தேதி: May 19, 2008
பரிமாறும் அளவு: 2
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மசூர் டால்(மைசூர் பருப்பு) - 1/4 கப் (red lentils)
ஏதேனும் ஒரு வகை கீரை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 6 (நசுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
வறுத்துப் பொடிக்க:
தனியா - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
(அல்லது) வறுத்து பொடிப்பதற்கு பதிலாக ரசப்பொடி - 2 தேக்கரண்டி பயன்படுத்தலாம்.
வறுத்து பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் வறுத்து குருணையாக பொடித்துக் கொள்ளவும் அல்லது ரசப்பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து 1 கப் அளவுக்கு புளிக்கரைசல் எடுத்து வைக்கவும்.
பருப்பை 3 கப் நீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். இறக்குவதற்கு 5 நிமிடம் முன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வேக விடவும். (பொதுவாக மைசூர் பருப்பு விரைவில் வெந்து விடும்)
பிறகு பருப்பில் உள்ள தக்காளியை கரண்டியால் மசித்து அதனுடன் புளிக்கரைசல், உப்பு மற்றும் பொடியையும் சேர்த்து கலக்கவும்.
வாணலியை எண்ணெயுடன் சூடேற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் நறுக்கிய கீரை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இறுதியாக பருப்புக் கரைசலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான ரிச் மசூர் டால் ரெடி. சூடான சாதத்துடன் பரிமாறவும்.
இது காரம் குறைவாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றிற்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
Comments
Nice one
Nice One