ஆலூ புர்தா

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 2
எலுமிச்சை - 1
நெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகாய்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது


 

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து பிறகு நன்கு மசித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் வாணலியை நெருப்பில் இருந்து விலக்கி, அதில் மிளகாய்பொடியைப் போடவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கொத்தமல்லி இலையைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதைத் தான் உருளக்கிழங்கு புட்டு என்று தமிழ்நாட்டில் அழைப்பர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா