தேதி: May 23, 2008
பரிமாறும் அளவு: 3
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டை - 2
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கிகொள்ளவும்)
தக்காளி - 1/2 கப் (பொடியாக நறுக்கிகொள்ளவும்)
பச்சைமிளகாய் - 1/4 கப் ((பொடியாக நறுக்கிகொள்ளவும்)காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்
அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய்துருவல் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் இவற்றை மேலே கூறியது போல் நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய்துருவல், மிளகாய்தூள், மஞ்சள்தூள், சீரகம், பூண்டு இவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் அதில் பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வத்க்கவும்.
கடைசியில் அரைத்த விழுதை போட்டு நன்றாக கிண்டவும். 1/2 கப் தண்ணீர் விட்டு கலவை ஒன்றாக வரும்வரை கிண்டவும்.
எல்லாம் சேர்ந்து வரும் போது முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் தேவையான அளவு உப்பும் போட்டு நன்றாக கிண்டவும்.
முட்டை கொத்து தயார், சப்பாத்திக்கு, ப்ரெட்டுக்கு தொட்டுக் கொள்ளலாம்.
தென்கோடி மாவட்டம் ஆன (கன்னியாகுமரியில்) நாகர்கோவில் கொத்து பராட்டா மற்றும் இந்த முட்டை கொத்தும் சிறப்பு.
Comments
மஹா மிக்சியில் கர கரப்பா
மஹா மிக்சியில் கர கரப்பா திரிக்கனும் என்றால் அதை தேவையான பொருளிலேயே ஒரு அன்டர் லைன் செய்து கான்பித்து விடுங்கள்
அப்ப படிக்க இன்னும் சுலபம்.
பொடிக்க என்பதை தனியாவும், தாளிக்க என்பதை தனியாகவும்.
உதாரனத்துக்கு என் குறிப்பை பார்த்து கொள்ளுங்கள்.
தால்சா, பச்சை வெஜ் குருமா, கருவாட்டு குழம்பு,செட்டிநாடு சிக்கன்
இதேல்லாம் பாருங்கல் உங்கலுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்,
பார்க்க கொச முசான்னு இருந்தா யாருக்கும் படிக்க பிடிகாது.
ஜலீலா
Jaleelakamal
ok Akka
ஜலீலா அக்கா
thankyou அக்கா நான் பார்த்தேன் உங்கள் குறிப்பை எப்படி தனித்தனியாக பிரித்து எழுதி இருக்கிறீங்க என்று,இப்போது மனசிலலாகிவிட்டது இந்த குறிப்பையும் இதே போல் மாற்றி விடுகிறேன் அக்கா.
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Very nice recipe
Hai,
Thanks for this delicious muttai kothu recipe. It was our sunday special and went very well with our dinner menu (home made chappathi & readymade parotta ). All your recipes are different and easy to prepare, especially for bachelors like me. Keep on posting different recipes.
So, you are also from Nagerkoil dist?
முட்டை கொத்து
மஹா,
இந்தக் குறிப்பு வித்தியாசமாக இருந்தது என்று சமைத்தேன். நன்றாக இருந்தது. நான் காரம் மட்டும் குறைத்துக் கொண்டேன்.
குறிப்புக்கு நன்றி.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்