வெண்மையான இட்லி செய்வது எப்படி???

நான் அமெரிக்காவில் வசிக்கின்றேன் ,அறுசுவைக்கு புதிய நபர். நான் உங்கள் அனைவருடனும் இணைந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நான் செய்யு இட்லி கொஞ்சம் மங்களாக இருக்கிறது. இட்லி நல்ல வெண்மையாக இருக்க என்ன சேர்க்க வேண்டும். தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.........

அன்புடன் சோஃபியா

ஹாய் சோஃபியா,கொஞ்சம் கஷ்டமான வேலைதான் இருந்தாலும் எனக்கு தெரிஞ்சத்தை சொல்ரப்பா,1/4பிடி உளக்கு 2உளக்கு அரிசி,100கிராம் தோலி உளுந்து இதுதான் கணக்கு, தோலிஉளுந்தை நல்ல ஊற வைச்சு தோலி எடுத்து அந்த பருப்பை பிரிஜுல1/4 நேரம் வைச்சுட்டு,நல்ல ஐஸ்வாட்டர் ஊத்தி பொங்க பொங்க 20நிமிஷம் வரைக்கும் அரைங்க போதும்,உளுந்து மாவு ரொம்ப கெட்டியாயிருக்க கூடாது கொஞ்சம் நெகிழமா இருக்கணும்,அரிசி மையா அரைக்கனும் மாவ அரைச்சு உப்பு போட்டு பிசைஞ்சு புளிக்க வைங்க.
மறுநாள் இட்லி அவிங்க, சும்மா வெள்வெள்ன்னு ரொம்ப ஸ்ப்டா இட்லி கிடைக்குங்க, நானும் அமெரிக்கலதான்யிருக்கேன்.
இன்னும் நல்லநல்ல ஆசோனைகள் தருவாங்க அருசுவை தோழிகள் வையிட் பண்ணுங்கப்பா
அன்புடன்
anjali

naturebeuaty

ஹாய் சோஃபியா,
இட்லிக்கு அரைகும் பொழுது 3 தம்பளர் இட்லி அரிசிக்கு 1 தம்பளர் ஊளுந்து( 3:1) போட்டு அரைக்கவும். 3:1 விகிதத்தில் போட்டால் குஷ்பு இட்லி மாதிரி இருக்கும்.( வெந்தயம் போட வேண்டாம்) வெந்தயம் போட்டால் நல்ல வென்மை நிறம் வராது.

Geethaachal

anjali,என் கேள்விக்கு பதில் தந்தமைக்காக மிக்க நன்றி!

நீங்கள் சொன்னது போல பருப்பை பிரிஜுல1/4 நேரம் வைச்சுட்டு,நல்ல ஐஸ்வாட்டர் ஊத்தி பொங்க பொங்க 20நிமிஷம் வரைக்கும் அரைத்தேன். வெண்மையான இட்லி கிடைத்தது.

ஹாய் geetha என் கேள்விக்கு பதில் தந்தமைக்காக மிக்க நன்றி!

அன்புடன்

சோஃபியா

1\4 படி உளக்கு அதை கிராமில் சொள்ளுங்களேன்? 3 நாட்கள் வரும்மாரு 2 பேருக்கு என்ன அளவு?

200கிராம் குத்துமதிப்பா சொன்னேன் எக்சாட்டா தெரியாதுப்பா.உங்களுக்கு 4நாளைக்கு வரும் திபு

naturebeuaty

hi i,m savitha living in Toronto.i enjoyed all of your arataies.i have two naughty kids .so epoo ellam time irukko naanum join panran
savitha

savitha

ஹாய் சவிதாபிரபு கண்டிப்பா கலத்துகங்க அ.சுவை அரட்டையில.
ஓ நீங்க டொராடோவிலாயிருக்கீங்க இந்தியாவில எந்த ஊர்?நீங்க விருப்பட்டால்..........

naturebeuaty

i'm from Tiruvannamalai.where r u from? how can we type in tamil?

savitha

அ.சுவை மெயின் பேஜுக்கு கீழே எழுத்துருவியை கிளிக் செய்யவும்.அதிலுள்ள தகவல் படி டைப் செய்யவும் .அதற்போது புளோரிடவில் வாசம்

naturebeuaty

மேலும் சில பதிவுகள்