சிம்பிள் சைட் டிஷ் சப்பாத்தி / பூரிக்கு

தேதி: May 24, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

பெரிய வெங்காயம் - 4
பெங்களூர் தக்காளி - 3
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
புதினாத் தழை - 1 கைப்பிடி
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழையை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து வதக்கி இறக்கும்போது சர்க்கரையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.


விருப்பப்பட்டால் கரம் மசாலா தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Akka ur reciepe is too good. thanks

Think Positively

Jayanthi mam

It's cooking time is very less & it is very tasty. My husband ate well & me also.

thank u
D.Menaga

Hello madam

This is very simple & superb dish. I prepared many times very tasty. Thank u so much mam...

D.Menaga

இன்னக்கி எங்க வீட்ல இந்த சைட் டிஷ் தான் பேஷ் சூப்பரா இருந்துச்சு. இன்னக்கி மாவு இல்லையா என்ன செய்றதுன்னு தெரியல சரின்னு சப்பாத்தி செய்யலாம்னு முடிவு செய்து பார்த்தா என்ன குருமா வைக்கறதுன்னு தெரியல உடனே இங்க வந்து பார்த்தேன் உங்க சைட் டிஷ் கண்ணில் பட்டது சூப்பர் மாமி சீக்கிரத்துல செய்து முடித்துட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி இன்னக்கி என்னோட ஆபத்பாந்தவன் நீங்க தான் நன்றி.

பின்னூட்டம் அனுப்பியதற்கு.
அன்புடன்
ஜெயந்தி மாமி

இரக்குவதற்கு 2 நிமிடம் முன் 4 பன்னிர் துண்டுக்ளை போட்டுப் பாருங்கள்!!
pkswamy

pkswamy

hi friends ,iam your new friend , this is my first day , i like this site very much. - meenu

- ROJA

சாரிப்பா உங்க பெயரை பார்த்ததும் இப்படி பாடனும் போல இருந்தது அதான் உணர்ச்சி வச் அபட்டுட்டேன்..வெலகம் டு அருசுவை வாங்க வாங்க வந்து ஜாமாங்க...மன்றத்துக்கு வாங்க

மாமி,ஆஹா இப்பதான் இது கண்ணில் பட்டது பண்னிடு சொல்லுறேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

HI Jayanthi,
very thx to u. dish is superb.

God Bless u
Niranjana

மாமி நலமாக இருக்கிறீங்களா? நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். சிம்பிளாகவும் நல்ல டேஸ்டியாகவும் உங்க ரெசிபிஸெல்லாம் இருக்கு. காலையிலே கைகொடுத்தது உங்க மைதாபூரியும், சிம்பிள் சைட்டிஷ் ம்தான். திடீர் விருந்தினர் வரவிருக்கிறார்கள்.ஏற்கனவே இதை பிரின்ட் செய்தபடியால் உடனே செய்து பின்னூட்டமும் கொடுத்துவிட்டேன். ரெம்ப நன்றி மாமி. உங்க ஐ.டி யை அட்மினிடம் கேட்டிருந்தேன். விரும்பினால் அவரிடம் தெரியப்படுத்தவும். அன்புடன் அம்முலு.

நன்றி.
என்னுடைய ஐடி, அரட்டை அரங்கம் பாகம் 10ல் இருக்கிறது. தேடி எடுத்து மெயில் பண்ணுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி இதை அன்னைக்கே செய்துட்டேன் மின்னூட்டம் போட மறந்துட்டேன்..ரொம்ப சிம்பிளா சூப்பவா இருந்தது தேங்ஸ் மாமி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

காய்கறி எதுவும் இல்லாதபோது செய்யக்கூடிய சுவையான டிஷ்.நன்றாக இருந்தது.
செல்வி.

சவுதி செல்வி

இன்று காலையில் இந்த குறிப்பினை சப்பாத்திக்கு செய்தேன். செய்வதற்கு ரொம்ப எளிமையாய் இருந்தது. டேஸ்டும் நல்லா இருந்தது. நன்றி மாமி!

நேற்று இரவு சப்பாத்திக்கு இந்த டிஷ் செய்தோம். துளி கூட மிச்சம் வைக்காமல் எல்லோரும் விரும்பி சாப்பிட்டோம்.

நன்றி ஜெயந்தி மாமி

அன்புடன்

சீதாலஷ்மி

மாமி
நேற்று இரவு உங்க சிம்பிள் சைட் டிஷ் செய்தேன் நன்றாக இருந்தது நிஜமாவெ ரொம்ப சிம்பிளா இருந்தது மாமி, கூட உங்க மேத்தி பூரி செஞ்சேன்,பூரிக்கு நன்றாக இருந்தது நன்றி மாமி.

மாமி நேற்று டின்னரிற்கு "சிம்பிள் சைட் டிஷ்" சப்பாத்திக்கு செய்தேன். சிம்பிள் & சூப்பர் எல்லோரும் விரும்பி சாப்பிட்டோம்.

உத்தமி:-)

நேற்று இரவு சப்பாத்திக்கு இந்த குறிப்பினை செய்தேன். (என் கணவர் எதாவது டிஃபரெண்டா செய்யேன் – உருளை கிழங்கு எல்லாம் போடாமல் என்று சொல்லவும், சட்டெனெ உங்க ஃபர்ஸ்ட் குறிப்பான இது என் நிபாகத்துக்கு வந்தது : ) பிறகென்ன?!, செய்து சாப்பிட்டாச்சு!. செய்வதற்கு ரொம்ப எளிமையாய் இருந்தது. டேஸ்டும் ரொம்ப நல்லாவே இருந்தது. குறிப்புக்கு நன்றி மாமி!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் ஜெயந்தி மாமி,
இன்றைக்கு தயாபகரன் அவர்களோட சப்பாத்திக்கு உங்க சிம்பிள் சைட் டிஷ் தான் செய்தேன்,வித்தியாசமா நல்லா இருந்துச்சு மேடம்.ஆனா சர்க்கரை போட மறந்துட்டேன்.ஆனாலும் நல்லா இருந்துச்சு மேடம்.உங்க குறிப்புக்கு நன்றி.

உங்களோட கேரட் பூரிக்கு இந்த சைட் டிஷ் ரொம்ப சூப்பரா இருந்தது. வித்தியாசமான டேஸ்ட்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மர்ழியா, செல்வி, சாய் கீதாலட்சுமி, சீதாலட்சுமி, கவி எஸ், உத்தமி, ஸ்ரீ, சுகன்யா, தனிஷா அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி