FLAX SEED

flax seed என்றால் என்ன? எப்படி சாப்பிடுவது

flax seed என்றால் அலி விரை அல்லது அலிசி விதை அல்லது சணல்விதையென்று சொல்லலாம்.
அலி விரையில் அடங்கியுள்ள சத்துக்கள் புரதம், கால்சியம், இரும்பு ,நார்ச்சத்து.

Omega-3 எனப்படும் fatty acid மீன்களில் கிடைக்கும்.
மீன்கள் சாப்பிடாதவர்கள் flax seed உண்ணலாம்.
omega3- HDL கொலஸ்ட்ராலை அதிகமாக்கி LDL கொலஸ்ட்ராலை குறைக்கும்.

Raw flax seed-ல் cyanate எனப்படும் substance இருகிறது அது உடம்புக்கு நல்லது கிடையாது எனவெ வறுத்து சாப்பிடுவதுதான் உகந்தது.நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.

flax seed meal என்று கடையில் கிடைக்கும் அல்லது வறுத்து பொடியாக அரைத்து கொள்ளலாம். நாம் காலையில் உண்ணும் பால் அல்லது cereals-சில் சேர்த்து சாப்பிடலாம்.தோசை, இட்லி, சாப்பாத்தி மாவில் கலந்து சமைக்கலாம்(60 gram அரிசி அல்லது கோதுமைக்கு 15 gram flax seed powder சேர்க்கவும்)

சட்னி:-
அலி விரை - 30 gms
கறிவேப்பிலை- 10 gms
உளுத்தம் பருப்பு- 15gms
துவரம் பருப்பு - 15gms
காய்ந்த மிளகாய் - 3 அல்லது தேவைக்கேற்றவாறு
உப்பு தேவைக்கேற்றவாறு
பெருங்காயம் சிறிது
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:
1.வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் பெருங்காயம் ,கறிவேப்பிலை,அலி விரை, உளுத்தம் பருப்பு, மிளகாய், துவரம் பருப்பு, ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
2.ஆறியபின் உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
3.கடுகு,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

அன்புடன் சோஃபியா

omega-3 எனப்படும் fatty acid மீன்களில் கிடைக்கும்
எனக்கு இந்த வரி புரியவில்லை சொல்லுங்களேன்.pls

மத்தி,சால்மன்,அயிலை,டூனா போன்ற மீன் வகைகளில் ஒமேகா3 என்ற சத்து கிடைக்கும்..இப்பொழுது இஃத ஃப்லக்ஸ் விதைகளை கொடுத்து கோழி வளர்த்து அது போடும் முட்டையில் ஒமேகா3 இருக்கிறது என்று விளம்பரமாக்கி விற்கிறார்களல்..மீன் சாப்பிடுபவர்களென்றால் அதிலிருந்தே அந்த சத்தைப் பெரலாம்..மூளை வளர்ச்சிக்கு நல்லதென நேற்று படித்தேன்.

தாளிகா பதில் தந்தமைக்காக மிக்க நன்றி!

அன்புடன்

சோஃபியா

Thanks Sofia என்னுடைய டாக்டர் தினமும் சாப்பிட சொன்னார் நாங்கள் ப்யூர் வெஜ். நான் ஒரு ஹெல்த் புக்கில் படித்தேன் இது பெண்களுக்கு ரெம்ப நல்லது என்று. எல்லா புக்கிலும் சீரியலில் சேர்த்து சாப்பிடத்தான் சொல்லியிருந்தாங்க நான் Oats l கலந்து சாப்பிடுகிறேன் ஆனால் போராக இருக்கு நல்லவேளை நீங்கள் ஒரு சட்னி ரெசிப்பி கொடுத்தீங்க மிக்க நன்றி இதில் வேற ரெசிப்பி இருந்தால் கொடுங்கள் once again thankyou so much

Flax Seed உடம்புக்கு நல்லது(not more than 2table spoon / day). நான் அரைத்த flax seed(whole grounded) வாங்கி உபயோக படுத்துகிறேன். புதினா துவையல், தளிகாவின் கலவை சட்னி மற்றும் எல்லா தேங்காய் சேர்க்கும் சட்னி/துவையலில் தேங்காயின் அளவை குறைத்து, அல்லது தவிர்த்து போடுவேன். சோப்பியா சொன்ன பிறகு தான் அதை வறுக்க வேண்டும் என்று தேரிந்து கொண்டேன். நன்றி சோப்பியா.

சோப்பியா சொன்ன மாதிரி தோசை, இட்லி, சாப்பாத்தி மாவில் கலந்து சமைக்கலாம்

Thanks Vidhya i'll try

காய்கறிக் கட்லெட் செய்யும் போது 2 ஸ்பூன் ஃப்லக்ஸ் மாவை சேர்த்து கொள்ளலாம்.

ஹலோ பிரண்ட்ஸ் இங்கு அமெரிக்காவில் flax seeds or flax seed meal எங்கே கிடைக்கும்?? நான் supermarketல பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை. can anyone help me please?

அமெரிக்காவில் எந்த மாதிரி கடையில் flax seeds கிடைக்கும் ??? யாருமே என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை !!! ஹலோ பிரண்ட்ஸ் யாராவது ஒருத்தர் பதில் சொல்லலாமே ??

மேலும் சில பதிவுகள்