தேதி: May 9, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தேங்காய் துருவல் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 20 என்னம்
முருங்கைக்காய் - ஒன்று
பூண்டு - 10 என்னம்
மிளகாய்ப்பொடி - 3 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
புளி - ஒரு கோலிகுண்டு அளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
முருங்கைக்காயை ஒரு அங்குல துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி அதையும் கீறி வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். பூண்டை தோலுரித்து 2 துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேங்காய் துருவலை அதில் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.
அதை எடுத்து வைத்துவிட்டு மிளகுப்பொடி, மல்லிப்பொடி இரண்டும் போட்டு அதையும் நன்றாக வறுக்கவும், கலர் மாறி வாசம் வரும்போது இறக்கி விடவும். கருகிவிடக்கூடாது கவனம் தேவை, வறுத்தவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். புளியை ஒரு கப் சுடுத்தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பூண்டு, சின்னவெங்காயம் இரண்டும் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் முருங்கைக்காய் போட்டு வதக்கி, அதில் அரைத்த விழுதையும் கலந்து 4 கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்தவுடன் புளியை கரைத்து வடிகட்டி கலவையில் சேர்த்து, உப்பு போட்டு குழம்பு வற்றி கெட்டியாக வரும் போது இறக்கி விடவும்.
தீயல் குழம்பு தயார், சாதத்துடன் பரிமாறவும். இந்த குழம்பு காரம் அதனால் காரம் இல்லாத பருப்பு கூட்டுக்கறி நல்ல இருக்கும்.
முருங்கைக்காய் தான் போட வேண்டும் என்று இல்லை, கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, கொண்டைக்கடலையும் வைத்து செய்யலாம். வெறும் வெங்காயம், பூண்டு வைத்தும் செய்யலாம். புளி குறைவாக சேர்த்துக் கொள்ளவும். அரைத்தல் நல்ல நைஸாக இருக்க வேண்டும்.
Comments
Dear Maha
I am Keerthana here. I tried your theyal receipe.. It came out well..It's tastes good...
And i am the new member of arusuvai.. First i gave comments to your receipe only..
Thank you so much...
ஹாய் மஹா
மஹா இன்னக்கி உங்க தீயல் குழம்பு தான் எங்க வீட்ல சூப்பர்ப் டேஸ்ட் no words to explain மஹா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு நன்றி. மணக்க மணக்க குழ்ம்புன்னு சொல்லுவோம்ல அப்படி இருந்துச்சு. ரொம்ப தாங்ஸ். மஹா யுவன் எப்படி இருக்கான்? என்ன செய்றான்?
Hai gayathri
ஹாய் காயத்திரி(காயு) எப்படியிருக்கிறீங்க.... சரி சரி என் மேல் கோபம் எல்லாம் போய்விட்டதா? ரொம்ப சந்தோஷம் நீங்க தீயல் குழம்பு செய்துப்பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு. நீங்கள் காரம் சப்பிடுவீங்களா?
யுவன் நன்றாக இருக்கிறான், அப்புறம் காயு நீங்க உங்கள் திருமண தேதியை குறிப்பிடுங்க உங்களுக்கு எத்தனை குழந்தை,நீங்க இருப்பது திருச்சியா ?,சென்னையா?
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
ur receipe is nice
Hi Mahalakshmi mam im new user in this arusuvai. I tried ur Theal receipe.Really its tastes superb.
haay
ஹாய் சாராபூபதி
எப்படியிருக்கிறீங்க?மிகவும் சந்தோஷம் நீங்கள் என்னுடைய ரெசிப்பி தீயலை செய்ய்து பார்த்து பதிவு அனுப்பியதற்க்கு.இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன் நீண்ட இடைவெளிகழித்து பதில் அளித்ததற்க்கு வருந்துகிறேன்.நீங்க எங்கே இருக்கிறீங்க விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.........................
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Hai
Hai Mahalakshmi mam im in australia.Neenga enga irukirenga?Enaku tamilla type panna theriyale.athan sethu type panniruken.All ur receipes r very simple.Thanks for ur reply.