கூந்தள் ரோஸ்ட்(squid)

தேதி: May 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கூந்தள் மீன் - ஒரு கிலோ
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - 2 கொத்து
பொடித்த சோம்பு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் கூந்தள் மீனில் உப்பு கலந்து வைக்கவும். அப்பொழுதுதான் தோல் எளிதாக உரிந்து வரும். பிறகு தோலை லேசாக இழுத்தால் அப்படியே உரிந்து வரும்.
மேலுள்ள பகுதியை தோல் நீக்கி அப்படியே எடுக்கலாம். உள்ளில் இருந்து வரும் பகுதியில் கடைசி பகுதியை மட்டும் எடுக்கலாம். மீனின் உள் வருபவற்றை நீக்கி களைந்து விடலாம்.
பிறகு மீனை நன்கு கழுவி தண்ணீர் வடிய விடவும். (இல்லையென்றால் வேகும்பொழுது அதிக தண்ணீர் பெருகும்).
ஒரு குக்கரில் 3 தேக்கரண்டி எண்ணெய் காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பின் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோம்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி கூந்தள் மீனை சேர்க்கவும். பிறகு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
இப்பொழுது மீன் வெந்திருக்கும் அதிகம் தண்ணீர் காணப்படும். மூடியைத் திறந்து தண்ணீர் வற்றி ரோஸ்டாக வரும்வரை கொதிக்க விடவும்.
சுமார் 10 நிமிடம் வற்றவிட்டால் மிக சுவையான கூந்தள் ரோஸ்ட் தயார்.


இதனை வேறு விதத்திலும் செய்யலாம். வெங்காயம் முதல் எல்லா பொடிகளையும் குக்கரில் கணவாயுடன் சேர்த்து ஒரு விசில் விட்டு வற்றவைத்து கடைசியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கறிவேப்பிலை, 2 சின்ன வெங்காயம் தாளித்து ஊற்றலாம். குறைந்த எண்ணெயில் மிகவும் சுவையாக, சுலபமாகக் கூட சமைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா.. இந்த முறையில் செய்தால்.. மீன் வறுத்தால் வரும் வாசனையைவிட குறைவாக இருக்குமா... இதுவரை இந்த கடல் உணவு உண்டதில்லை.. செய்ததில்லை... இந்த வார இறுதியில் முயற்சி செய்கிறேன்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,
கேள்வியைப் பார்க்கவே சிரிப்பாக வருகிறது.(mudi) கூந்தலா எனக் கேட்பதுபோல் உள்ளது. நான் நினைக்கிறேன், இது ஒருவகை மீனின் பெயர். கணவாயை கணவாய் என்றுதானே சொல்வோம். அதன் கால்களை கூந்தல் எனவும் சொல்வார்கள்தான், ஆனால் மீன் என்று பாவிப்பதில்லைத்தானே. கடலுணவுகளின் சுவையும் அதிகம், செய்துதான் பாருங்களேன்.

மன்னிக்கவும் இலா... இப்பொழுதுதான் பார்த்தேன் squid என்றால் கணவாய் தான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளிகா, தாங்கள் மீனை சுத்தம் செய்யும் விதம் பற்றி விளக்கி கூறியுள்ளீர். ஆனால் எனக்கு(கொஞ்சம் tube light) புரிந்ததும், புரியாதது போலும் உள்ளது. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படங்களுடன் விளக்குகிறீர்களா? ப்ளீஸ்

எனக்கு இப்பவும் உறுதியா தெரியலை கணவா மீனா அது என்று..மலயாளத்தில் கூந்தள் என்போம்.ஆனால் இலா இதுக்கு முன் பலமுறை நான் சிக்கன் போல் இதை செய்ததுண்டு நல்ல இருக்கும்,,.
ஆனால் போன வாரம் என் ஆன்டி வீட்டுக்கு போனபொழுது அவங்க செய்திருந்தாங்க அவ்வளவு அருமையாக இருந்தது..அங்கு வந்திருந்த விருந்தினர்கள் எல்லாரும் ரொம்ப சாப்பிட்டு அது முதலில் தீந்து போச்சு..பிறகு ஆன்டியிடம் கேட்டு அடுத்த நாளே செய்து பார்த்தேன் அந்த முறை தான் இது...ஹ்ம்ம் மீனின் சுவை இருக்காது இது எதுவோ சிக்கன் போல இருக்கும்.
வித்யா என்னால் இயன்ற அளவு நானும் விளக்க பார்க்கிறேன் சரியா...கேட்கிரப்ப கொஞ்சம் புரியாதது போல இருந்தாலும் செய்ய ரொம்ப சுலபம்..நான் நேற்று 15 நிமிடத்தில் க்லீன் பன்னினேன்.
இதோ இந்த லின்கை பாருங்கள்

