தெரிந்து கொள்வோம்

ஹாய் ப்ரண்ட்ஸ், நம்ம அறுசுவையில நிறைய விஷயங்கள் பத்தி பாத்தாச்சு, சமையல், ஜோக், கணக்கு, ஆரோக்கியம் இப்படி பல பல. ஏன் சில பொது அறிவு விஷயங்களையும் தெரிந்துக் கொள்வோமா? உங்களுக்கு தெரிந்த பொது அறிவு விஷயங்களை இங்கே சொல்லலாமே. ஆனால் ப்ரண்ட்ஸ் ஒரு வேண்டுகோள் உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்து இருக்கும். அதை அப்படியே தொகுத்து போட்டு விட வேண்டாம் நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு அப்படி போட்டால் படிப்பவருக்கும் எளிதாக் இருக்கும் சுவாரஸ்மாகவும் இருக்கும். இப்படி இந்த தளத்தை பார்வை இருடுபவர்கள் அனைவரும் போட்டாலே அது ஒரு தொகுப்பாக இருக்கும் தொடங்கலாமா நம் அறிவு வேட்டையை?

அன்புள்ள கோதை! நலமா? இது நல்ல தலைப்பு. இந்த த்ரெட் ஆரம்பித்த நீங்கள் எதுவும் கொடுக்கலயா? :) சரி, பொறுமையாக கொடுங்கள். ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு மட்டும் ஒருவர் போடுவதைவிட அதிகபட்சம் 5 என்று வைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. இப்போது முதலில் ஒரு 5 விஷயங்களை நான் தருகிறேன்.

1) ஒரு கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டைகளையிடும்.

2) வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம் கேரளா, "இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம்" எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.

3) ஃபிரான்ஸில் உள்ள ஈஃபில் டவர் 7 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது.

4) மனித உடலில், நீர் மட்டுமே 70% சதவிகிதம் உள்ளது.

5) உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய விலங்கினமான சிறுத்தைப்புலிகள், மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் ஓட வல்லவை.

மீதி நினைவு வந்தவுடன், நேரம் கிடைக்கும்போது :) மற்றவர்களும் தெரிந்தவற்றை பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!

நான் அதை எல்லாம் படித்துவிட்டேன்.. புதுசா ஏதாவது சொல்லுங்கள்...

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சுல்தான் ஸார்! எதிலெல்லாம் ஆர்வம் உள்ளதோ அவற்றில் கலந்துக்கவேண்டியதுதானே... அதான் :-) வெளியில் புறப்படுகிறேன். பிறகு பேசுகிறேன்.

அடடே இதே போல் ஒரு த்ரெட் நான் கொஞ்சம் மாதங்களுக்கு முன் போட்டேன் அனேகமாக பேர் கூட இது தான் என நினைக்கிறேன்...மிக்க நன்றி திரும்ப இப்பகுதியை கொண்டு வந்ததற்கு..இப்பொழுது சரக்கு இல்லை.

ஏதோ பட்டம் கிடைக்கும் என்று காதில் கேட்டது... உடனே ஓடி வந்திட்டேன்.... ஆனால் எனக்கும் தளிகா போல் கைவசம்- தலைவசம் உடனடியாக எதுவும் இல்லை. கொண்டு வருகிறேன். அதுவரை பட்டம் பத்திரம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று தொலை காட்சியில் இச்செய்தியைப் பார்த்தேன். கேட்க ஆச்சரியமாக இருந்தது. அதனால் உங்கள் கவனத்திற்காக இதோ :

இன்று கொண்டாடப்படுவது நூறாவது அன்னையர் தினம். ஆம் அன்னையர் தினம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் முடிந்துவிட்டது.

இதை முதன்முதலில் ஆரம்பித்தவர் பெயர் அன்னா ஜார்விஸ். இதில் சிறப்பு என்னவென்றால் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அதனால் அவருக்கு குழந்தைகளும் இல்லை. அவருடைய தாயாரின் விருப்பப்படி அவர் இறந்த பிறகு முதன் முதலில் அன்னையர் தினம் கொண்டாடுவதை தொடங்கி வைத்தார்.

அ.சு.யில் இருக்கும் எல்லா அம்மாக்களுக்கும் என்னுடய்ய அம்மா தின வாழ்த்துகள்.
ஆமாம் நானும் கேள்வி பட்டேன்.

1. வாசனை பொருட்களின் அரசி ஏலக்காய்
2. இந்தியாவை போல எகிப்திலும் மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தும் பழக்கம் உள்ளது.
3. நம் கண்ணில் இருந்து வரும் கண்ணீரில் sodium chloride என்ற உப்பு உள்ளது

மற்றவை பிறகு

மேலும் சில பதிவுகள்