மட்டன் குழம்பு

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் -- 1/2 கிலோ (சுத்தம் செய்தது)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 என்னம் (நீளமாக கீறியது)
இஞ்சி -- 1 அங்குலம் அளவு (நசுக்கியது)
பூண்டு -- 10 பல் (நசுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
சாம்பார் பொடி -- 2ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் -- 1 துண்டு
மிளகு -- 3/4 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/4 டீஸ்பூன்
கசகசா -- 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு -- 10 என்னம்
தாளிக்க:
பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 4 என்னம்
அன்னாசிப்பூ -- 1 என்னம்


 

குக்கரில் 1 ஸ்பூன் எண்ணைய் விட்டு கறியுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவிடவும்.

பாதி வெந்த பின் சாம்பார் பொடி போட்டு 2 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

ஒரு கொதி வந்ததும் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவை களை தாளித்து தக்காளியை போட்டு நன்கு வதக்கி அதை கொதிக்கும் கல்வையில் கொட்டி குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட் போட்டு ஹைய்யில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 20 நிமிடம் வைக்கவும்.
குழம்பு ரெடி.

இது இட்லிக்கு வைக்கும் குழம்பு. தண்ணி குழம்பு என்றே பெயர்..
மிகவும் சுவையாக 2 இட்லி கூடவே உள்ளே போகும்


இது இட்லிக்கு வைக்கும் குழம்பு. தண்ணி குழம்பு என்றே பெயர்..
மிகவும் சுவையாக 2 இட்லி கூடவே உள்ளே போகும்

மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா இப்ப இடையில் நீங்க கொடுக்கும் ரெஸிபி எது எதுன்னு தெரியல விளக்கெண்ணை சேர்த்து இருக்கீங்க அது ஏன் என்று விளக்குங்கள்.
நாங்கள் விளக்கெண்னையை குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு வயிற்று வலிக்கு தேய்ப்போம், பிறகு புருவத்தில் முடி வளற தேய்போம், இது வரை சமையலுக்கு பயன் படுத்தியதே கிடையாது.

பிலீஸ் கொஞ்சம் விளக்குங்களே

ஜலீலா

Jaleelakamal

ஜலி,
ரூபி ஏற்கனவே டவுட் கேட்டு க்ளியர் பண்ணிவிட்டேன்..
இருந்தாலும் உங்களுக்கு,
மட்டன் ஐட்டம் செய்யும் போது எங்கள் வீட்டில் அம்மா, பாட்டி,பெரியம்மா,சித்தி -- அவர்கள் பரம்பரை எல்லோருமே இதை யூஸ் பண்ணுவார்கள்...

இதனால் மட்டன் பட்டு போல வெந்து பிரியாமல் இருக்கும்.
பருப்புக்கு கூட நானும் யூஸ் பண்ணுவேன்..

நம்ம ஊர் எண்ணைய் கசக்காது... இங்கே கசக்குது அதனால் நான் இப்போது பருப்புக்கு ஊற்றுவது கிடையாது...

அது தான் சேதி
தலைப்பை பார்த்து ஒரு நிமிடம் ஆடி அப்பறம் கரெக்டா படித்தேன்.. திட்டியது போல் இருந்து மாறி விட்டது (!சும்மா)