மறையாத உயிர்கள்

நமது வாழ்க்கையில் மறக்க முடியாத , இவ்வுலகத்தை விட்டு சென்றவர்களை பற்றி பேசலாம்..அதனால் மிகுந்த கவலையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்..மனதிலுள்ள பாரத்தை இறக்கி வைத்தது போல இருக்கும்,அவர்களைப் பற்றிய நினைவுகளை அசை போட உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்..தாத்தா,பாட்டி,மாமா,அத்தை என யாராயினும் சரி.

கதீஜா உனது தாத்தா மறைந்ததை நான் அறிவேன்..ஆனால் மெயில் செய்து துக்கத்தில் இருக்கும் ஒருவரை மேலும் சங்கடபபடுத்த வேண்டாம் மெதுவாக கேட்போம் என விட்டுவிட்டேன்.
எனது பாட்டி இறந்தபொழுது இப்படி தான் இருந்தேன் நான்.இறந்து நாலு வருடமாகியும் நான் அவரைப் பற்றி யோசிக்காத நாள் இல்லை.
நாள் செல்ல செல்ல துக்கம் வேனா குறையுமே ஒழிய அவர்களௌடைய நினைவு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்.
எனது தோழிகளில் பெரும்பாலானவர்கள் அவர்களுடைய பாட்டி,தாத்தாவை அந்த கெளவி,மண்டையப் போடும்போதுன்னெல்லாம் சொல்லிக் கேட்க்கும்பொழுது அறையலாம் போல வரும்...என்னடா இப்படி சொல்றாங்களேன்னு கஷ்டமா இருக்கும்.
அந்தளவுக்கு எங்கள் எல்லாருக்கும் பாட்டின்னா உயிர்.இன்ன ஆள் என்று இல்லாமல் எல்லாருடைய தேவைகளயும் பூர்த்தி செய்ய பாட்டியால் மட்டுமே முடியும்.
எங்களில் யாராவது ஒருவர் பாட்டியிடம் ஒரு முருக்கு கேட்டு அதை பாட்டியால் வாங்கி தர முடியாவிட்டால் கூட அதைப் பற்றி புலம்பிக் கொண்டு எப்படியாவது அதை கொண்டு சேர்த்து தருவார்.அவர் மறைந்தபொழுது நான் சரியாக இங்கே வந்த புதிது.என்னால் கடைசியாக பார்க்கக் கூட முடியவில்லை.
ஆனால் உள்மனசில் எனக்கு என்னவோ கெட்டது நடக்கப் போவது போல தோன்றவே நான் முந்தைய வாரம் தான் கூப்பிட்டு நிறைய பேசினேன்.அவர் செய்யும் எல்லா விஷயமும் அழகு தான் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
பாட்டிக்கு மேக் அப் பன்னி விட்டால் வயசாகாது அப்ப நீங்க இறக்க் மாட்டீங்க என்று நான் சிறு வயதில் தலையில் பாட்டிக்கு ரெட்டை ஜடை போட்டு,பூ வச்சு விட்டு ஹேர் பின் குத்தி விடுவேன்...நான் விளையாடட்டுமே என்று எதுவுமே சொல்லாமல் சிரித்துக் கொண்டே தலையைக் காட்டித் தருவார்.
என் பாட்டிக்க் ஷுகர் லெவெல் அதிகமாகி பல் எல்லாம் இளகவே இரு நாள் பல் எல்லாவற்றையும் அகற்றி விட அன்று என் பாட்டியைப் பார்த்து என்னால் தாங்க வே முடியவில்லை..எப்படியோ அடக்கிக் கொண்டு அன்று இரவு முழுவதும் முகத்தை பெட்ஷீட்டால் மறைத்துக் கொண்டு அழுதேன்.பல் போனதால் பாட்டிக்கு வயசானது அதனால் இனி உயிரோடு அதிகம் இருக்க மாட்டார் என்பது எனது அன்றைய நம்பிக்கையாக இருந்தது.
எல்லா பேரப் பிள்ளைகளுக்கும் பரீட்சை முடிந்தால் தவறாமல் ரிசல்ட் வரும் நாள் அன்று ஃபோன் பன்னி என்னவாயிற்று என்று கேட்பார்.இன்னின்னது என்றில்லாமல் எல்லா விஷயத்தைப் பற்றியும் பேசுவார்.
நாங்கள் பேரப்பிள்ளைகள் பாட்டியின் வாயைப் பார்த்துக் கொண்டே இருப்போம்.மறக்க முடியாத ஒரு இழப்பு அது.

