தஹி பிந்தி

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெண்டைக்காய் - அரைக்கிலோ
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கொத்துமல்லி - ஒரு கட்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 

இஞ்சி, சீரகம், பச்சைமிளகாய், கொத்துமல்லி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் தயிர், மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்து நன்கு கலக்கவும்.
வெண்டைக்காயை நீளவாக்கில் கொத்தாக நறுக்கிக்கொண்டு, கலவையை வெண்டைக்காய்களில் நிரப்பவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் மசாலா நிரப்பிய வெண்டைக்காய்களை மெதுவாகப் போட்டு வதக்கவும்.
வெண்டைக்காய் மொரமொரப்பானவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்