நர்சரிக்கு ஏற்ற உணவு

நர்சரி செல்லும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவு கொடுத்துடுவது?அவர்களே எடுத்து சாப்பிடும்படியாகவும் கையில் அதிகம் ஒட்டாமலும் இருக்க வேண்டும்.அனுபவசாலிகள் வந்து பதில் கொடுங்கப்பா........

னோ அனுபவம் சோ ஃபார்

ஆனால் மனோஹரி அவர்களின் பேன் கேக் கொடுத்தனுப்பலாம்

சப்பாத்தியை நல்ல மெல்லியதாக பரத்தி அதனுள் காய்கறி வதக்கியதோ,அல்லது நான் வெஜ்ஜோ வதக்கி மசாலா போல் செய்து உள்ளெ வைத்து சப்பத்தியை மூடி வெண்ணை தடவி சுட்டு கொடுக்கலாம்.ச்மெல் வராது

கோதுமை மாவை கரைத்து தோசை போல் சுட்டு அதன் மேல் நெய் ,சர்க்கரை தூவி மூடி அதை கொடுத்தனுப்பலாம்

ப்ரெடின் நடுவில் பேரீச்சம்பழத்தை வேக வைத்து இருபுறமும் சுட்டு கொடுத்தனுப்பலாம்

கொழுக்கட்டை போல் டிசைன் டிசைனாக செய்து கொடுத்தனுப்பலாம்

ப்ரெட் புட்டிங் செய்து கொடுத்தனுப்பலாம்

இட்லியில் பாலக் கூஸ்,கேரட் ஜூஸ்,பீட்ரூட் ஜூஸ் சேர்த்து மூன்று கலரில் இட்லி ஊற்றி அதற்கு தொட்டுக் கொள்ள தேன் அல்லது ஜாம் கொடுக்கலாம்

chinagrass கொதிக்க வைத்து ஜெல்லி போல் ஆக்கி அதனுடன் பழத்துன்டுகளை சேர்த்து செட் ஆக்கிய பின் கொடுத்தனுப்பலாம்

ரவையால் கேசரி செய்வோமே அது போல் பால் சேர்த்து ஆனால் அந்தளவுக்கு நெய்யும் ,இனிப்பும் அதிகம் சேர்க்காமல் வெட்டி வெட்டி கொடுத்தனுப்பலாம்

சப்பாத்தியிலேயே உள்ளே விதவிதமாக ஸ்டஃபிங் வைத்து கொடுத்தனுப்பலாம்

பாஸ்மதி அரிசியை குக்கரில் இட்டு 1/2 கப்ப்புக்கு 1 கப் தண்ணீர் சேர்த்து வெந்ததும் அதில் வெல்லம் ,தேங்காய் துருவல் கலந்து கொடுத்தனுப்பலாம்.

You can also try calzone using whole wheat flour & veg or non-veg stuffing... or try the traditional italian style calzone with greens,vegs, cheese etc...

ஹாய் ரேனுகா ரொம்ப அருமையான திரட்பா இது என் பொண்ணை அடுத்த மாதம் ஸ்கூலில் சேர்கலாம்னு இருக்கேன்..எனக்கு இது இப்ப் ரொம்ப யூஸ் பில்லா இருக்கும்...இதுல் உங்களுக்கு தெரிஞ்ச பதிவை போடுங்கப்பா அதிரா,ஜலீலாக்கா,விஜி இப்படி எல்லொரும் வாங்க இங்கே....அப்பப்ப மண்டையை போட்டு உடத்துக்க தேவை இல்லை இதை பார்த்தே மெனு எடுத்துப்பேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சீஸ் சேண்ட்விச் - இரண்டு ப்ரெட்டிற்கு நடுவில் பிடித்த சீஸை வைத்து டோஸ்ட் செய்து குடுக்கலாம்

ஒரு வட்டமான சப்பாத்தியின் நடுவில் ஏதேனும் காய்களையோ அல்லது ஸ்க்ராம்பிள் செய்த முட்டையும், துறுவிய சீஸ் சேர்க்க. அந்த கலவையை சப்பாத்தியின் நடுவில் வைத்து அரை வட்டமாக மூடி தோசைக்கல்லில் சிறிது நேரம் வாட்டி(சீஸ் உருகும்வரை) எடுக்கவும்.பிறகு அதை இரண்டாக கட் செய்து குடுக்கவும்.

பீனட் பட்டர் அன்ட் ஜெல்லி சாண்ட்விச் செய்து அப்படியோ அல்லது ஏதேனும் குக்கி கட்டர் இருந்தால் அந்த வடிவத்தில் கட் செய்தோ குடுக்கலாம்.

தொடரும்..

பூரி தேய்த்து ஒரு டப்பா மூடி வைத்து சின்ன சின்ன வட்டமாக வெட்டி பொரிக்கலாம். அதில் தளிகா இட்லிக்கு சொன்னா ஐடியாவைப் பின் பற்றி கேரட்/பீட் ரூட் ஜூஸ் சேர்த்து மாவு பிசைந்து கலர் புல்லாக பண்ணலாம்.

கொண்ட கடலை/ ராஜ்மா/ சோயா சிறிது உப்பிட்டு வேக வைத்து, அதனுடன் நல்ல மெலிதாக நீளமாக கேரட், குடை மிளகாய் மற்றும் மற்ற காய்கறி கலந்து தரலாம். குழந்தைக்குப் பிடித்தால் சிறிது மயனைஸ் கலக்கலாம். மற்ற காய்கறிகளை கலக்கும் போது காய்களை ஆவியில் வேக வைக்க வேண்டும். உதாரணமாக பீன்ஸ். இன்னும் இதனுடன் அவித்த நூடுல்ஸையும் கலக்கலாம். இன்னும் picky eaterக்கு இதனுடன் சிப்ஸ் பொடித்து தனியாக வைத்து சாப்பிடும் போது கலக்க சொல்லவும் (சிப்ஸ் மட்டும் சாபிட்டுவிட்டு வந்தால் என் மகன் போல் நான் பொருப்பல்ல).

பழங்களை நறுக்கி அதன் மேல், whipped cream/ fresh cream சேர்த்து தரலாம்.

அவித்த முட்டை, ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers குறிப்புக்கு
http://www.arusuvai.com/tamil/node/5638 அல்லது http://www.arusuvai.com/tamil/fish_fingers பார்க்கவும்.), கோழிக்கறி நக்கெட்ஸ் (Chicken nuggets குறிப்பிற்கு http://www.arusuvai.com/tamil/node/1322 பார்க்கவும்.), USசில் இது frozen கிடைக்கிறது. நல்ல தரமானதாக வாங்கி பொரித்து தரலாம்.

மலர வடித்த சாதம், ஒரமாக பாசி பருப்பு சேர்த்து செய்த பொரியல் (கேரட்/ பீன்ஸ்/ ப்ராக்கிலி) வைத்து தரலாம் - அதாவது சேர்த்துப் பிசையாமல் தனியாக வைத்து. சிறிய குழந்தைகளுக்கு வெறும் சாதம்/வெள்ளை சாதம் பிடிக்கும். என்னை நம்புங்கள். சிறிது வயறு இடங்கேடு ஆனால் இவ்வாறு தரலாம். சாதத்தில் சிறிது நெய்யும் கலக்கலாம்.

Crackers - சீஸ் அதனுடன் deli meat வைக்கலாம்.

வறுத்த முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, பேரீச்சை அதனுடம் சிறிது gems மாதிரி மிட்டாய் - அல்லது fruit loops/ ceerios மாதிரி காலை cereal கலந்து தரலாம்.

