நான் அறுசுவைக்கு புதிய நபர்... நான் இங்கு இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி...
என்னுடைய திருமணம் காதல் திருமணம். எங்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது, ஒரு வருடமாக நாங்கள் கூட்டு குடும்பமா இருந்தோம் என்னோட அத்தை தான் சமையல் செய்வாங்க.. நானும் கூட உதவி செய்வேன் அவ்ளோ தான்.. இப்போது ஒரு வாரம்மாக நாங்கள் தனி குடுத்தனம் வந்துருகொம்.. எனக்கு சமையல் அனுபவம் இல்லை... நான் செய்யும் குழம்பு வித்தியாசமா இருக்கிறது.. என்னுடைய கணவர் எந்த குறையும் சொல்லாமல் சபிடுவர்... ஆனால் நான் செய்யும் குழம்பு எனக்கே புடிக்காது ப்ளீஸ் எனக்கு உதவி செய்யுங்கள். எனக்கு தெரிஞ்சது தக்காளி குழம்பு, சிக்கன் குழம்பு, சாம்பார், முட்டை குழம்பு அவ்ளோ தான், ஆனால் இதுவும் சரியா வராது. எந்த குழம்பு செய்தலும் தக்காளி வாசம் வருது இல்ல மிளகாய் வாசம் வருது.. என்ன பண்றது. கொஞ்சம் சுலபமா சமைக்க்ரமாதிரி எதாவது இருந்த சொல்லுங்க ப்ளீஸ்.....
அன்புள்ள
hi தமிழரசி
புதிதாக சமைக்கும் போது இது போன்ற குறைகள் இருக்கலாம். அதற்காக மனம் தளராதீர்கள் .அறுசுவையில் சமையலில் நீண்ட காலம் அனுபவம் உள்ள திறமைசாலிகளின் நூற்றுக்கணக்கான குறிப்புகள் உள்ளன. அந்த குறிப்புகளில் எளிமையானதாக இருக்கும் குறிப்பினை முதலில் செய்து பாருங்கள்.இரண்டு பேருக்காக சமைக்கும் போது குறிப்புகளில் உள்ள அதற்கான அளவுகளை குறைத்து கொள்ளுங்கள். யாரும் சமைக்கலாம் பகுதியில் உள்ள குறிப்புகளை முதலில் செய்து பார்க்கவும்.படங்களுடன் இருப்பதால் உங்களுக்கு சமையல் செய்ய எளிமையாகவும் , ஆர்வமாகவும் இருக்கும்.விரைவிலேயே சமையல் பிரமாதமாக சமைக்க கற்று கொள்வீர்கள் .
நட்புடன் mdf (பாத்திமா)
நன்றி
பாத்திமா அக்காக்கு நன்றி எனக்கு உடனே பதில் அனுபுனத்துக்கு.. நான் ட்ரை பண்ணி பாக்குறேன் அக்கா...
தமிழரசி
தமிழரசி
ஹாய் தமிழரசி
இப்போதான் உங்க பதிவு பார்த்தேன்.அக்கான்னு கூப்பிட வேணாமே ப்ளீஸ் .பெயர் சொல்லி கூப்பிடலாம். நானும் சின்ன வயசுதான்.
நட்புடன் mdf
தமிழரசி
தமிழரசி இப்ப தக்காளிக் குழம்பு செய்முறை சொல்கிறேன் எளிமையாகவும் சுவையாகவும்
2 தக்காளியை நறுக்கி அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்+ 1 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து 1/4 கப் தண்ணிர் விட்டு மூடி போட்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க விடுங்கள் தக்காளி வெந்து உடையும் வரை.
பிறகு தேங்காய்த் துருவல் 1 கப்(1/2 மூடிக்கும் சற்று குறைவு) அதனுடன் 2 சின்ன வெங்காயம் சேர்த்து மைய்யாக அரைத்து மேலே செய்ந்த வெந்த தக்காளியுடன் ஊற்றுங்கள்.பிறகு கொதிக்க விடுங்கள்..ஒரே ஒரு கொதி வந்ததும் ஆஃப் பன்னி விடுங்கள்.
வேறொரு பேனில் தேங்காய் எண்ணை 1 ஸ்புனை காயவைத்து அதில் 1/2 ஸ்பூன் கடுகு,2 கொத்து கறிவேப்பிலை போட்டு மொருமொருவென தாளித்து குழன்பில் கொட்டுங்கள்..இது சாதத்துடன் அருமையாக இருக்கும்
அல்லது ஏதாவது விருப்பமுள்ள குழம்பை ருசியாக செய்து பார்க்க ஆசையிருந்தால் சொல்லுங்கள் உதவுகிறோம்.
தமிழரசி, ஆல் த பெஸ்ட்
தமிழரசி, இந்த அருசுவைக்கு வந்தீட்டீங்க இல்லை இன்னும் முன்றே மாதத்தில் அசத்தல் குக் ஆக போறிங்கள்.
