உருளை கறி & பஃப் பேஸ்ரி

தேதி: May 13, 2008

பரிமாறும் அளவு: 3/4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறிக்கு:
=======
உருளைக்கிழங்கு - 3
வெட்டிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
வெட்டிய உள்ளி - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறித்தூள்/சாம்பார் தூள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு
சீரகம்
உப்பு
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
பஃப் செய்ய:
==========
பைலோ ஷீட் - 1 பக்கெட்
மைதா மா - 2 மேசைக்கரண்டி


 

உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து அவிக்கவும்.
கிழங்கு அவிந்ததும் வடித்து எடுத்து உதிர்த்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், உள்ளி, பச்சைமிளகாய், கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும். பின் அதனுள் கறித்தூளையும் சேர்த்து வதக்கவும்.
கலவை வதங்கியதும் அதனுள் உப்பு, உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கை கொட்டி கிளறவும்.
கலவை ந்னகு சேர்ந்ததும் இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி வைக்கவும்.
பின்னர் பைலோ பேஸ்ரி ஷீட்டை மாத்தூவிய ஒரு தட்டில் பொட்டு சிறிய துண்டுகளாக வெட்டி அதனுள் இந்த கறிய வைத்து மூடவும்.
உரிளைக்கிழங்கு கறி இல்லாவிட்டால் சன்னா மசாலா வைக்கலாம்.
அல்லது சோயா மீற் (சோயா உருண்டை) கறி வைக்கலாம்.
பின்னர் மூடிய பேஸ்ரிகளை பேக்கிங் தட்டில் அடுக்கி அவனில் வைத்து சூடாக்கி எடுக்கவும். (எவ்வளவு நேரம், எவ்வளவு சூடு என்பன பைலோ ஷீட்டின் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்ப செய்யவும்)
சுவையான இலகுவான பேஸ்ரி தயார். இதனை கெட்ச்சப் அல்லது சட்னியுடன் அல்லது அப்படியேயும் சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்