பைனாப்பிள் ரிங்

தேதி: May 8, 2008

பரிமாறும் அளவு: 7

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - ஒரு கப்
முட்டை - ஒன்று
பால் - 1/4 கப்
பைனாப்பிள் - ஒரு டின் (துண்டுகள்)
பைனாப்பிள் ஜுஸ்/எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
சீனி - ஒரு தேக்கரண்டி (மேல் தூவ)


 

ஒரு பானில் மைதா, முட்டை, பால், பைனாப்பிள் எசன்ஸ் அல்லது டின்னில் இருக்கும் அந்த ஜூஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். 20 நிமிடம் ஊற வைக்கவும்.
பைனாப்பிளை நன்றாக ஜூஸ் இல்லாமல் பிழிந்து எடுத்து ஒரு கிச்சன் டவலில் வைக்கவும்
நல்ல தண்ணீர் இல்லாமல் ஆன பிறகு கலந்து வைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கடைசியில் இந்த பொரித்த பைனாப்பிள் மீது சீனி தூவவும்.


இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் விரும்பி சாப்பிட கூடியது.
டின் பைனாப்பிள் இல்லை என்றால் ப்ரஷ் பைனாப்பிளில் கூட செய்யலாம். சின்ன சின்ன ஸ்லைஸ் ஆக கட் பண்ண வேண்டும். ஜூஸ் இல்லை என்றால் எசன்ஸ் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

என்ன விஜி!.....வித்தியாசமான ரெஸிப்பியாக இருக்கே? படிக்கும்போதே செய்துசெய்து பார்க்கவேண்டும் போலத்தோன்றுகிறது. இந்த மாதிரி வெரைட்டியான ரெஸிப்பீஸ்கள் நிறைய கொடுங்க. நீங்கள் சமையல் போட்டியில் பரிசு வாங்கியதாக சொன்னீர்களே அந்த ரெஸிப்பியும் கொடுங்க.

ஆமாம் மேம் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும். இது சொல்வதை விட சப்பிட்டா தான் தெரியும். எனக்கு ஒரு ரஷ்யன் தோழி அவங்க வீடல நான் சாப்பிட்டேன். அதற்க்கு பிறகு நான் என் தோழிகளுக்கு ஒருதடவை கெட் டு கெதரில் குடுத்தேன். எல்லாரும் ரொம்ப நன்றாக இருக்கு என்று என்னிடன் ரெசிப்பிஸ் வாங்கி செய்தார்கள்.
போட்டி ரெசிப்பிஸ் குடுக்கறேன். எனனுடைய சின்ன பெண் 23 மாதம் அது தூங்கும் போது தான் நான் சமைய்ல் செய்வேன். அடுத்த வாரத்தில் தான் நான் கொஞ்சம் ப்ரி கண்டிப்பா குடுக்கறேன். அது கூட ரொம்ப வித்தியாசமா இருக்கும். கண்டிப்பா எல்லாருக்கும் பிடித்து இருக்கும் 100% கியாரண்டி சொல்வேன். எல்லாரும் அதை சாப்பிட்டு இன்னும் வேண்டும் என்று சொன்னார்கள். முடிந்தால் செவ்வய்ன்று குடுக்க ட்ரை பன்றேன்.

நன்றி மேம் . இது செய்து பாருங்க.

மாலதி மேம் இதோ உங்களுக்காக எனக்கு இது 3- வது பரிசாக கிடைத்த ரெசிப்பி. 4 வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்து. இது வித்தியாசமா இருக்கா இல்லையா என்று உங்களை மாதிரி இருக்கிறவங்க சொன்ன எனக்கு ரொம்ப சந்தோஷம்.
முதல் பரிசு கிடைத்தை உங்களுக்காக படம் எடுத்தவுடன் அனுப்புகிறேன்.
இதில் என்ன ஒரு கண்டிஷன் என்றால் 3 பொருட்கள் எடுத்து அதை வைத்து ஏதாவது ஒரு நல்ல ரெசிப்பி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நான் இதை செய்தேன். மற்றவர்கள் எல்லாம் நான் வெஜ் எடுத்தார்கள். எனக்கு நான் வெஜ் தெரியாது. நான் ப்யூர் வெஜ். இதை நான் எடுத்து செய்த்தேன். எனக்கு 3- வது கிடைத்தில் சந்தோஷம். முதல் பரிசு சிக்கன் கசாடியாவுக்கு, 2 வது கிடைத்து சில்லி லோப்ச்டர்.3-வது தான் என்னுடையது.

ஹாய் விஜி
1.எப்படியிருக்கிறீங்க,என்னிடம் எந்த ஊர் என்று கேட்டீர்கள் அதன் பின் உங்களை காணவே முடியவில்லை.
2.பைனாப்பிள் ரிங்,கொய்யாப்பழ பச்சடி குறிப்பை பார்த்தேன். மிகவும் வித்தியசமாக இருந்தது.இந்த இரண்டும் முதலில் செய்யலாம் என்று உள்ளேன்,
3.அதேப்போல் கத்திரிகாய் சாகுவும் நன்றாகவே உள்ளது.ஆனால் இங்கு வழுதலங்காய் தான் கிடைக்கும்,அது இந்த ரெசிப்பிக்கு நன்றாக வருமா?

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எப்பிடி இருக்கு இப்ப உங்க ஊர். ஆமாம் அதற்க்கு பிறகு என்னால் அருசுவையில் நுழயய முடிய்ல்லை.
வழுதல்ங்காயில் நான் செய்தது கிடையாது. அதனால் தான் தெரியாது. இது கத்த்ரிக்காய் குழைய கூடாது. சைனிஸ் எக்ப்ளாண்ட் கிடைக்கும் ட்ரை பண்ணி பாருங்க.
டிவிம் ல எங்க இருக்கிங்க. நான் இஸ்ட்போர்ட் டெம்பிள் பக்கத்தில்.

விஜி!....பரிசு பெற்ற கொய்யாப்பழப்பச்சடி படித்துப்பார்த்தேன். நல்ல கற்பனையுடனும், ப்ரஸன்ஸ் ஆஃப் மைன்ட் - உடனும் செய்திருக்கிறீர்கள். எல்லோரும் நான்வெஜ் எடுத்து செய்தபோதிலும் நீங்க தைரியமாக சிம்பிளான ஐட்டங்களை வைத்து செய்துவிட்டீர்கள். இதற்கு பரிசு கொடுத்தவர்களையும் பாராட்டவேண்டும்.
சீட்லஸ் கொய்யா வாங்கி சர்க்கரை சேர்க்காமல் வெறும் உப்பு மட்டும் சேர்த்து செய்து பார்க்கவேண்டும். மற்ற இரண்டு ரெஸிப்பிக்காகவும் வெயிட் பண்ணுகிறோம். சர்க்கரை 2 கப் தேவை இருக்குமா விஜி!....
என்னை பொருத்தவரையில் ஒரு நல்ல குக் சமைக்கும் உணவு சத்தானதாக, குறைவான இன்கிரிடியன்டுடன், எளிதான செய்முறையுடன், குறைந்த அளவு எரிபொருளை உபயோகப்படுத்தி ருசியாக சமைக்கவேண்டும். உங்களுடைய ரெஸிப்பீஸ் எல்லாம் இந்த வகையை சேர்ந்ததாகத்தான் இருக்கிறது. கீப் இட் அப்!!...

ஹாய் விஜி

எப்படியிருக்கிறீங்க?வீட்டில எல்லாரும் எப்படியிருக்காங்க? especially உங்கள் பொண்ணு ,மற்றபடி நான் இன்று பைனாப்பிள் ரிங் செய்தேன் என் மகனுக்கு வேண்டி,மிகவும் அருமை,செய்வது ரொம்ப சிம்பிள்,வித்தியசமான சுவை,எங்கள் வீட்டு லிட்டில் மாஸ்டருக்கு மிகவும் பிடித்து விட்டது.thankyou for this receipe, next i am going to try கொய்யாப்பழப்பச்சடி,எங்கள் அம்மாபாட்டி வீடு திருவனந்தபுரத்தில் தம்பானூர் பக்கம் பணவிள ஜங்ஷன்னில் உள்ளது.
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

நன்றி. மஹா

என்னோட ப்ரென்ஸ் வந்தாங்கன்ண அதுவும் அவ்ங்க பசங்க கேட்கவே வேண்டாம் ஆண்டி பைனாப்பிள் ரிங் எப்போ தருவிங்க என்றே கேட்பார்கள். நான் முதலில் சொல்லி விடுவேன். இந்த தடவை வேற ட்ரை பண்ணுங்க என்று அவங்களுக்கு ஒரே குஷி மம்மி இந்த ஆண்டி வீட்ல் வரும் போதேல்லாம் ஏதோ புதியதா தருவாங்கா ரொம்ப டேஸ்டியா இருக்கும்.
எனக்கு ஒரே சந்தோஷம் நான் குழந்தைகளுக்காவே ஏதாவது கண்டிப்பா என்னால் முடிந்தது அதே மாதிரி என் ஹஸ் கூட அப்பிடிதான் குழந்தைகள் எங்க வீட்டுக்கு வந்தா அதுங்க சந்தோஷமா இருக்கனும் என்று பார்த்து எல்லாம் செய்வார். நான் அடுத்த ஒரு நல்ல ஸ்னாக் குடுக்கறேன் செய்து பாருங்க கண்டிப்ப குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும்.
எங்க வீடல் பர்த்டே என்றால் என் குழந்தயோட ப்ரெண்ஸ் ஒரே குஷி. ஏன் என்றால் நாங்க அந்த குழந்தைகளுக்கு குடுக்கற கிப்ட் என் ஹஸ் பார்த்து பார்த்து செலக்ட் செய்வார் நம்ம குடுத்ததை அவங்க அதை பார்த்து மகிழவேண்டும் என்று. அவங்க அங்கிளோட கிப்ட் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது,எல்லார் முன்னாடியும் அப்பவே பிரிப்பாங்க.

ஸாரி கொஞ்சம் நிற்ய்ய எழுதிட்டேன்.

நிங்க அந்த பைனாப்பிள் ரிங் படம் எடுதிருந்தால் அதை கூட இதில் போட்டிருக்கலாம்.நான் எப்ப்வோ செய்தது இனிமேல் செய்தால் படம் எடுத்தி குடுக்கலாம் என்று இருந்தேன். எனக்கு இப்ப தான் நிணவுக்கு வந்தது.அது தான் உடனே பதில் போட்டேன்.

நன்றி