அடுத்ததாக எனது கசின்.அவள் இறந்து இப்பொழுது 9 வருடமாகிறது..ஆனால் அவளை இனியும் 30 வருடம் போனாலும் முடியாது.
உருவத்தில் என்னைப் போல .அன்று அவளுக்கு 19 வயது.எனக்கு 15.பாவம் சரியான பயந்தாங்கொள்ளி ..நான் கதவுக்கு பின்னால் ஒளிஞ்சு நின்று ரொம்ப பயப்படுத்தியிருக்கேன்.
இடுப்பு வரை முடி அந்த முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருப்பேன்.என்னேரம் 32 பல்லையும் காட்டி சிரித்துக் கொண்டே இருப்பாள்.2 நாளாக காய்ச்சல் என்று அவள் வீட்டில் சொன்னார்கள்.காய்ச்சல் கூரையவே இல்லையென்று ஹாஸ்பிடலில் அட்மிட் பன்னலாம் என்றார்கள்..அதனால் நானும் பார்க்க சென்றேன்.படுத்துக் கொண்டே பேசினாள்.."சுத்தமா உடம்புக்கு முடியலடீ"என்றாள்.
ஹாஸ்பிடலுக்கு போனார்கள்.ட்ரிப்ஸ் போட்டார்கள்...10 நிமிடம் தான்"அம்மா எனக்கு என்னவோ ஆகுது என்றாள்"..அதோடு அடுத்த நிமிடம் மூச்சே நின்று போயிருந்தது.
இன்று வரை யாருக்கும் என்ன ஏது என்று புரியவில்லை.எல்லோரும் இப்பொழுதும் ஒரு வித அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள்..அவளை மறக்க இந்த ஜென்மத்தில் முடியாது...

தளிக்கா உங்க பாட்டிக்கு நீங்க செய்தது போல் தான் என் தங்கை (அவர்கள் நாலுவருடமா படுத்த படுக்கை அவரகளுக்கு என் தான் எல்லாம் செய்வார்கள் ஆனால் அவர்கலுக்கு காலையில் டிபன் கொடுப்பது என் தங்கை வேலை அவ என்ன பண்ணுவா ஊட்டி விட்டுட்டு தலைவாறி விடுவாள் அப்போது இரட்டை குதிரை வால் தூக்கி போட்டு, நல்ல பவுடர் போட்டு விடுவால் ஒவ்வோருநாள் ஒரு மாதிரியான ஹேர் ஸ்டைல் பண்ணி விடுவால் இது நடந்தது 1985 - யில் அப்ப அவளுக்கு வயசு 7.
நாங்க எல்லாம் மற்றவேலை பார்ப்போம் அப்ப சென்னையில் தண்ணீர் கழ்டம் வேறு வெளியில் போய் தான் எடுத்து வருவோம்.

அம்மா வுடைய அம்மா அவரகள் எனக்கு ரொம்ப தோஸ்த் மாஅதிரி இன்னும் கூட அவர்கள் கூட பேசியது பழகியது, அவரகல்ல் சொல்லி கொடுத்த கொஞ்சம் ரெஸிபி கூட கொடுத்துள்ளேன். நல்ல அறிவுறைகள், நிறைய மருத்துவ குறிப்பு இதேல்லாம் பொன்னேட்டில் தான் எழுத்னும்.
நானும் என் பாட்டியும் பிரெண்டா இருந்தது எல்லோருக்கும் பொறாமை வேறு நாங்க இரண்டு பேரும் பேசி கொண்டு இருந்தால் அய்யோ பாட்டியும் பேத்தியும் ஏதோ பேசி கொண்டு இருக்கிறார்கள் வாங்க பா போய் விடலாம் என்பார்கள், இன்னைக்கு நான் இவ்வளவு நல்ல இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவர்கள் தான். இன்றும் அவர்களை நினைத்து கொண்டே தான் இருக்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் தளிகா நல்ல த்ரெட் என் மனதில் உள்ள பாரத்தை எப்படி சொல்வது என்றே புரியலை அந்த அளவுக்கு எனக்கு தாத்தா பிடிக்கும்.எனக்கு ஸ்கூல் கூட்டி போய் சேர்த்துவிட்டதில் இருந்து எல்லாமே எனக்கு இன்னும் மறக்கவில்லை என்னை ஸ்கூல கூட்டிட்டு போவது என் தாத்தாதான். எங்கள் வீட்டில் நான்,தம்பி,தங்கை 3 பேருமே போட்டி தான் போடுவோம் யாருக்கு தாத்தா சாப்பாடு ஊட்டிவிடுவது என்று அப்புறம் சண்டை பிடிக்காதீங்க என்று எங்க 3 பேருக்குமே தனி தனியாக ஊட்டிவிட்ட பின்னாடி தான் அவங்க சாப்பிடுவாங்க. அதே போல நைட்ல தூங்கவும் சண்டை நடக்கும் நான் தான் படுப்பேன் தாத்தாகிட்டன்னு ஆனால் தம்பி சின்னவனால அவன்தான் ஜெயிப்பான்.எனக்கு வாசிக்க கற்று கொடுப்பாங்க எதுவும் தெரியலைன்னா நான் உடனே அவங்கட்டதான் கேட்பேன்.எல்லாமே சொல்லிதருவாங்க. சின்ன வயசுல நோன்பு பிடித்தால் கடைக்கு கூட்டிட்டு போய் சாக்லேட்லாம் வாங்கி தருவாங்க. எதையுமே மறக்கலை. எல்லாரையும் விட எனக்கு தாத்தா மேல் ரெம்பவும் பாசம் அதிகம் என் பாட்டி சொல்லுவார்கள் கதீஜா மட்டும் தான் பேத்தியான்னு.என்னை தாத்தாட பிள்ளைன்னு தான் சொல்லுவாங்க. எனக்கு திருமணம் முடிந்த பின்னாடி என் கணவர் கூடவும் பாசமாக இருப்பார்கள் அவங்களுக்கும் என் தாத்தான்னா பிடிக்கும்.என் பையனுக்கும் அவங்களை பிடிக்கும் இப்ப அவனுக்கு நல்ல எல்லாம் புரிஞ்சதால தேடுதுமா பூட்டிப்பாவைன்னு சில சமயம் சொல்லும் போது எனக்கு அழுகையாக வரும். அவங்க எங்களை விட்டு போய்டுவாங்கன்னே நினைக்கலை.யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்கக்கூடாதுன்னு நினைப்பாங்க இயலாவிட்டாலும் பாத்ரூம் போவேன்னு அடம்பிடிப்பாங்க. ஒரு 3 நாள் தான் எல்லாம் முடிந்துவிட்டது. திடீருன்னு யூரின் படுக்கைல போனது டாக்டரை கூப்பிட்டு காமித்ததுக்கு யூரின் டெஸ்ட் செய்து யூரின்ல பசல்ஸ் இருக்குதுன்னு சொன்னாங்க அப்புறம் டேப்லெட் போட்டு சரியாகிடும்னு பார்த்தால் பேச்சு மாறிட்டு எல்லாரையும் மறந்துட்டாங்க.எப்ப நடந்ததுலாமையோ நியாபகமா சொல்லுவாங்க அப்படி இருந்தவங்க எல்லாத்தையுமே மறந்துடுவாங்கன்னு நினைக்கலை. எனக்கு அவங்களுக்கு உடம்பு சரில்லாமல் படுக்கைல பார்த்ததுமே அழுதுட்டேதான் இருந்தேன் எனக்கும் லோ பீப் ஆகிட்டு. அதனால 2 வது நாள் என்னை யாரும் பார்க்கவிடலை. 3 வது நாள் இரவு 7.30 க்கு நான் பார்க்க போனேன் என்னையும்,பிள்ளையையும் தெரியலை நான் கூப்பிட கூப்பிட அப்படியே பார்த்துட்டு கண்ணீர் மட்டும் அவங்களுக்கு வந்தது நான் அவங்க தலையை வருடிவிட்டு கையை எடுத்து கிஸ் பண்ணிட்டு அழுதேன் என்னால் தாங்க முடியலை. அப்ப கூட எனக்கு நம்பிக்கை இருந்தது சரியாகிடும்னு பின் 8.30 க்கு தான் என் வீட்டுக்கு வந்தேன்.வந்து அழுதுட்டு இருந்ததை பார்த்து எல்லாரும் சத்தம் போட்டு அப்பதான் சாப்பிட்டேன் 10 மணிக்கு தாத்தாக்கு பல்ஸ் குறைந்துட்டுன்னு சித்தி பசங்க கூப்பிட்டு வந்தாங்க எங்க வீடும் சித்தி வீடும் பக்கத்துல தான் தாத்தா சித்தி வீட்லதான் இருப்பாங்க. உடனே போனேன் அங்க போய் பார்க்க யாரும் என்னை விடலை தாத்தா போய்ட்டதாக சொன்னதை கேட்டதும் நான் அப்படியே மயங்கி விழுந்துட்டேன். என்னை போட்டு எல்லாரும் பார்த்து டாக்டர் வந்து அப்புறம் நான் சரியானேன். என்னால் இந்த இழப்பை தாங்கவே முடியலை இப்பகூட இதை எழுதும் போது எனக்கு கண்ணீரை அடக்கமுடியலை.அவங்களை பார்த்தது,பேசினது அதனாலயே சித்தி வீட்டு பக்கம் போகாமல் இருந்தேன்.இப்பதான் அங்க போக ஆரம்பித்து இருக்கிறேன். அவங்க நியாபகம் வந்து அடிக்கடி என்னை கண்ட்ரோல் பண்ண முடியாமல் அழுதுடுறேன். எப்பவும் மறக்கமுடியாது ஆனால் எப்படி அந்த நியாபகத்தை மாற்ற முடியும்னு எனக்கு கஷ்டமா இருக்கு எனக்காக துஆ செய்யுங்க தளிகா.

