வீக்கம் குறைய

எனது 1 வயது குழந்தை கீழே விழுந்து நெற்றியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது நன்கு அழுத்தி தேய்த்தும் குறையவில்லை என்ன செய்வது? anybody online please help she is crying bitterly and now i had made her sleep

குழந்தைக்கோ பெரியவங்களுக்கோ கீழே விழுந்தால் உடனே ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றியோ அல்லது நேரடியாகவோ அடிபட்ட இடத்தில் ஒரு 5 நிமிஷம் வைக்க வீக்கம் போய்விடும்.
எப்பொழுதும் குழந்தை உள்ளவர்கள் ஐஸ் கட்டிகளை ஒரு பாக்கெட்டில் போட்டு ஃப்ரீசரில் வைத்திருங்கள்
கைய்யால் அழுத்தித் தேக்கவோ அமிர்தாஞ்சன்,பாம் என தேய்க்கவோ கூடாது..ஐஸ் கட்டியே போதுமானது ஆத்திர அவசரத்துக்கு ஏதாவ்து ஃப்ரோசென் பொருட்களின் பாக்கெட் இருந்தால் அதையும் வைக்கலாம்.
அப்படியே அழுத்தி வச்சுட்டே இருந்தால் கஷ்டமா இருக்கும்..அழுகும்..வைத்து வைத்து எடுங்கள்..ரெண்டு கட்டியை கைய்யில் விளையாடக் கொடுங்க அழுகை நிக்கும்..
மண்டை உடைந்து ரத்தம் வந்தால் கூட ஐஸ் வைத்தால் ரத்தம் நிற்கும்.
மருத்துவர்களே அதைத் தான் சொல்லுவார்கள்.
சின்ன வீக்கம் எல்லா குழந்தைக்கும் இடையிடையே வரும் பயம் வேண்டாம்..

அய்யோ சரண்யா அப்படீயா பாவமே அழுத்தி தேய்க்க கூடாதும்மா..ரொம்ப வீக்கமா?எதில் இருந்து விழுந்தா?லேசான வீக்கம்னா அமிர்தாஞனை ரொம்ப லேசா எடுத்து போடுங்க..அய்யோன்னு ந்னு த்லையில் கை வைத்துட்டு பீலிங்கில் இருக்க வேணாம்...அவங்களுக்கு அடித்த் இருப்ப்பதையே மறக்க விடுங்க..ஒன்னும்மே இல்லைன்னு இப்படி ஆருதலா பேசி மறக்க விடுங்க அப்ப அழாது

ரொம்ப வீக்கம்னா வைக்க கூடாது அட்தோட வாமிட் ஏதும் பண்ணினாலும் அசால்ட் கூடாது டாக்டர்ட உடனே போங்க சீக்கிரம் பாவமா இருக்கு இப்பதான் பார்த்தேன் உங்கா பதிவை

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரொம்ப லேசா அமிர்தாஞ்சன் போடலாம் 1 வயது ஆகிட்டு தப்பில்லை...ஆமாமா ஐஸ் கட்டி மறந்துட்டேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

குழந்தை விழுந்த பின் தூங்கினாலோ வாந்தி எடுத்தாலோ அல்லது பேச கஷ்டப்பாலோ ,தலை வலி என்றாலோ,கண் ஒரு மாதிரி இருந்தாலோ மருத்துவரை அனுகவும்
ஆனால் விழுந்து ரொம்ப அழுதாலும் வான்தியும் எடுக்கும் தூங்கவும் செய்யும் அது பயமில்லை..ஆனால் தொடர்ந்து செய்தால் கவனிக்கனும்

சுசீலா விழுந்ததும் உடனே என்றால் அழுத்து தேய்க்கலாம், வீக்கம் குறையும்.

இப்போது தளி சொன்ன மாதிரி ஐஸ் கட்டியை ஒரு கர்சீப்பில் கட்டி அதில் வையுங்கள்.
வீங்கிய இடத்தை சுற்றி தான் தைலம் நலல் தேக்கனும் வீங்கிய இடத்தை அழுத்தாதீர்கள்.

இன்னும் ஒன்று சுடு சாதம் ஒத்தடமும் கொடுக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

நேற்று என் குழந்தை மாடி படியில் இருந்து உருண்டு கிழே விழுந்து நான் கிச்சனில் இருந்தேன் நல்ல சத்தம் அதை கேட்டு ஒடி வருவதற்க்குள் கிழே விழுந்து அழுது அழுது தாங்க முடியல்லை. நான் உடனே ப்ரிசரில் இருந்த ஐஸ் பாக்கை தான் வைத்தேன். தலையில் கொஞ்சம் வீங்கியிருக்கு. இதை பார்த்தவுடன் உடனே பதிவு போட வந்தேன். இன்றும் வலி என்று அழுகிறதுப்பா. கஷ்டமா இருக்கு

தளிகா சொன்னதைப் போல் ஐஸ் வைய்யுங்கள். வீக்கம் சிறிது வடிந்த பிறகு, ஐயோடைக்ஷ் (IODEX) தடவுங்கள். குழந்தைக்கு எரிச்சல் எற்படுத்தாது, வீக்கம்/ இரத்தகட்டு இருந்தால் குறையும். மறு நாள் காய்ச்சல் இருந்தால் அவசியம் டாக்டரிடம் செல்லவும்.

அய்யயோ விஜி.மாடியில் ஏராம இருக்க வழி எதுவுமில்லையா..இனியும் ஏறும் விழுகும் பாத்துக்குங்க...அது ஒன்னும் ஆகாதுன்னு நல்ல தெரிஞ்சாலும் நம்ம குழந்தைக்கு வந்தா நமக்கு தாங்காது.ஐஸ் கட்டியே போதும்..இப்ப எனக்கு இடிக்குது.என் அப்பா சொல்வார் ஐயோடெக்ஸ் போடக்க் கூடாதுன்னு..ஏன்னு தெரீல..அதனால் நானும் போட்டதே இல்லை..இப்ப போடலாமா இல்லையான்னு தெரியலை

ஐயோடெக்ஸ் குழந்தைகளுக்கு போட கூடாதா? என் குழந்தைக்கு வீக்கம் ஏற்பட்டால் போடுவேனே-- தளிகா/ தெரிந்தவர்கள் கூறுவீர்களா?

அட்மின் பாருங்க.நீங்க இது பற்றி முன் ஒரு முறைபேசியிருக்கீங்க

http://health.howstuffworks.com/lucid-dreaming2.htm

மேலும் சில பதிவுகள்