பச்சை சட்னி

தேதி: May 12, 2008

பரிமாறும் அளவு: 5 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
வெங்காயம் - இரண்டு
புதினா - அரை கட்டு
பச்சை மிளகாய் - இரண்டு
லெமென் ஜூஸ் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி


 

கொத்தமல்லி, புதினாவை மண் இல்லாமல் ஆய்ந்து அலசி கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து அதில் லெமென் ஜூஸ் கலந்து சாப்பிடவும்.


பச்சை சட்னி உடம்புக்கு ரொம்ப நல்லது. பிரெட்டிலும் தடவி காலை உணவாக டயட்டில் உள்ளவர்கள் சாப்பிடலாம். இந்த சட்னி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வடை, பஜ்ஜி போன்றவற்றிற்கு தொட்டும் சாப்பிடலாம். இதை மூன்று நாள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலக்கா இதற்கு சின்ன வெங்காயமா பெரிய வெங்காயமா..

தளிகா இரண்டு மீடியம் சைஸ் வெங்காயம்

இந்த சட்னி சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும்.

கேன்சர் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா,
எனக்கு நம்ம ஊரில் மிளகாய் சட்னி (காரச்சட்னி)ன்னு செய்வாங்களே அதோட ரெசிபி கொஞ்சம் சொல்லுங்க. அதில் தக்காளி போடமாட்டாங்க. நல்லா காரமா இருக்கும். நானும் இரண்டு, மூனு ரெசிபி ட்ரை செஞ்சுட்டேன். எதுமே நல்லா வரலை. ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க.
Rajini

ஜலீலாக்கா மன்னிக்கவும் குறிக்கிடுவதற்கு.

http://www.arusuvai.com/tamil/node/5499

இந்த குறிப்பில் உள்ளதை முயற்சி செய்து பாருங்கள். நான் இந்த குறிப்பில் உள்ளதைப் போல் செய்து விட்டு, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்ததை சுருள வதக்கிவிடுவேன், பூண்டின் பச்சை வாடை எனக்கு பிடிப்பதில்லை. பூண்டை சிறிது எண்ணெய்யில் வதக்கி அரைத்தாலும் நல்ல இருக்கும். செய்து பாருங்கள் நீங்கள் கேட்கும் சுவையில் இருக்கும், நானும் பல ரெசிபி முயற்சி செய்து இது பிடித்திருந்தது.

வித்யா,
கண்டிப்பாக ட்ரை செஞ்சுபார்க்கிறேன். நானும் ரொம்ப ரெசிபி ட்ரை செஞ்சு எதுவும் பிடிக்கலை. நீங்க சொன்னது போல அரைச்சிட்டு வதக்கப்போறேன். செஞ்சு பார்த்துட்டு பதில் போடறேன். ரொம்ப Thanks.
Rajini

ஹாய் ரஜினி எங்க அம்மா பூண்டு,மிளகாய்,உப்பு சேர்த்து பச்சையாக அரைப்பார்கள்.அரைத்ததும் கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து சாப்பிடுவோம். நாங்க பூண்டு சட்னினு சொல்லுவோம். இதை தான் நீங்க கேட்கறீர்களானு தெரியல.இது ரொம்ப காரம இருக்கும்.எனக்கு ரொம்ப பிடித்த சட்னி.ஆனா கல்யாணத்திற்கு பிறகு செய்வதில்லை ஏன்னா இவருக்கு அவ்வளவு காரம் பிடிக்காது.
அன்புடன் தீபா

தீபா,

அதே சட்னிதான். என் ஃப்ரண்டு கொண்டு வருவா, அந்த சட்னிக்கு ஒரு பெரிய அடிதடியே நடக்க்கும். வித்யாவுக்கு பதில் போட்டதும் முதல் வேலை சட்னி அரைத்தது தான்.
வித்யா,
சரியான நேரத்தில் அருமையான குறிப்புக்கு டைரக்ட் செஞ்சீங்க. ரொம்ப நல்லா வந்தது
Rajini

ஆமாம் ரஜினி அருமையாக இருக்கும்.
என் கணவருக்கும் பிடிக்கும்.