முதல் குழந்தையை எப்படி சமாளிப்பது

நேற்று தான் டாக்டரிடம் கன்பார்ம் பண்ணி விட்டு வந்தேன்.ஏனோ தெரியவில்லை ரெம்ப படபட்ப்பாகவே உள்ளது.வாந்தி மயக்கம் எப்பொழுது இருந்து ஆரம்பிக்கும்.எனக்கு இது வரை இல்லை.இல்லாமல் இருந்து விட்டால் ரெம்ப நல்லது என்று நினைக்கிறேன்.வாந்தி மயக்கம் இல்லாமல் இருக்க ஏதாவது ஸ்பெஷல் உணவு இருக்கிறதா?குறிப்பாக காலையில் ஏதும் இல்லாமல் இருந்தால் நல்லது.என் பையனுக்கு இப்பொழுது தான் உடல் தேறி வருகிறது.எது சொன்னாலும் அழுகை வருது.என் கிட்ட தான் இருக்கனும்.என் மடியிலேயே படுக்கனும் என்று ஒரே வம்பு.கம்முன்னு படுத்தால் பரவாயில்லை,ஓரே ஆட்டாம் என் கிட்ட உட்காரத கீழே உட்கார் என்றால் ஒரே கோபம் வேறு.எப்படி இவனை சமாளிப்பது,இவனை நான் தூக்கலாமா? ஏதோ ஒரு சமயத்தில் தூக்கும் படியாக உள்ளது.என்ன செய்வது?
என்னுடன் யாரும் இல்லை.என் கனவரும் காலையில் சென்றால் இரவு 8 மணிக்குதான் வருவார்.

நான் முடியாமல் படுத்து விட்டால் என் வீடு அவ்வளவுதான்.அப்பாவுக்கும் பையனுக்கும் பெரிய யுத்தமே வந்து விடும்.அதனால் நல்ல வழி எதாவது சொல்லுங்கள்.எனக்கு ஒரு வருடம் முன்பு கல் பிரச்சனை இருந்தது.கல் வெளியே வந்து விட்டது.இப்பொழுது பிரச்சனை இல்லை.நான் கால்சியம் அதிகம் சேர்த்த கூடாது,இப்பொழுது நான் பால் குடிக்கலாமா?
துபாயில் இருப்பவர்கள் வெல்கேர் ஹாஸ்பிட்டலை பற்றி சொல்லுங்கள்.அங்கு டெலிவரி நன்றாக இருக்குமா?
எனக்கு முதல் குழந்தை துபாய் ஹாஸ்பிட்டல்.நன்றாக இருக்கும்.ஆனால் குழந்தைகளை உள்ளே விட மாட்டார்கள்.இப்பொழுது எனக்கு அது ஒத்து வராது.அதானால் வெல் கேர் ஹாஸ்பிட்டலின் டாக்டர் மற்றும் கவனிப்பு பற்றி சொல்லுங்கள்...

வாழ்த்துக்கள் ரேனு..ரேனு இப்பத்திக்கி ரொம்ப டென்ஷன் பட்டுக்காதீங்க..கவலையை விடுங்க..எனக்கு இந்த அனுபவம் இல்லாததால் எனக்கே படிச்சப்ப நெஞ்சு திக் திக்னு அடிக்கிது.
இருந்தாலும் சொல்லிக் கேட்டது வரை முதல் பிள்ளை மிதித்தாலும் வயிற்றிலுள்ள பிள்ளைக்கு எதுவும் ஆகாது என்பார்கள்..அது இயற்கையாக கடவுளாக கொடுத்தது..அதுக்காக ஏறி குதிக்கிர அளவுக்கு விடவும் வேனாம். தூக்கிக் கொண்டு நடப்பதை முடிந்த வரை தவிர்த்துடுங்க..காலைல கனவர் கிட்டயே குளிக்க வைக்க சொல்லுங்க..
இப்பவே ஒரு டால் வாங்கி அது கிட்ட கொஞ்சுர மாதிரி பன்னுங்க..இப்பவே ஒரு பாப்பா வர போகுதுன்னு சொல்லி புரிய வச்சுடுங்க.
லோ ஃபாட் பால் வாங்கி குடிங்க..இனி மத்ததை ரெண்டு குழந்தைக இருக்கரவங்க வந்து சொல்லுவாங்க..இப்ப பிசி இனி அப்ரமா வறேன்.

ஆகா ரேணுகா கழ்டம் தான் தான் மடியில் வைத்து கொள்ள வேண்டாம், ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது.
தூக்க வேண்டாம். மற்ற படி எரிச்சல் படாதீர்கள். லெமென் ஜூஸ்,ஆரஞ்சு ஜூஸ் குடிங்க, அல் மாயா லால்சில் ஆல்பகடா நட்ஸ் ஏரியாவில் இருக்கு அது வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு இன்சூரண்ஸ் இருந்தால் எந்தஹாஸ்பிட்டல் நாலும் பரவாயில்லை.
ஆனால் தூபாய் ஹஸ்பிட்டலும் ரொம்ப பெஸ்ட். சின்ன பையன் அங்கு தான் பிறந்தான்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ரேனு கன்க்ராஜ்...

நான் என்னத்த சொல்ல?சொல்ல நினைத்ததை கடெக்டா தோ இருவரும் சொல்லியாச்சு..ஹாஸ்பிடல் பற்றி எனக்கு சுத்தமா தெரியாது..தெரிஞ்சவன்ங்க சொல்லுவாங்க சரியா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்