வாருங்கள் வாழ்த்த தயாராவோம்!

வாழ்த்துவோம் வாருங்கள்!
500 ஐ நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் சகோதரிகள் செல்வி,ஜலிலா,சுபா ஆகியோருக்கு முதலில் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அவர்களின் இயல்பான பணிகளுக்கிடையில் இது ஒரு கடின உழைப்பு தான். பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
வயதில் மூத்தவன் குறிப்புகளில் இளையவன்(50 ஐ எட்டி பிடித்து விட்டேன். அது வேறு விசயம்) என்ற உரிமையில், அட்மினுக்கும், ஏனைய சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்.
500 ஐ தொடும் சகோதரிகளுக்கு அறுசுவை.காம் சார்பாக "அறுசுவை ராணி" எனும் பட்டத்தை வழங்கலாமே! இதற்காக தனியாக விழா எடுக்கலாம் அல்லது அறுசுவையின் ஆண்டு விழாவோடு சேர்த்து இதையும் கொண்டாடலாம். நினைவு பரிசு வழங்கலாம்.
அட்மினும் மற்ற சகோதரிகளும் தயவு செய்து இதை பற்றி சிந்தித்து தங்களின் கருத்துக்களை இந்த திரெட்டினில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முன்பு சில திரெட்டுகளில், குறிப்பாக அமெரிக்கா வில் விலையேற்றம் பற்றிய திரெட்டில், நம் நாட்டு மக்களை இழிவாக பேசிய புஷ் பற்றி உங்களின் கண்டன கணைகளை எதிர் பார்த்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. 2 சகோதரிகள் மட்டுமே பதிவு செய்தார்கள். அது நம் நாட்டு மான பிரச்னையாக இருந்தும் ஏனோ யாரும் கண்டு கொள்ளவில்லை..
அதை மாதிரி இதிலும் அலட்சியமாக இருந்து விடாமல் தங்கள் அனைவரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தாருங்கள்.அட்மினுக்கும் வேண்டுகோள் வையுங்கள். கூட்டாஞ்சோற்றில் ஒன்று கூடி விழா எடுப்போம். அவர்களை கவுரவபடுத்துவது நமது கடமை.
இது பின் வந்து கொண்டிருக்கும் 300, 100 ஐ தொட்டவர்களுக்கு (மனோ,சரஸ்வதி,கதீஜா,ஜெயந்தி,தளிகா,அஸ்மா,ஜுலைகா போன்றோர்களுக்கு) ஊக்கமாக அமையும்.

பி.கு; கடந்த காலங்களில் நான் கண்டது,கேட்டு அறிந்தது,படித்து தெரிந்தது இவைகளையெல்லாம் வீட்டில் அவ்வப்போது மனைவியின் ஒத்துழைப்புடன் செய்து பார்த்த பின்பு அறுசுவையில் 50 குறிப்புகள் தந்திருக்கிறேன். இன்னும் வளரும்.
ஒரு மின்னியல்(திட்டம்) பொறியாளருக்கு சம்பந்தமே இல்லாத துறை இது. இருந்தும் காலத்தின் கட்டாயத்தினால் சமையலை கண்டிப்பாக கற்றுத் தான் தீர வேண்டும் என்ற சூழ்நிலைக்கு ஒரு காலத்தில் தள்ளப் பட்டதின் விளைவு(அது ஒரு சோகக் கதை. அதை சொன்னால் நீண்டு கொண்டே போகும்) இன்று என் இல்லத்தரசிக்கும் சமையல் பாடம் எடுக்கும் அளவுக்கு முன்னேறி விட்டேன். அறுசுவையில் 50 குறிப்புகள் கொடுத்த ஆண் உறுப்பினர் நானாகத் தான் இருக்கிறேன் என்பதில் பெருமையடைகிறேன்.
கண்டிப்பாக அறுசுவை சகோதரிகள் அனைவரும் இங்கு பதிவு தர வேண்டுகிறேன்.
இறுதியாக 50.... 500ஐ வாழ்த்துகிறது.
நன்றி
குலசை சுல்தான்.

500 ஐத் தொடப் போடப்போகிறார்களா?..... என்ன ஆச்சரியம், நான் சமைக்கத்தொடங்கிய காலத்திலிருந்து எண்ணினாலே 500 வகையாக சமைத்திருப்பேனோ என்பது சந்தேகமாகவே இருக்கு.
சீக்கிரமே 500 ஐத் தொட என் வாழ்த்துக்கள்.

