பெங்களூரில் தமிழ்நாடு ஹோட்டல்

பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் கிடைக்கும் உணவு வகைகளில் ஒருவித இனிப்பு இருப்பதால் நம் டேஸ்டிற்கு ஒத்துவருவதில்லை. நல்ல தமிழ்நாடு ஸ்டைலில் அல்லது கர்நாடகா ஸ்டைல் அல்லாத உணவுவகைகள் கிடைக்கும் ஹோட்டல்களும் அந்த ஏரியாவும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

உங்களுக்கு அசைவம் பிடிக்கும் என்றால்.. நல்ல தரமான ஹோட்டல்களில் அருமையாக இருக்கும்.. இது 1998ல்.. இப்போ எப்படி என்று அங்கு இருப்பவர்கள்தான் சொல்லணும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சகோதரி மாலதி அவர்களுக்கு,

சுற்றுலாவாக நீங்கள் பெங்களூரு சென்றிருந்தால் எனது ஆலோசனை புதிய வகை உணவுகளை சாப்பிட்டுப் பாருங்கள் என்பதுதான். வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் வழக்கமாக கேட்கும் கேள்வி, அங்க நம்ம சாப்பாடு எங்க கிடைக்கும்? என்பது. நம்ம சாப்பாட்டைத்தான் இங்க வருசக்கணக்கா சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்களே.. அங்க போயாவது அவங்க என்ன சாப்பிடுறாங்களோ அதை கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்க.. என்பேன். நானும் அதைத்தான் செய்வேன். எங்கே போனாலும் அந்த ஊரின் ஸ்பெஷல் என்னவோ அதை தேடி சாப்பிட்டு பார்ப்பேன். தொடர்ந்து புதிய வகை உணவுகளை சாப்பிட முடியாது. நமக்கு பழக்கமான உணவுகளையும் அவ்வபோது சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

பெங்களூரில் எனக்கு தெரிந்து சிட்டி மார்கெட், சிவாஜி நகர், மல்லேஸ்வரம், அல்சூர் போன்ற தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழ் உணவு விடுதிகள் இருக்கின்றன. பெரிய உணவு விடுதிகள் என்று சொல்ல முடியாது. சிட்டி மார்கெட் பகுதியில் (கலாசி பாளையம் செல்லும் சாலையில்) மாலை நேரங்களில் சாலையோர இட்லி கடைகள் இரண்டு மூன்று பார்க்கலாம். நன்றாக இருக்கும். படிக்கும் காலத்தில் கூச்சமில்லாமல் அங்கே போய் அமர்ந்து சாப்பிடுவோம். இப்போது அந்த பக்கம் செல்லவே தயக்கமாக இருக்கிறது.

பெங்களூரு சென்றால் காலை சாப்பாட்டிற்கு எதாவது ஒரு கன்னட உணவு விடுதி. அவர்களது மசாலா தோசை, புதினா சட்னி எனக்கு மிகவும் பிடிக்கும். மதிய சாப்பாட்டிற்கு எப்போதும் ஆந்திர உணவு விடுதிகளையே தேர்ந்தெடுப்பேன். காரம் அதிகம் இருந்தாலும் நமது டேஸ்டுக்கு ஒத்து வரும். என்னுடைய ஃபேவரைட் பிரிகேட் ரோடு அருகில் இருக்கும் நாகார்ஜுனா. பிரிகேட்டில் இருக்கும் RR ம் நன்றாக இருக்கும். மெஜஸ்டிக் பக்கம் நவயுகா, நர்த்தகி, சாகர் போன்ற ஆந்திர உணவுவிடுதிகள் நன்றாக இருக்கும். மாலை நேரத்தில் சைனீஸ் ரெஸ்டாரண்ட்ஸ் சென்றுவிடுவேன். Rice Bowl பெஸ்ட் சாய்ஸ். (Pork fried rice with pork pepper fry சாப்பிடவென்றே இங்கே வருவோம்.) முன்பு பிரி்கேட்டில் இருந்தது. இப்போது MG road கடைசிக்கு சென்றுவிட்டது. நான் அங்கு சாப்பிட்டு 6, 7 வருடங்கள் இருக்கும். இப்போது இருக்கின்றதா என்பது கூட தெரியவில்லை. பிரிக்கேட்டில் இருக்கும் Sankrila சைனீஸ் ரெஸ்டாரண்டும் நன்றாக இருக்கும். Bar attached. குடும்பத்துடன் சென்று சாப்பிட கொஞ்சம் தயக்கமாக இருக்கும். இப்போது KFC, McDonalds, Pizza corner இப்படி நிறைய வந்துவிட்டன. தமிழ்நாட்டு டிபனுக்கு பொங்கல் வெஜ் கஃபே பத்தி நிறைய சொல்வாங்க. ஆனால் நான் போனதில்லை. இதை படிச்சுப் பாருங்க.

http://www.hindu.com/mp/2006/08/29/stories/2006082900660400.htm

கோரமங்கலா Oasis Centre (shopping mall) செல்லுங்கள். மேல் தளத்தில் குழந்தைகளுக்கான வீடீயோ கேம்ஸ் நிறைய இருக்கின்றது. அங்கேயே ஒரு பெரிய food courtம் இருக்கின்றது. கிட்டத்திட்ட எல்லா வகை உணவுகளும் கிடைக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். நாங்கள் பத்து பேர் இருந்தோம். கிட்டத்திட்ட எல்லா கடைகளில் இருந்தும் அயிட்டம்ஸ் ஆர்டர் செய்தோம். Yellow chillies ல் drums of heaven என்று ஒருவகை சிக்கன் லாலி பாப் மிக நன்றாக இருந்தது. Donut baker shopல் வெரைட்டி வெரைட்டியாக donuts வாங்கி சாப்பிட்டோம். எல்லாமே நன்றாக இருந்தது. Madras curry shop ம் இங்கே இருக்கின்றது.

இந்த லிங்க்ஸ் எல்லாம் கொஞ்சம் பாருங்க.

http://www.discoverbangalore.com/restreview.htm
http://www.sln.in/Chennaispot/?p=91

முன்பே இதைப் பற்றி ஒருமுறை அறுசுவையில் பேசி இருக்கின்றோம். ஒவ்வொரு ஊரிலும் உள்ள தமிழ் விடுதிகள் குறித்து தகவல்கள் திரட்டி அறுசுவையில் வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து உணவுவிடுதிகளைப் பற்றின தகவல்களையும் நாங்கள் திரட்டி வருகின்றோம். எங்களுக்கு உதவும் வண்ணம் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தமிழ் உணவுவிடுதிகள் பற்றிய தகவல்களை கொடுக்கலாம். முகவரி மற்றும் அங்கே என்ன உணவுகள் நன்றாக இருக்கும் என்பதை பற்றி தெரிவிக்கலாம். அது நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

திரு. அட்மின் அவர்களுக்கு,
நன்றி. மிகவும் நன்றி. பெங்களூர் உணவு விடுதிகளைப்பற்றி இவ்வளவு விரிவாக கூறியதற்கு.
சுற்றுலாவாக செல்லும்போது சாப்பிட அல்ல அட்மின். என் மகன் அங்கு வேலையில் ஜாயின் பண்ணப்போகிறார் அவர் ரெகுலராக சாப்பிடுவதற்காக கேட்டேன். நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் வெப்சைட்களை பார்க்கிறேன். தேங்க்ஸ்!!...

திரு. அட்மின் அவர்களுக்கு,
நீங்கள் கொடுத்த வெப்சைட் - களை பார்த்தேன். மிகவும் உபயோகமாக இருக்கிறது. மெட்ரோ ப்ளஸ் பெங்களூரை விட டிஸ்கவர் பெங்களூர் வெப்சைட் இன்னும் நன்றாக இருக்கிறது. இதில் பெங்களூரையே சுற்றி பார்த்தது போல் இருக்கிறது. மெட்ரோ ப்ளஸ் - ல் தாஜ் மொஹல் ரெஸ்டாரன்ட் - தினசரி பஃபே ஐட்டம்ஸ் நன்றாக உள்ளது. ப்ரைஸும் 130 + டாக்ஸ் என்பது சரியாக இருக்கும். இன்னும் முழுமையாக பார்த்துவிட்டு சொல்கிறேன். நன்றி.

malu.how r u.. r u in chennai now. mail pannunga..expecting ur email kewlfrend@yahoo.com.

மேலும் சில பதிவுகள்