அன்புடன் கதீஜா.

நான் இதில் இன்னும் யாரோட பதிவையும் பார்கல தளி நாளைதான் மெதுவா படிக்கனும் அதோட எனக்கும் பதிவுகள் இருக்கு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கவலைப் படாதே கதீஜா..உனக்கு சிறிதளவேனும் இந்த த்ரெட்டை பார்த்து எல்லோருடைய வாழ்க்கையிலும் நெருங்கியவர்கள் அவர்களை விட்டுப் போவார்கள் என உனக்கு கொஞ்சம் சமாதானம் கிடைக்கட்டுமென்று நினைத்தேன்..இப்ப நான் திரும்ப கிளறி விட்டது போல ஆகிடுச்சா கதீஜா.
என்னால் நல்ல புரிந்து கொள்ள முடிகிறது ..மர்ழியா சொன்னபின் நான் தினம் இரவு உன்னை நினைத்துக் கொண்டே படுப்பேன்..ஏனென்றால் இப்படி நெருங்கியவர்களின் மறைவால் பகலில் எப்படியாவது சமாளிக்கலாம் ஆனால் இரவில் தாங்க முடியாத அளவுக்கு துக்கம் தோன்டையை அடைக்கும்..இந்த 4 வருடத்தில் நான் இன்னும் மறந்த பாடில்லை.பெரும்பாலான இரவுகளில் அந்த நினைவு ரொம்ப வாட்டும் பேசாமல் எழுந்து வந்துடுவேன்..இன்றும் அதே கதை தான்..ஆஅனால் கண்டிப்பாக அந்த வருத்தம் மெல்ல குறைய்யும் கவலைப் படாதே..அவர்கள் செய்த நல்ல காரியங்களை மட்டும் யோசி..அய்யோ இனி அவர்களை பார்க்க முடியாதே என்று திடீர் திடீர்னு என்னவோ செய்யும் .
எனக்கு இப்பத்திக்கி ஒரே ஆறுதல் என் தாத்தாவும் என் இன்னொரு பாட்டியும்..அடுத்த முறை நான் ஊருக்கு போகிற வரைக்குமாவது அவங்களுக்கு எதுவும் ஆகிடக் கூடாது என்று தான் பரார்த்திக்கிறேன்.

அய்யோ கதீஜா எனகு அழுகையே வந்துட்டு உன் பதிவை பார்த்ததும்..எனக்கும் உன் தாத்தா ரொம்பவே பிடிக்கும் ஒருமுறை அவர்தான் நம் அனைவரையும் கேராளாக்கு அழைத்து சென்றார்..நியாபகம் இருக்கா?அப்பதான் அவர் எனக்கு அரிமுகம் என்னிடம் ரொம்ப பாசமா இருப்பாங்க..கடைசி முறை அவரை பார்கமுடியலன்னுதான் இன்னும் கவலை

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஒவ்வொரு பதிவையும் பார்க்கிறபோது, ஏதோ எமக்குத்தான் நடந்ததுபோல் ஓர் உணர்வுதான் ஏற்படுகிறது. நானும் எழுத வேணும் நேரம் கிடைக்கட்டும்.

தளிகா, இதன் தலைப்புத்தான் எனக்குச் சரியாகப் படவில்லை. உயிர்கள் என்று போட்டுள்ளீங்கள், நாம் உயிரினம் என்றால் விலங்குகள், பறவைகள்,.. அப்படித்தானே சொல்வோம்... அப்படித்தான் நினைத்து டைனோசர் போன்ற மறைந்துபோன உயிரினம் பற்றியதோ என ஓபின் பண்ணினேன்.... ஒரே கவலையாகப் போய் விட்டது

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நான் இன்னும் தளி,ஜலிலாக்க பதிவை பார்கல எனக்கும் இருக்கு சொல்ல போடனும் ஏம்பா அவங்கவங்காஎவ்லோ பீலிங்கா போட்டு இருக்காங்க உங்களுக்கு டைனோஜரா தெரியுதா?நக்கலா போச்சு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அவங்க உண்மையான உணர்வுகளோடதான் எழுதி இருக்காங்க... தப்பா நினைக்க வேண்டாம்...
எல்லாருக்கும் எப்படி ஆறுதல் சொல்லன்னு எனக்கு புரியலை... I hope time heals your heart.

ila

"I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்