கார முட்டை தோசை

தேதி: May 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

தோசை மாவு - ஒரு கப்
முட்டை - நான்கு
எண்ணெய் + நெய் - தோசை சுட தேவையான அளவு
மிளகு தூள் - தேவைக்கு
உப்பு தூள் - தேவைக்கு


 

தோசைமாவில் தவாவில் பேப்பர் ரோஸ்டுக்கு ஊற்றுவது போல் ஊற்றி உடனே முட்டையை முழுசாக எடுத்து ஒரு விரல் அளவு ஓட்டை போட்டு அப்படியே தோசை முழுவதும் தெளிக்க வேண்டும்.
ஒரு தோசைக்கு ஒரு முட்டை தேவை பிறகு மிளகு, உப்பு தூள் தூவி நெய் + பட்டர் கலவையை சுற்றிலும் ஊற்றி தீயை குறைத்து வைத்து அப்படியே மொறுகலாக எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா இது புரியல?விரல் அளவு ஓட்டையா?அதில் முட்டையிலா??ஹி ஹி தெட்டாதீங்க சொல்லுங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா முட்டையின் கூம்பில் ஒரு சிறிய ஓட்டை போட்டு அப்படியே தெளிக்கனும்.

நான் 1991 - நில் துபாய் வரும் போது ஒரு தஞ்சாவூர் காரங்க இப்படி செய்தார்கள், இன்னும் ஒன்று இறால் தேங்காய் சோறு என்பார்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் அக்கா நான் சாதாரணமாக முட்டை தோசை போடுவேன்..ஆனா இது வித்தியாசமா இருக்கு..ஏதோ ஓட்டை போடனும்னு சொலி இருக்கீங்க அதான் கேட்டேன்..இதுவும் லேட்தான் நான் அழ போறேன்...தோசை மாவு இப்ப இல்லை இதுக்கு இப்பபார்த்து விளக்கம், ஆ ஆ ஓ ஓ...(அழுகை)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அடப்பாவமே மர்ழியா..ஓட்டை போடுவதுன்னா ஏதோ சுத்தி வச்சு ஆணி அடிக்கிற ரேஞ்சுக்கு கற்பனை வேனாம்..முட்டையை உடைத்து ஊத்தரதுக்கு பதில் முட்டையில் மேலே ஒரு கத்தி வச்சு தட்டினா குட்டி ஓட்டை வரும் அப்ப முட்டையை ஃபுல்லா கவுக்காம கொஞ்சமா எல்லா பக்கமும் தெளிக்கலாம் அதான்.

தோ வந்துட்டாப்பா :-D
தளி நா சொன்னது ஒன்னும் இல்லை...நான் நினத்தேன் முட்டையை உடைத்து ஊற்றியபின் ஏதோ சொல்ல வாரோங்களோன்னு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Supeeeeeeeeeeer appu

கார முட்டை தோசை

என்ன பா நல்ல இருந்துச்சா.

மிக்க நன்றி
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம்
பாராட்டு மழைல திக்கு முக்காட்டிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்,ஜலதோஷம் பிடிகாமல் இருக்காக உங்க கைவைத்தியத்தியத்தை ரெடியா வெச்சுக்குங்க.
உங்க கார முட்டை தோசை செய்தேன் ரொம்ப நல்லா வந்தது.என் பையனுக்கு மட்டும் மிளகு கொஞ்ச கம்மியா போட்டு செய்து கொடுத்தேன். நன்றி மேடம்.

கவி யெஸ். எனக்கு ஜலதோஷம் பிடிக்காது ரெடியா இருகு இஞ்சி டீ, சுக்கு மிளகு டீ, இப்போது புதுசா துளசி டீ குடிக்கிறேன்.

இதை செய்து சப்பத்தியில் உள்ளே வைத்து முன்று துண்டுகளாக கட் செய்து ஸ்கூலுக்கும் கொடுத்து அனுப்பலாம்.
பிரெட்டிலும் வைத்து கொடுக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

ஜலிலாக்கா உங்க சமையலில் அடுத்து நான் செய்தது கார முட்டை தோசை.நான்முட்டை தோசையே அதிகமா செய்யமாட்டேன்.மிளகு எல்லாம் போட்டு நல்லா இருந்தது.என் பையன் சாப்பிட்டுகிட்டு இருக்கான்.நல்லா இருக்கு

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

திருமதி. ரேணுகா அவர்கள் தயாரித்த முட்டை தோசையின் படம்

<img src="files/pictures/muttai_dosai.jpg" alt="picture" />

டியர் ரேணுகா கார முட்டை தோசை உங்கள் பையனும் விரும்பி சாப்பிட்டானா? மிக்க சந்தோஷம்.
போட்டோ எடுத்து அனுப்பியதற்கு இந்தாங்க ஒரு யெல்லோ ரோஸ் தலையில் வைத்து கொள்ளுங்கள்.

அதே கலர் டிரெஸும் போட்டு கொள்ளுஙக்ள்.மங்கல கரமா இருக்கும்... ஹா ஹா ஹா

ஜலீலா

Jaleelakamal

ஜலிலா அக்கா நலமா?என்ன டூர் எல்லாம் முடிஞ்சதா?பசங்க எப்படி இருக்காங்க...நான் பக்ரித் அன்ற்று யெல்லோ டிரஸ்தான் போட்டு இருந்தேன்.எனக்கு பிடித்த கலர் யேல்லோ.நீங்க கொடுத்த ரோஸ் அழகா இருக்கு..ரெம்ப நன்றி
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா