தூக்கம்

நான் இப்பொழுது 6 மாதம் கர்பமாக உள்ளேன்.அடிக்கடி உடல் சோர்வாகிறது.மதியம் தூக்கம் தல்லுகிறது.என்ன செய்யலாம்?

தாயாக போகும் உங்களுக்கு என் வாழ்த்துகள்..

அடடா அம்பிகா இது இயல்பே..ஒன்னும் பண்ன வேனாம் நல்லா தூங்கி எழும்புங்க :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அம்பிகா ஒன்றும் கவலை வேண்டாம் தூக்கம் வந்தால் துஙகுங்கள்.
சில பேர் தூங்கிக்கொண்டே தான் இருப்பார்கள்.
ஜலீலா

Jaleelakamal

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே

இது குழந்தைக்கு மட்டும் இல்லை. அம்மாக்கும்தான்.
அம்பிகா நல்லா தூங்கிக்கங்க. குழந்தை பிறந்தப்புறம் தூக்கம் கிடைக்காதான்னு ஏங்கிடுவோம்.

நல்ல முறையில் குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹா ஹா ஜெயந்திமாமி பாட்டு சூப்பர்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹே ஹே சூப்பர் சூப்பர் நல்ல இருக்கு மாமி பாட்டு நான் கைதட்டின சத்தம் கேட்டுதா?

திருமதி. அம்பிகா
தயவு செய்து தூக்கம் வந்தால் நன்றாக தூங்கிவிடுங்கள். நீங்கள் வேலைக்குச் செல்பவரா, இல்லையெனில் தூக்கம் வரும் போது தூங்கிவிடுங்கள். ஏன் எனில் என் பெண்ணுக்கு 7 மாதம் ஆகிறது. இன்று வரை எனக்கு இரவில் சரியான தூக்கம் இல்லை. அதிலும் நான் வேலைக்கு போகிற ஆள். யோசித்துப் பாருங்கள் எப்படி இருக்கும்?
என் குறைந்த பட்ச அனுப்வத்தில் சொல்கிறேன். நன்றாக தூங்கிவிடுங்கள்.

உங்கள் அனைவரின் கருத்திற்கும் மிக்க நன்றி.எனக்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது.நன்றி......................................................................................

dear ambika .இங்க பொன்னு பிறந்து ரெண்டு வருஷமாச்சு இன்னும் சரியா தூக்கம் இல்ல..கண் சில சமயம் சொக்கி தலை டிங் டிஙுன்னு ஆடும் அப்பவும் இந்த மஹராசி என் முடியை புடிச்சு ஆட்டுவா.இல்லன்ன கண் மூடின அடித்த நொடி டம்முன்னு இடி மாதிரி எதையாவது தூக்கிப் போடுவா..இப்பவே தூங்கிடுங்க.
ஜெ இப்ப என் வகையில்

"தூக்கம் கண்களை தழுவட்டுமே
அமைதியுன் நெஞ்சில் நிலவட்டுமே"
;-D

வாழிவில் இதே மாதிரி ஒரு சந்தர்பம் கண்டிப்பா குழந்தை பிறந்த பிறகு கிடைக்காது. நல்ல துங்கி எழுங்க. எனக்கு தூக்கம் என்பது இரவில் 5 மணிநேரம் நல்லா தூங்க முடியுது என் குழந்தைகளோட போராடி டய்ர்டாகி எப்படா துங்கபோறோம் என்று இருக்கு. சில நாள் நான் என்ஹஸ் கிட்டே சொல்லி இருக்கேன். எனக்கு இந்த வீட்டில் தூங்க கூட முடியமாட்டேங்குது.நல்ல துங்கி எழுங்க.

தளிகாக்கா,நானும் 6 மாதம் கர்ப்பமா இருக்கேன்.எனக்கும் இப்படி தான் தூக்கமா வருது.எனக்கு ஒரு சந்தேகம்.கிளியர் பன்னுங்க.எல்லோரும் சொல்ரங்க கர்பிணி பொன்னுங்க ஒருக்களித்து தான் படுக்கனும் என்று.மல்லாந்து படுக்க கூடாது று.விளக்கம் தேவை .பிளிஸ் சிக்கிரம் பதில் சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்