என்ன அங்கிள் உங்கள் 16 குறிப்பைப் பார்த்த ஞாபகம்தான் எனக்கு இருக்கு அதற்கிடையில் 50 என்கிறீர்கள். எல்லோரும் பயங்கரமாக முன்னேறுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமாம் அவர்கள் அனைவரும் குறிப்பில் சும்மா பின்னுறாங்க..கண்டிப்பாக பட்டம் கொடுத்து ஆகனும்..இதில் அட்மின் ஒன்னும் சொல்லமாட்டார்அவருக்கு இதில் பெருமைதான் இருக்கும்..ஆனால் பரிசு சரிபடாது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில் இருக்கின்றார்கள் இதுவே என் கருத்து..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சகோ சுல்தான் சார் மர்ழியா சொன்னது போல் ஒவ்வொருவரும் ஒரு திசையில் இருப்பதால் ஒரு விழா எடுத்து அனைவரையும் ஒன்று சேர்ப்பது கடினம். கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் பாராட்டப் பட வேண்டியவர்கள்தான். புதிய தளம் மாறும்போது தளத்திலேயே அவர்களை அட்மின் பெருமைப் படுத்துவார் என எண்ணுகிறேன்.

நீங்களும் மெஹர் மேடமும் தரும் குறிப்புகள் எல்லாம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. உங்கள் இருவரின் சேவையும் அறுசுவையில் மேன்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும்.

ஆமாம் தளத்திலேயே அவர்களை கவுரவப்படுத்தலாம்.அதனை அட்மின் தவறாமல் செய்துள்ளார்.
நீங்களும் சீக்கிரம் 50 ஐ தொட்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள்.இது போன்ற நல்ல குறிப்புகள் இன்னும் கொடுங்க

சகோதரர் சுல்தான் அவர்களே,
நான் மர்ழியா மற்றும் வானதி சொல்வதை ஆமேதிக்கிறேன்.ஆம் அனைவரையும் ஒன்று சேர்ப்பது கடினம்.விழா எடுக்க முடியாவிட்டாலும் வானதி கூறியது போல் தளத்திலேயே வாழ்த்திவிடுவோம்.
ம்ம்ம்....மார்க்கப்பணிகளுக்கு இடையில் தாங்களும் 50 குறிப்புகள் கொடுத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை.பிடியுங்கள் எங்கள் அனைவரது வாழ்த்துக்களையும்...

அட மெஹர் அண்ணி இப்ப தான் 16 பார்த்த மாதிரி இருந்தது, அதற்குள் 50 ஐ தண்டியாச்சா வாழ்த்துக்கள். இன்னும் பலநூறு குறிப்புகல் கொடுக்க.
எல்லாம் நல்ல வித்தியாசமான ரெஸிபி.

ஜலீலா

Jaleelakamal

நானும் பாத்துட்டே இருக்கேன்.. சுபா/ஜலீலக்கா/செல்விமா.. மூன்று பேரும் 462 .. இதைப்போல மீண்டும் ஒரு முறை 3 பேர் ஒரே எண்ணிக்கையில் வருவது என்பது மிக கடினம்...

உங்களுக்கு எனது பாராட்டுக்கள்... ஏதோ விறு விறுப்பான ஒரு டென்னிஸ் மேட்ச் பார்பது போல இருக்கு.. ( பி.கு எனக்கு டென்னிஸ் மிக பிடிக்கும்)
இடையிலே ஒரு பயம்.. இந்த அருசுவை மெதுவா சுத்தி சுத்தி பேஜ் வருவதற்க்குள் சுபா இன்னும் ஒரு குறிப்பு போட்டுடுவாங்களேன்னு....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்க மெஹர் அண்ணி ( என் ஆன்டி) எப்போதும் 16 லே தான்... அப்படி சொன்னாதான்.. அண்ணனுக்கு ஒழுங்கா குபூஸ் கிடைக்கும்....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

http://youtube.com/watch?v=-QUAxnY8moE

Marliza .. for you too .. i know you like this song too...

அப்படியே... நான் இப்போதைக்கு அப்பீட்ட்
Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு இலா அத இப்போ நியாபகப்படுத்துனதுக்கு ரொம்ப thanks. அதோட அங்க உள்ள எல்லா song super அழகன் படம் பாட்டு கூட அதில் இருந்துச்சு இலா really funtastiv songs and my evergreen favourite songs

மேலும் சில பதிவுகள்