கேரட் பர்பி

தேதி: May 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் துருவல் - 2 கப்
தேங்காய் துருவல் - 2 கப்
பால் - 2 கப்
சீனி - 2 கப்
நெய் - ஒரு கப்
முந்திரிப்பருப்பு - 10 என்னம்


 

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு சூடானதும் அதில் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் தேங்காய் துருவலையும் போட்டு, 2 அல்லது 3 முறை கரண்டியால் கிளறி எடுத்துக்கொள்ளவும்.
துருவிய கேரட்டை போட்டு ஒரு முறை கிண்டிவிட்டு அதில் ஒரு கப் பாலை ஊற்றி கேரட்டை வேகவைக்கவும், அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும்.
பால் வற்றி வரும் வேளையில் தேங்காய் துருவலை போட்டு கிண்டவும் 2 நிமிடம் கழித்த பின் ஒரு கப் பால் ஊற்றி கேரட் மற்றும் தேங்காய் துருவல் வெந்து பால் வற்றி வரும் வரை கிண்டவும்.
பால் வற்றின பின் 2 கப் சீனி போட்டு கிண்டவும். இடை இடையே நெய் ஊற்றவும், அடிப்பிடிக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
கேரட், தேங்காய் துருவல் மற்றும் சீனி எல்லாம் கலந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி அதில் கேரட் கலவையை கொட்டி வில்லைகள் போட்டு, அதன் மேல் பக்கம் வறுத்த முந்திரிப்பருப்பை வைக்கவும்.
10 மணி நேரம் கழித்து ஒரு கத்தியினால் வில்லைகளை தனித்தனியே பிரித்து துண்டுகளாக எடுத்துக் கொள்ளலாம். கேரட் பர்பி தயார்.


மேலும் சில குறிப்புகள்