கூட்டாஞ்சோறில் நிறைய பேர் குறிப்பு கொடுத்துள்ளார்கள் எந்த குறிப்புக்கு செய்து பார்த்து எல்லாம் பின்னூட்டம் தருகிறார்கலோ அது கண்டிப்பா நல்ல இருக்கும், ஒன்னு ஒன்னா செய்து பார்ங்கள், வகை வகையா, ரசத்திலும், குருமாக்கிலும், சாம்பாரும் நிறைய இருக்கும் பருங்கள்.
அப்பரம் யாரும் சமைக்கலாமில் படத்துடன் நிறைய சகோதரிகள் விளக்கி உள்ளார்கள் மெதுவா ஒன்னு ஒன்னா செய்து பாருங்கள் பார்த்து சுவையை பற்றி அந்த குரிப்புக்கு கீழேயே தெரிய படுத்துங்கல்.
ஆல் த பெஸ்ட்
ஜலீலா
Jaleelakamal
சரி
சரி சிக்கன் குழம்பு செய்முறை சொல்கிறேன்.
2 பேர் தானே அரைக்கிலோ சிக்கன் போதும்.அதன் அளவு தருகிறேன்.
2 பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள்
எண்ணை 3 டேபில்ஸ்பூன் காயவைத்து அதில் வெங்கயத்தை கொட்டி+2 கொத்து கற்வேப்பிலை சேர்த்து இளம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
வதங்கியதும் அதனுடன் இஞ்சி&பூண்டு விழுது 1 டீஸ்பூன் சேர்த்து பச்சை வாடை போடும் வரை சுமார் 4 நிமிடம் வதக்கவும்
பின் 1 தக்காளி +1 ஸ்பூன் மிளகாய்த் தூள்+1/2 ஸ்பூன் மல்லித் தூள்+உப்பு 1 ஸ்பூன்+குருமிளகுத் தூள்- 1/2 ஸ்பூன்+ஜீரகப் பொடி ௧/4 ஸ்பூன்+பெருஞீரகப் பொடி - 1/4 ஸ்பூன் +கரம் மசாலா தூள் - 3/4 ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்..
பிறகு சிக்கன் துண்டுகள் சேர்த்து மூடி இடாமல் மசாலாவுடன் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்
பிறகு தீயைக் குறைத்து மூடி இட்டு 25 நிமிடம் வேக விடவும்
அதன் பின் தண்ணீர் நிறைய வெளியாகு இருக்கும்..மூடி திறந்து தீயை கூட்டி மேலும் 15 நிமிடம் நல்ல கொதிக்க கொதிக்க தண்ணீர் வற்றும்.
சுவையான குழம்பு ரெடி...இது கெட்டியான வகை..கொஞ்சம் அதிகமாக சப்பாத்தி,இடியபம் என்று வேண்டுமென்றால் 1 கப் தேங்காய்ப்பாலை கடைசி 10 நிமிடத்திற்கு முன் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
கரம் மசாலா பொடிக்கு பட்டை,கிராம்பு,ஏலம் சேர்த்து பொடிக்க வேண்டும் கொஞ்சம் அதிகம் பொடித்து வைத்தால் வேலை சீக்கிரம் ஆகும்
hai
hai tamil,
nanum intha site ku pothusu tha da. friend okva
melagai thol vasam iruku nu soldra appo kolmbu nalla kothekalla ok nalla kothecha antha vasam varathu .(oru tips) yentha kolambu vachalum nalla kothecha peragu slim la oru 10 min vacha taste nalla irukum thakalli kolambu na yappadi kara kolambu mathriya appai eruntha melagu thul pota meen kolambu matheri irukum ennum freea irkum pothu anupuran ok take care bye.........
ஹலோ தமிழரசி
ஹலோ தமிழரசி,
அறுசுவைக்குப் புதுசா நீங்க. வாங்க, வாங்க. சமையல்ல ப்ராபளமா கவலையே வேண்டாம். யாரும் சமைக்கலாம் பகுதியில ஸ்டெப் பை ஸ்டெப்பா ஒவ்வொரு ஐடட்டமும் எப்படி சமைக்கிறதுன்னு படத்தோட காமிச்சு இருக்கு. போய்ப்பாருங்க,சமைச்சு சும்மா ஜமாய்ங்க.
Rajini
நன்றி thalika
நன்றி thalika நீங்க சொன்ன மாதிரி செய்து பார்த்தேன்.. மிகவும் அருமையா இருந்துச்சு. ரொம்ப நன்றி... pa.. என்ன கணவர்யிடம் இருந்து பாராட்டு பெற்றேன்... என்னோடைய பாராட்டு உங்களுக்கு நன்றி
தமிழரசி
தமிழரசி
நன்றி
நன்றி.. கண்டிப்பா செய்து பார்கிறேன்..
தமிழரசி
தமிழரசி