணியம்
லிஸ்ட் வளரும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அஞ்சலி, நான் நல்ல பெர்பார்மென்ஸுக்கு ரசிகை. அதாவது எந்த நடிகராக இருந்தாலும் அவங்களுக்குன்னு மாஸ்டர்பீஸ் இருக்கும் இல்லையா. அதை கண்டிப்பாக மிஸ் பண்ணமாட்டேன். அப்புறம் காமெடி, விரசமில்லாத காமெடி பிடிக்கும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அறுசுவை தோழிகளுக்கு என் காலைவணக்கம்!

ஹாய் மால்தி மேடம்,harigayathri,ஜெயந்தி மாமி
நீங்கள் குறிப்பிட்டுள்ள பழைய படங்கள் எல்லாம் சூப்பரோசூப்பர்படங்கள் !
இதை போன்ற நல்ல படங்களும் எனக்கும் ரொம்பரொம்ப பிடிக்கும்!
இந்த படவரிசையிலுள்ள நெஞ்சிலோர் ஆலயம் படத்தை மறந்து விட்டீர்களே !
டைரக்டர் மணிரத்னம்சொல்லும்போது ரோஜா,அலைபாயுதே செட்டுனு நினைவுக்குவருது.
டைரக்டர் ரவிகுமார் சேர,சோழ,பாண்டியன்.நட்டாமை,தெனாலிஇதுபோன்ற படங்கள்.
வந்திருக்கும் நிறைய புது டைரக்டர்களும் நல்ல படம் கொடுக்கறாங்க.

சரி என்ன யாரும் படத்தில முடிச்ச சீனும் சொல்லையை

சரி அந்தகாலத்து என்.எஸ்.கேயிலிருந்து இந்த காலத்து வடிவேல்,விவேக் காமெடி பிடிக்காதவ்ங்க யாருமேயிருக்க மாடிங்க நினைக்கிரேன்,அவங்கள பத்தியும் சொல்லுங்க,படத்தில முடிச்ச சீனும் சொல்லுங்க,

naturebeuaty

ஹாய் அஞ்சலி நலமா?இந்த திரட்டை இப்பதான் பார்த்தேன்..எனக்கு இன்னும் நினைவில் இருக்கும் மறக்க முடியா படங்க்கள்..ஆசை,பிரியமானனவளே,ஜெடில்மேன்,அஞ்சலி,சிங்கார வேலன் இப்படி சில படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு சம்பவத்தை நியாபக படுத்தும்....இப்ப லேஸ்டஸ்டா யாரடி நீ மோகினி பார்த்தேன் காமெடியா போச்சு கிலைம்க்ஸ் ரொம்ப சொதப்பல்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியாநூஹு,
நான் நலம்!அப்போ நீங்க?
நீங்க சொன்ன படங்க்கள் இன்னும்மறக்க முடியா படங்க்கள்.

யாரடி நீ மோகினி நானும் பார்த்தேன் காமெடியா அதுல அவ்வள்வா இல்லீங்க,கிலைம்க்ஸ் ரொம்ப ,ரொம்ப சொதப்பல்...
சந்தோஷ் சுப்பிரமணியம் பாருங்க ஸ்கீரின்பிளே சூப்பராயிருக்கு!
தெலுங்கு மொம்ருலு படத்தை காப்பி பண்ணி எடுத்தாலும் படம் சும்ம ந்ச்சுனுயிருக்கு கண்டிப்ப பாருங்க

naturebeuaty

இப்ப வந்து இருக்கே ஒரும் படம் 305 இல் கடவுள்னு அய்யோ செம போர் அதுக்கு இது எவ்லவோ தேவைலப்பா..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்