வணக்கம் தோழிகளே

நான் குழந்தை எதிர்பார்து கொண்டிருக்கேன். எனக்கு regular periods . periods ன் போது எனக்கு அதிகமாக வயிற்று வலி இருக்காது .இந்த மாதம் வயிரு வலிக்கிறது.இதற்கு என்ன காரணம் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

Hi all

I have already planned to go to India not knowing that I'll get pregnant.Just a few days remaining for my journey to start.Is it ok to travel when I am confirmed??

Thank you in advance

முதல் மூன்று மாதங்களுக்கு பயணங்களை தவிர்ப்பது மிகவும் நன்று. என் மருத்துவர் என்னை ஒரு ஆறு மணி நேர ரயில் பயணத்தையே தவிர்க்க சொன்னார். அவசியம் பயணம் செய்ய வேண்டும் என்றால் தங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். என் தோழி தான் உண்டாகி இருக்கும் விசயம் தெரியாமலே பழனி மலை ஏறி இரங்கி உள்ளார், அத்துடன் USசும் வந்தார், அவருக்கு அறுபது நாள் கடந்து தான் தான் உண்டாகி இருப்பதே தெரியும். இது தங்கள் உடல் கூறை போருத்தது, மருத்துவரிடம் அலோசியுங்கள்.

Thanks so much for ur reply.Here no one seems to mind to answer particularly to new members queries.Bcoz i see almost every member continuing their topics.SO sad.I came here to get some suggestions.

இங்கு கூப்பிட்ட குரலூக்கு ஒடோடி வர நிறையப் பேர்கள் இருக்கீறார்கள். சற்றுப் பொறுங்க மற்ற தோழிகளும் வருவாங்க. தவறாக நினைக்காதீங்க.

ஐயையோ!சுனந்தா,
இப்படி சிறு பிள்ளை போல் கோபம் கொள்ளவேண்டாம்.
நீங்கள் வெள்ளிகிழமை பதிவு போட்டிருப்பதினால் தான் பதில் கிடைக்க தாமதம்.நமது தோழிகளில் பலர், வெள்ளிகிழமை விடுமுறை இருக்கும் நாடுகளில் வசிக்கின்றனர்.
தளிகா,மாலதிக்கா,ஜலீலாக்கா,மர்ழியா,தேவா,அதிரா,விஜி இன்னும் எத்தனையோ சகோதிரிகள் உங்களுக்கு ஆலேசனை சொல்வார்கள்.சரியா,இப்போ எங்கே சிரிங்க பாக்கலாம்.
ம்ம்ம்ம்............. வெரி குட்..

எங்கப்பா எல்லோரும் ஒட்டு மொத்த்மா கானோம்.எல்லோரும் வந்து சுனந்தா என்ற புது தோழிக்கு பதில் சொல்லுங்கப்பா.ரொம்ப கோபமா இருக்காங்க.
ஜலீலாக்கா இப்போ தான் ஆன்லைன்ல பார்த்தேன்,எங்கே அதுக்குள்ள டிஸப்பியர் ஆயிட்டீங்க
சுனந்தாக்கு பதில் போடுங்கக்கா

சுனந்தா இது உங்களுக்கு முதல் குழந்தையா, கூடுமான வரை பயணத்தை தவிக்கவும், தோழி வித்யா சொன்ன மாதிரி .
சிலருக்கு கர்ப்ப பை லேசாக வீக்காக இருக்கும், குழந்தை என்பது நமக்கு முக்கியம், அதை கண்ணை இமை காப்பது போல் காக்கனும்.
இங்கு நிறைய தோழிகள், தளிக்கா, மர்லியா மற்றும் மாலதி யக்கவ் எல்லோரும் உங்கலுக்கு பதில் அளிப்பார்கள்.
நானும் இப்ப கொஞ்சம் பிஸி பிறகு வரேன்.