பனீர் விரும்பும் குழந்தைகளுக்கு சதுரமாக அரிந்த பனீர், காய்கறிகளை ஒரு tooth pick சொருகி டிக்கா மாதிரி செய்து தரலாம். இதேமுறையில் பழங்களையும் உதரணமாக ஒரு பச்சை திராட்சை, ஒரு பப்பாளி துண்டு , ஒரு கருப்பு திராட்சை, ஒரு ஆரஞ்சு என மாற்றி மாற்றி சொருகி தரலாம். ஆனால் குழந்தைகளுக்கு எப்படி சாப்பிடுவது என்று சொல்லி தரவும், வாயில் குத்திக் கொள்ளும் அபாயம் உண்டு.

நியாபகம் வரும் சமயம் இன்னும் சொல்கிறேன்.

தளிகா சப்பாத்தியில் என்று இல்லை சாததிலேயே காய்கள் தென்பட்டால் என் பையன் அப்படியே திப்புவான்,காய் இல்லாமல் தர சொல்லுவான்.இதில் நான் எப்படி ஸ்டஃபிங் செய்து அனுப்புவது.இனிப்பும் அதிகம் விரும்பமாட்டான்.டேட்ஸில் ஈரானியன் டேட்ஸை வேகவைத்தால் நன்றாக இருக்குமா?இந்த குழப்பங்களையேல்லாம் சற்று தீர்த்து வையுங்கள்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மர்ழியா நீங்களும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க,பிரேன்ஞ் டோஸ்ட்,சப்பாத்தி,இட்லி இது தான் 3 நாளா கொண்டு போறான்.கூடவெ திராட்சை,பிஸ்கட்,மாதுளைன்னு எதாவது கொடுத்துடுவேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வினி காய்கள் நறுக்கு நறுக்குன்னு இருக்க கூடாது,அரைத்து ஜாம் போல் தடவி தந்தாலும் பிடிப்பதில்லை.பினட் பட்டர் அண்ட் ஜெல்லி சான்விட்ச் எங்கு உள்ளது அதன் லின்க் தர முடியுமா?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேனுகா என்னுடைய தளத்தை பாருங்கள் அங்கு குழந்தைகலுக்கு என நிறைய கொடுத்துள்ளேன்.

பூரி சப்பாத்தி தான் எல்லகுழந்தைகளுக்கும் பிடிக்கும், அதை வித வித மா செய்து கொடுக்கலாம்.

கோதுமை அப்பம், பிரெட் சாண்ட் விச் அதுவும் பல வகை உண்டு (தக்காளி ஹல்வா, பீட்ரூட் ஹல்வா,கேரட் ஹல்வா) போன்றவை செய்து வைத்து இட்லி,தோசை, பிரெட்.பன்னில் தடவி கொடுக்கலாம் அந்த கலருக்கே சாப்பிடுவார்கள்.

இப்பவும் என் பசங்க டிபன் பாக்ஸில் இரண்டு முன்று பேர் சாப்பிடும் அளவுக்கு தான் வைப்பேன் எல்லாம் இன்னைக்கு என்னது இன்னைக்கு என்னது என்று ஆவலுடன் இருப்பார்கள்.

முந்தாநேற்று பூரி சென்னா , எல்லம் சாப்பிட்டு விட்டு ரொமப் சூப்பர்ன்னு சொன்னாங்களாம்.

பாருங்க ஒன்னு ஒன்னா டிரை பன்னுங்கள் பிடித்தால் செய்து கொடுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

வித்யா கொண்டைகடலை,ராஞ்மா,சோயா போன்றவற்றை என் பையன் திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறான்.வேர்கடலை வேகவைத்து கொடுத்தால் சாப்பிடுகிறான்.2 1/2 வயது குழுந்தைக்கு வேர்கடலை தரலாமா?காயே திங்காதவன் கடந்த மூன்று நாளாக பச்சைபட்டாணி மட்டும் சாப்பிடுகிறான்.பச்சை பட்டானியை அவன் தான் எங்கள் உறிப்பான்.கோகுல் உறிச்ச பட்டானி என்று சொல்லிக் கொடுத்தால் சாப்பிடுகிறான்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்