அறுசுவை உறுப்பினர் அனைவரும் Flash back

அறுசுவை உறுப்பினர் அனைவருக்கும் வணக்கம்

நான் தான் மஹாபிரகதீஸ்,உங்களில் பலபேருக்கு என்னை தெரியாது,இந்த திரட் மூலமாக என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன். அனைவரும் ஒருவழியாக தோட்டகலையில் ஈடுபட்டு செடியை வளர்க்க ஆரம்பித்திருப்பீர்கள்.செடி வளர்ந்து வரட்டும் நாம் அந்த இடைவேளையில் நாம் அனைவரும் flashback போகலாம் வாருங்கள்.

1.இப்பொழுது குறிப்புகள் கொடுக்கும் நாம், முன்பு சமையலில் தவறு செய்து முழித்திருப்போம்,அதை சமாளிக்க ஏதேனும் செய்து நல்ல பெயரும் வாங்கியிருப்போம்,அல்லது நல்ல அசடும் வழிந்து இருப்போம் அதில் ஏதேனும் இருந்தால் இங்கே கூறலாம், நாங்களும் ENJOY பண்ணுவோம்ல,
2.ஏதோ சமைக்க இறங்கி ஏதோ சமைத்திருப்போம்
3.சமையலில் கத்துக் குட்டியாக நாம் இருந்து ஏதேனும் Bacholars சாப்பிட வந்தால் அவங்க பாடு திண்டாட்டம் தான்.

என்ன எல்லாரும் ஒன்றுமே தெரியாது போல் இருக்கிறீங்க ஏதாவது இருந்தால் share பண்ணுங்க

உங்கள் அனைவரின் ப்லாஷ் பேக் பார்த்து சிரிப்பு தாங்கமுடியலை. மர்ழியா என்னை வைத்து டெஸ்ட் பண்ண பார்த்தால் நான் எஸ்கேப் ஆகிட்டேன். இந்த தடவை நான் ஜப்பானில் இருந்து சென்னை வரும் போது அவள் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டாள் எனக்கும் என் கணவருக்கும் போக பயம் அவள் செய்த மேகி பற்றி என் கணவரிடம் சொல்லி இருக்கிறேன் அதனால் தான்.ஆனால் பயந்துக்கொண்டே சாப்பிட்டேன் நல்ல சூப்பராக செய்து இருந்தால் எனக்கும் என் கணவருக்கும் ஒரு டவுட் இது இவள் தான் செய்ததா இல்லை இவள் ஹஸ் செய்ததா என்று ஒரு வழியாக இவள் செய்தது என்று கன்பார்ம் பண்ணிக்கிட்டேன். திரும்பவும் அவள் சாப்பாடு சாப்பிட ஆசை வரும் அளவுக்கு ருசியாக செய்து இருந்தாள். தேங்ஸ் மர்ழி.

என்னுடையதையும் கேளுங்க.என் வீட்டுக்கு நான் தான் மூத்தவள் என் அம்மா சமையல் பார்த்து சாதம்,பருப்பு,ரசம் மட்டும் வைக்க தெரியும்.ஆனால் அதை சமைக்க காட்டியும் என் அம்மாவை அநியாயம் பண்ணிடுவேன் சீரகம் எது,சோம்பு எதுன்னு எதுவுமே தெரியாது.நான் 9 வது படித்துக்கொண்டு இருந்த சமயம் அம்மா வெளியூர் சென்றதால் அன்று என் சமையல் தான் என் தம்பியும் தங்கையும் ஒரே சொல்லுவார்கள் பருப்பு,ரசம் தவிர இவளுக்கு எதுவுமே தெரியாதுன்னு அதனால் அன்று என்ன பண்ணினேன் இவர்களை நாம வேற ஏதாவது சமைத்து அசத்தலாம் என்று புக்கை பார்த்து தக்காளி சாதம் செய்தேன். தம்பியும்,தங்கையும் ஸ்கூலில் இருந்து வந்த உடன் சாப்பிட உட்கார்ந்தோம் சட்டியை திறந்து சாதத்தை எடுத்தால் சாதம் களியாகி இருந்தது இரண்டு பேரும் என்னை முறைக்கவே நான் வழிந்த அசடை பார்க்கனுமே. சாதத்திற்க்கு தண்ணீர் கூட்டி வைத்து தக்காளி சோறு தக்காளி கஞ்சி சோறாக மாறி இருந்தது.அப்ப என் தங்கை எதுக்கு இந்த தேவைல்லாத வேளை உனக்கு தெரிந்ததை செய்து இருக்கலாம் தானே என்று சொன்னாள். செம பசி எல்லாருக்கும் என்ன செய்ய ஒரு வழியா அந்த சாப்பாட்டையே சாப்பிட்டு ஸ்கூலுக்கு போனோம்.

அதில் இருந்து என் அம்மா எங்கயாவது போறதாக இருந்தால் என் தம்பியும்,தங்கையும் அம்மா நல்லா இருப்பீங்க இவளை மட்டும் சமைக்க சொல்லிடாதீங்கன்னு சொல்லிடுவாங்க.

ஆனால் இப்ப நான் சமைப்பது சாப்பிடும் போது சில சமயம் சொல்லி காட்டுவார்கள் என்ன இருந்தாலும் நீ செய்த தக்காளி சாதத்தை அடிக்கமுடியாதுன்னு.இது போல இன்னும் நிறைய செய்து எல்லாரையும் பயமுறுத்தி இருக்கிறேன்.
ஹாய் ப்ரெண்ட்ஸ் உங்கள் அனைவருக்கும் சமைக்க எப்படி ஆர்வம் வந்தது அதே போல உங்களுக்கு சமையல் கற்றுதர உதவியது எது என்று வேற ஒரு த்ரெட் ஆரம்பிக்கிறேன் அதுல வந்து உங்க பதில சொல்லுங்கள்.

அன்புடன் கதீஜா.

எப்பிடி இருக்கிங்க என் பசங்க நல்லா இருக்காங்க.நல்ல ஐடியா சீக்கிரமே த்ரெட் ஆரம்பிங்க இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்க்.சமையல் கற்றுதந்தவங்களை மறக்காமல் இருக்க ஒரு நல்ல் த்ரெட். ஸ்டார்ட் பன்னுங்க. கதிஜா என்னக்கு ஒரு ப்ரெண்ட் இருக்கா ஜப்பானில் அவங்க பேர் sophy.

ஹாய் கதி இப்பதான் வாறேன்..ஒரே அரட்டை போல் இருக்கு?நாந்தான் அழைகின்றேனே நீ தான வர மாடிக்குன்றாய் சும்மாதானே ஊரில் இருக்கா அதுக்கு இங்கு வரலாமே?ஹா ஹா ஆமாமா அதெலாம் பழைய நினைவுகள்தான் அதே போல் இன்னும் ஒன்று ஒரு முறை உன் அம்மாக்கு உடம்பு முடியலன்னு பார்க வந்தேன் அப்ப நீதான் கோழிகறி சமைத்து வைத்து இருக்கேன்னு சொல்லி தந்தாய் நியாபகம் இருக்கா?அப்ப எனக்கு ஒரே பயம் இவ சமையலான்னு மறுத்தேன் பின் போர்ஸ் பண்ணி சாப்பிட வைத்தாய் சாப்டதும் பயந்தே போனேன் அவ்லோ டேச்ட் புரிந்து இருக்கும் ஹா ஹா அதும் உன் சமையலில் மற்க்க முடியாது..உன் அம்மா கையில் சாப்பிட்டு ரொம்ப வருஷ மாச்சு லாஸ்ட்டா ஊர் வந்தப்ப சாப்டேன் ரொம்ப சந்தோசமா இருந்தது..அந்த கோழிக்கறிக்கு பின் இதுவரை உன் சமையல்தான் எனக்கு தரல? :-(

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அந்த த்ரெட் ஆரம்பித்துட்டேன் அங்க வந்து உங்க பதிலை போடுங்க. எனக்கு அறுசுவை ஸ்லோவா இருக்கு உங்களுக்கு எப்படி இருக்கு. உங்க ப்ரெண்ட் இருக்காங்களா எந்த இடம்னு தெரியுமா தமிழ் தெரியுமா?உங்களை போல அவங்களுக்கும். எங்க ஜலீலா அக்கா,தளிகா மற்ற எல்லாரையும் காணோமே.

அன்புடன் கதீஜா.

ரேணுகா பிளைன் காஃபி ஸ்பெஷலிஸ்ட் போல இருக்கே,ஆக மொத்தம் காஃபி கொடுத்து ஆளை கவித்துவிட்டீங்க என்று சொல்லுங்க........

விஜி அப்ப்பாஆஆஆஆஆஆஅ வீட்டுல விசேஷ நேரத்தில எவ்வளவு பிஸியா உங்க அம்மா இருந்து இருந்த இட்லி சுட உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க .பாவம் இட்லி நிலைமையை நினைத்தேன்..............................விஜி இட்லி உங்களை பார்த்து ஏதோ சொல்லுது கேளுங்க "என்ன கொடுமை விஜி இது என்று" (சாரிப்பா ரொம்ப கலாச்சுட்டேன் நினைக்கிறேன்)

தீபா உங்கள் அம்மா,அப்பாவுக்கு கேக்கை கொடுத்து விரதத்தை கெடுத்த பெருமை உங்கள் அனைவரையும் சேரும்.ஆனால் புளி இல்லா ரசம் அனைவரும் விரும்பி சாப்பிட்டு விட்டு சித்திப்பெண்ணை குற்றம் சொல்லியாச்சி புளி இடாதவரை உள்ளவும் நினை,எனக்கு எல்லாத்தையும் விட அந்த முத்து லாடு மீது தான் கண்ணே,அதிலும் நான் உன்னை விடுவேனா? என்று போராடி ஒவ்வொரு ஜவ்வரிசியாக எடுத்து சாப்பிட்டேன் என்று சொன்னீர்களே எப்படி இருந்து இருக்கும்........ நமது முதல் சமையல் ஆசைதான் விடுமா?அதனோடு மல்லுகெட்டியுள்ளீர்கள்.

கதீஜா வாஆஆஆஆ வாங்க வாங்க ஒரு வழியாக மர்ழி யின் நூடுல்ஸ் இருந்து தப்பியவரை நினைத்து சிரிப்பாக தான் வருது.அதும் கஞ்சி தக்காளி சூப்பர்.

மர்ழி ,ஆஹா தோழியர் சேர்ந்தாச்சு,ஏன் மர்ழி கதீஜாவைதான் சாப்பிட கூப்பிடுவீங்க போல எங்களை எல்லாம் கூப்பிட மாட்டீங்களக்கும் ,அது சரிதான் (வா.... ங்க)"வா" என்று வாயை திறந்து "ங்க" என்று முடிப்பத்ற்குள் வந்து நிப்போம்ல (அதற்கு வேண்டி வாயை திறந்து பிரக்டீஸ் பண்ண தேவையில்லை)

விஜி, கதீஜா- திரெட் குள்ள மற்றொரு திரெட்ன் advertisement aaaaaaaaaaa அதையும் நான் பார்க்கட்டும்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் மகா நலமா?அனைவரும் குடும்பத்துடன் வருக போதுமா..ஹா ஹா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நாங்க நலமே,நீங்க எல்லாரும் எப்படி இருக்கிறீங்க,மிக்க நன்றி, அழைத்தற்கு,அதுவும் குடும்பத்தோடு அழைத்தற்கு.நிச்சயம் வருவோம்,நீங்க சென்னையில் தான் இருக்கிறீங்க...
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஆமாம் மஹா சென்னைதான்..ரொம்ப சந்தோசம் மஹா ஒரு சின்ன ரிக்கொஸ்ட் வரும் முன் சொல்லிட்டு வாங்க பிளீஸ் அப்பதான் வீட்டை விட்டு ஓட வசதியா இருக்கும் :-D

சும்மாப்பா கண்டிப்பா வஙக நீங்க எங்கு இருக்கீங்க..சொல்லுங்க உங்களை பற்றி!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழி

நீங்க ஓடலாம் என்றாலும் உடமாட்டோம்ல,2 மணிநேரம் கழித்து வாரோம் என்று சொல்லி விட்டு 1 மணிநேரம் முன்பு நாங்க ஆஜர் ஆகிவிடுவோம்.ஓ.கே விடுங்க,என்னை பற்றி கேட்டுயிருக்கீங்க
Names
pragatheeswaran (My hubby name)
mahalakshmi(My name)
yuuvanraj (our little master)1year3months
my native place is nagercoil,i finished my M.com and workin ngl for 4 years after i get marry 2005 and come to china, my hubby native is trichy.he work china for 8years,now v r in china-shoxing city,he is doing trading business here.my elder,younger sister in chennai perambur,one brother,my hubby have only one brother working in chennai,some relatives are also in chennai.i think now you get myself.Thankyou if get bored sorry for that

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

தளிகா/இலா/ரஜினி/மர்ழி/அதிரா/ரஸியா/வின்னி/அஞ்சலி/விஜி/சுபா/ரேணுகா/மாலி/பிரதீபா/கதீஜா

மிக்க நன்றி ,இந்த திரெட் மூலமாக உங்கள் அனைவரின் சமையல் அனுபவங்களை பார்த்து மிகவும் சந்தோஷமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்