மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண்ணை எப்படி தேற்றுவது?

என் மகளுக்கு 5 வயது ஆகிறது. மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். என்ன உணவு கொடுத்து அவளை தேற்றலாம்? அசைவ உணவு எனில் எந்த குறிப்பை செய்யலாம்? நான் சைவம் ருசி தெரியாது, அதனால் தான் கேட்கிறேன். வேறு நல்ல ஐடியா ஏதாவது இருந்தாலும் தாருங்கள். நன்றிகள் பல.

உங்க பொண்ணு நல்லா ஆக்டிவா இருக்காளா?ஆமான்னா வீண் கவலை வேணாம் என்னை பாருங்க அப்படி ஒரு ஒல்லி நான் கல்யானத்துக்கு பின் ஓரளவு குண்டாகிட்டேன்..என் அம்மா,அப்பாலாம் என்னனவோ பண்ணினாங்க இருப்பினும் நோ யூஸ்..தேற்ற உணவு தேடாதீங்க சத்தானதா கொடுங்க அது சின்ன வயதுக்கு முக்கியம்..சிக்கன் சூப்...காய்கறி மற்றது மைண்டில் இல்லை மூட் டல்லாகிட்டு..மற்றவர்கள் சொல்லுவாங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா சொல்வது உண்மை. அரோக்கியமாக இருந்தால் சரி. சராசரி / இருக்க வேண்டிய எடையை விட குறைவாக இருந்தால், நீங்கள் இங்கு ஆமெரிக்காவில் இருப்பதால் Carnation Breakfastmix வாங்கி பாலுடன் கலந்து தாருங்கள். Pediasure எடை ஏற்றும். பிறகு சீஸ், நெய், பருப்பு, பாதாம், முந்திரி, அவகாடோ, பனீர் , டோபு, வாழைப்பழம் தரலாம்.

இதில் அவகாடோ, டோபு முதலியவற்றை சப்பாத்தி மாவில் பிசைந்து விடலாம், ஒரு வித்தியாசமும் தெரியாது.

சப்பாத்தி, தோசை முதலியவற்றிக்கு நல்லா நெய்/நல்லஎண்ணெய் தாராளமாக ஊற்றவும்.

ஜலீலா அக்காவின் குறிப்புகளை பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/8378 (ஆப்பிள் ஹல்வா(குழந்தைகளுக்கு))
http://www.arusuvai.com/tamil/node/8348
வாழை பழ ஹல்வா(குழந்தைகளுக்கு)

என்ககு SK என்று ஒரு தோழி இருந்தால், விருப்பப்பட்டால் தங்களின் சொந்த ஊரே கூறவும்.

ஒல்லியா இருக்கும் குழந்தையை தேற்றுவது.
இன்று ஒரு புட்டு செய்தேன் அவ்வளவும் காலி ஹெல்தி புட்டு மிக்ஸ் என்று வாங்கி வந்ஹ்டேன்,அதில் இருந்த பொருட்களை சொல்கிறேன் முடிந்தால் கிடக்கும் பொருள் வரை வீட்டிலேயே திரிந்த்து கொள்ளுங்கள் (அ) ஊரிலிருந்து திரித்து வாங்கி கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்.
------------------

சம்பா கோதுமை
ராகி
பிரவுன் ரைஸ்
சோளம்
இன்னும் முன்று வகையான அரிசி(சரியா கவனிக்கல)
பாதம்
முந்திரி
கேரட்
துளசி
ஏலக்காய்
கம்பு

இதேல்லாம் சேர்ந்தது, இதை திரித்து நாம் புட்டு செய்வஹ்டு போல் செய்து.
அதில் தேங்காய் பூ,சர்க்கரை, நெய் , சிறிது பல், வாழபழம் போட்டு வெறவி ஊட்டி விடுங்கள்.

நான் நல்ல பார்த்து மறுபடியும் போடுகிறேன், அப்ப எத்தனை சத்துக்கள்.
நான் இதேல்லாம் திரித்து சத்து மாவு கஞ்சி தான் காய்ச்சி உள்ளேன் .
புட்டு ஆ சூப்பார் ரொம்ப அருமை எல்லாம் இன்று காலி எங்க விட்டில்.

ஊருக்கு போனா எல்ல குழந்தைகலுக்கும், வயதானவர் களுக்கும் சொல்லனும்.
வாரம் ஒரு முறை செய்து கொடுத்தாலே போதும் ,இல்லைபிடித்திருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட செய்து கொடுக்கலாம்,
அதே மதிரி வித்யா அழகா லட்டு மாதிரி வாழை பழத்தை உரித்து கையில் கொடுத்துள்ளார்.
அப்பரம் என்ன செய்து கொடுத்து தேற்றுங்கள்.
இன்னும் ஒன்று என் குறிப்பில் கிச்சிடி குழந்தைகலுக்கு என்று இருகும் அதையும் செய்து கொடுங்கள்.

டெலிலி ஒரு முட்டை அவித்து கொடுத்து விடுங்கள்.
சத்து மாவு பொடி என்று என் குறிப்பில் உள்ள்து அதையும் செய்து கொள்ளுங்கள் அதேல்லாஅம் ஒன்று கழ்டம் கிடையாஹ்டு ஒரு வாரத்திற்கு தேவையானது செய்து வைத்து கொள்ளுங்கள்.

பிறகு மைதா ரொட்டி (அ) கோதுமை மைதா கலந்த ரொட்டியில் சர்க்கரை முட்டை பால் முடிந்தால் பாதம் பிஸ்தா அக்ரூட் முந்திரி பொடி எல்லாம் திரித்து போட்டு நல்ல பிசைந்து ரொட்டி யாவோ பூறியாவோ செய்து அடுக்கு போட்ட ரொட்டி என்றால் அதில் சூடா பால் ஊற்றி ஊறவைத்து பத்து நிமிடம் ஊறீனால் சாஃப்டாக இருக்கும் ஒரு ரொட்டியாவது ஊட்டி விடுங்கள்.
இரவு வெரும் சாதம் பால் , வாழைபாம் சர்க்கரை சேர்த்து பிசைந்து ஊட்டி விடுங்கள்,

இதுக்கு மேலேயும் உங்கள் பொண்ணு தேறவில்லை என்றால் ஒன்றும் கவலை பட வேண்டாம் சத்து அவ்வளவும் போய் எலும்பில் சேர்ந்த்து விட்டது.

சூப் ரொம்ப நல்லது
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்