http://static.howstuffworks.com/gif/squid-14b.jpg
இதில் பார்த்தால் மீன் ரொம்ப பீகரமாகத் தெரியும் ஆனால் நேரில் பார்க்க அழகாக தான் இருக்கும்.
இப்பொழுது இந்த மீனை அப்படியே 1 ஸ்பூன் உப்பு பிரட்டி 20 நிமிடம் வைத்து விடுங்கள்
இப்பொழுது இதனை இரண்டு பாகமாக பிரிக்கலாம்..முதலில் மேல் கானும் போஸ்டீரியர் பாகம்...பின் அதன் கீழ் உள்ள ஃபனெலுக்கு கீழ் உள்ள எல்லாமும் .இதனையும்(funnel) எடுக்கலாம் சாப்பிடலாம்.
இப்பொழுது மேல் பாகத்தில் உள்ள தோல் மெல்லிய தோலாக கைய்யால் இழுக்க அழகாக உரிந்து வரும்.
இங்கே நாம் களையவேண்டிய பகுதி ஒன்று மட்டும்.ஃபோஸ்டீரியரினுள் வருபவை அதன் அழுக்கு அதனை உள் இருந்து இழுத்து களைந்து விடவும்.உள்ளே சின்ன கன்னாடி போன்ற முள் கிடைக்கும்.
(பண்டு அந்த கண்ணாடியை காயவைத்து கண்ணாடி பாத்திரங்களை கழுவுவார்களாம் பாத்திரம் பளபளக்குமாம்)
அவ்வளவு தான்.இப்பொழுது அந்த posterior பகுதியை சின்ன சின்ன வட்டமாகவோ அல்லது இரண்டாக மேலிருந்து கீழ் பிளந்து சுத்தமாக கழுகி வைத்து பார்த்தால் ஏதோ sweetபோல இருக்கும் பார்க்க.
பிறகு மேலே சொன்னது போல செய்யவும்.
இயன்றால் கண்டிப்பாக அட்மினிடம் செய்முறையை அனுப்புகிறேன்.
http://www.youtube.com/watch?v=VK6FLLjFZBo&feature=related

இங்கு இது சீன மார்க்கட்டில் கிடைக்கும், என்னுடன் பணிபுரியும் சீனர் சொன்னார், இம் மீனை குளீர் காலங்களில் உண்டால் குளிரால் வரும் உபாதைகள் குறையும் என்று, அது தான் சமைக்கலாம் என்று கேட்டேன். தங்களின் அறிவுறுத்தலின் படி சமைத்துப் பார்க்கிறேன். நண்டைப் போல் இதுவும் சிறிது சுஷ்ணமானது என்று நினைக்கிறேன். (சீனரின் கருத்துப்படி இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.)

ஆ..தளிகா நானும் இதை சமைத்து இருக்கேன்..ஆனா இப்படி இருக்கும்னு தெரியாதுப்பா கட் பண்ணியே வரும்...அட்மின் படஹதை [போடப்ப சாக் ஆகிட்டேன்..இதெயா சமைத்தோம்னு?இறைவன் படைப்பில் எல்லாம் அழகுதான் இருந்தாலும் இனி சமைக்க கூடாதுன்னே முடிவு எடுத்துட்டேன்...
ஆனால் இது சாதா மீன் போல் டேஸ்ட் இருக்காமல் டிப்ரந்தா இருக்கும்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தளிகா, சுவையான இந்த கணவாய்க்கறி - சற்று வித்தியாசமாக, நாங்கள் சமைக்கும் முறையில் செய்து, யாரும் சமைக்கலாம் பகுதிக்கு அனுப்பியுள்ளேன். கிட்டத்தட்ட இதே கறிதான். படம் வந்ததும் பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்