எல்லோருக்கும் லீவு ஆகையால் கொஞ்சம் பொறுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் சுனந்தா, எனக்கு இன்று நேரமே இல்லை விருந்தினர் வருகிறார்கள், இருப்பினும் இதைப் பார்த்ததும் பதில் போடாமல் இருக்க முடியவில்லை. வித்தியா ஏற்கனவே பதில் தந்துவிட்டார். அதை விட வேறு என்ன இருக்கிறது சொல்ல?.

3 மாதம் வரை பிரயாணங்களை முக்கியமாக பிளேனில் தவிர்ப்பது நல்லது. 3 மாதத்தின் பின் டொக்ரேசின் அனுமதி லெற்றருடன் தான் பிரயாணம் செய்ய வேண்டும். இல்லையெனில் பிளேனில் அனுமதி தரமாட்டார்கள்... ஏனெனில் தப்பித்தவறி பிளேனுக்குள் ஏதாவது நடந்தால் அவர்களுக்குத்தானே பொறுப்பு. முதல் 3 மாதகாலம்தானே குழந்தையின் வளர்ச்சியின் முக்கிய பகுதி, அந்த நேரம் பிளேனில் பிரயாணம் செய்கிறபோது, பிளேனிலுள்ள ரேடியேசன் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். குறைபாடுகள் கூட சிலநேரம் ஏற்படலாம்... இதனால்தான் 3 மாதம்வரை தவிர்க்க வேண்டும். நான் உங்களை வெருட்டவில்லை. டொக்ரேர்ஸ் இப்படித்தான் சொல்வார்கள்.

தெரியாமல் தவறுகள் நடக்கலாம்... தெரிந்துகொண்டு செய்கிறபோது மனப்பயமே பாதிப் பிரச்சனைக்கு காரணமாகிவிடும். இனி உங்களைப் பொறுத்தது, அதிலும் நீங்கள் இருப்பது அமெரிக்கா, குறைந்தது 2 பிளேனாவது எடுக்க வேண்டும். நிறைய நடக்கவேண்டிவரும் , எல்லாவற்றையும் யோசியுங்கள். முடிந்தால் ரிக்கட்டை மாற்றுங்கள். டொக்ரேசைக் கேட்டால் போகவேண்டாம் என்றுதான் சொல்வார்கள். நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். என்னைப் பொறுத்து பிரயாணம் நல்லதல்ல.

இனிப் போவதோடு மட்டும் முடியாதே திரும்ப வரப்போகிறீர்கள்தானே? அது எப்போ உடனேயா? மொத்தத்தில் தவிர்ப்பதுதான் நல்லது. குழந்தைதான் முக்கியம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் சுகந்தா தாயாக போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

அடுத்து நாங்க யாரும் உங்க பதிவை பார்கவில்லை..பார்த்து இருந்தால் கண்டிப்பாக பதில் போட்டு இருப்போம்...

நீங்க கண்ஸீவா இருப்பதால் முதல் 3 மாதத்திற்க்கு கண்டிப்பாக பயணம் கூடாது..கொஞ்சம் தாமதமாக போனால் உங்களுக்கும்,உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது...மைண்டை,உடம்பை ரொம்ப பிரீயா வைத்துக்கனும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வித்யா 2 வரியில் சரியா சொல்லியாச்சு..தவிர்ப்பது நல்லது ஆனால் தவிர்க்கமுடியாதென்றால் மருத்துவரின் அனுமதியுடன் செல்லுங்கள்.
டென்ஷனாகிட்டீங்க போல..எத்தனையோ புதிய உறுப்பினர்களுக்கு எத்தனையோ பேர் பதிலளித்திருக்கிறார்கள்.பின்ன அவரவர் சவுகரியமும் ,கேள்வி கேட்ட சீரியஸ்னஸ் வைத்த்தும் பதில் கிடைக்காமல் போகலாம்.இதுக்கெல்லாம் கவலைபட்டால் முடியுமா.
ஒரு கட்டணத்தளமாக இருந்தால் வருந்தலாம்.முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் தளம் யாரும் எந்த ப்ரதிபலனும் எதிர்பார்க்காமல் தான் பலரும் பல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.இதுக்கெல்லாம் சங்கடப்படாதீங்க.

மேலும் சில பதிவுகள்