உள்ளி பிரெட்சில் (Garlic Pretzel)

தேதி: May 27, 2008

பரிமாறும் அளவு: 10 - 12 பிரெட்சில்கள்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மா (all purpose flour)- 3 கப்
உள்ளி - 1 முழுதாக
ஈஸ்ட் - 2 பாக்கட்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீனி - 2 மேசைக்கரண்டி
உப்பு
பட்டர் - 3 மேசைக்கரண்டி
பார்ஸ்லி இலை - 1 மேசைக்கரண்டி


 

ஒரு கப் தண்ணீரை இளம் சூடு படுத்தி அதனுள் சீனி, ஈஸ்ட்டை போட்டு 5 - 10 நிமிடங்கள் விடவும்.
உள்ளியை தண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் அவித்து வடித்து பேஸ்ட்டாக்கி வைக்கவும்.
மாவை அரித்து(சலித்து) உப்பு சேர்த்து கிளறி வைக்கவும்.
பின்னர் ஈஸ்ட் கரைசல், மா, உள்ளி பேஸ்ட், எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவும் (10 நிமிடங்கள்)
பின்னர் பிசைந்த மாவை ஒரு எண்ணெய் பூசிய பாத்திரத்தில் போட்டு மா இரு மடங்காகும் வரை மூடி வைக்கவும். (45 - 60 நிமிடங்கள்)
பின்னர் ஊதிய மாவை எடுத்து சிறு சிறு பகுதியாக எடுத்து ஒரு பரந்த மேற்பரப்பில் வைத்து நீண்ட கோல் போல உருட்டவும். (மாவை மீண்டும் பிசைய வேண்டாம். அப்படியே கிள்ளி எடுத்து உருட்டவும்)
பின்னர் இதை பிரெட்சில் போல வடிவமைத்து ஒரு எண்ணெய் பூசிய தட்டில் அடுக்கி 15 நிமிடங்கள் வைக்கவும்.
அவனை 400 F இல் முற்சூடு செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் 3 - 4 கப் தண்ணீர் விட்டு அதனுள் சிறிது உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பொங்க பொங்க கொதிக்க விடவும்.
பின்னர் செய்து வைத்த பிரெட்சில்களை ஒவ்வொன்றாக கொதிக்கும் தண்னீரில் போட்டு திருப்பி உடனே எடுத்து 8 - 10 seconds) ஒரு பேப்பர் டவலில் போடவும்.
பின்னர் அவற்றை எடுத்து ஒரு எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் நன்கு இடைவெளி விட்டு அடுக்கவும்.
பின்னர் ஒரு பிரஷால் பட்டரை மேற்புறம் பூசி அதன் மேல் பார்ஸ்லி இலை, உப்பு தூவி முற்சூடு செய்த அவனில் வைத்து 10 - 15 நிமிடங்கள் அல்லது மேற்புறம் பிரவுண் நிறமாகும் வரை விட்டு எடுக்கவும்.
சுவையான பிரெட்சில்கள தயார். இதனை சல்சா, கிறீம் சீஸுடன் சேர்த்து மாலை அல்லது இரவு நேர உணவாக சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


உள்ளி பேஸ்ட் அல்லது உள்ளி பவுடரும் இதற்கு பாவிக்கலாம். உள்ளி சேர்க்காது சாதாரண பிரெட்சிலாகவும் செய்யலாம். அல்லது ஹலபீனோ பிக்கிள் சேர்த்து ஹலபீனோ பிரெட்சில் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நர்மதா நலமா?இதில் ஈஸ்ட் பாக்கெட் என்பது என்ன அளவு..இங்கு டின்னில் வாங்குகிறேன் சுமார் 1/2 கப் அளவுக்கு இருக்கும்.அதிகம் சேர்த்தால் ஒரு புளித்த வாடை வராதா

அன்பின் தளிகா, நான் நலமே. நீங்க நலமா? ஒரு பாக்கட் ஈஸ்ட் = 0.25oz = 2 1/4 தேக்கரண்டி. அதிகம் சேர்த்தால் புளித்த வாடை வராது. நானும் ஈஸ்ட்டின் அளவை குறைத்து செய்து பார்த்தேன் அவ்வளவு மென்மையாக வரவில்லை. ஆனால் நான் 1 மணித்தியாலம்தான் வைத்திருந்தேன். நீங்க விரும்பினால் ஈஸ்ட்டின் அளவை 3 தேக்கரண்டியாக போடுங்கள். ஆனால் சிறிது நேரம் கூடுதலாக பொங்குவதற்கு வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ரீமாக்கு செய்வதாக இருந்தால் மேலே பிளெய்ன் ஐஸிங் அல்லது சொக்லெட் ஐஸிங்/சிரப் ஆல் கிளேஸ் செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு பிடிக்கும். :)
-நர்மதா:)