தேதி: June 7, 2008
பரிமாறும் அளவு: 4
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ரவை - 3 கப்
பச்சரிசிமாவு - 3 கப்
தேங்காய் துருவல் - 2 கப்
வெல்லம் - 5 கப் (பொடிபண்ணியது)
முட்டை - 3
ஏலக்காய் - 4
நெய் - 3/4 கப்
ரவை, பச்சரிசி மாவு இரண்டையும் நன்றாக கலந்து மிக்ஸியில் ஒருமுறை ஓட்டவும்.
அதன் பின் தேங்காய் துருவல் மற்றும் வெல்லத்தையும் போட்டு, முட்டையும் உடைத்து ஊற்றி, மறுபடியும் மிக்ஸியில் போட்டு ஓட்டிவிட்டு கெட்டியான மாவு பதத்தில் எடுக்கவும்.
ஏலக்காயை தூள் செய்து போடவும், மாவு பணியாரம் செய்யும் பதத்தில் இருக்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்)
அடுப்பில் குழிப்பணியாரம் கல்லை வைத்து நெய்விட்டு கலந்த மாவை குழியில் கொஞ்சமாக விட்டு நன்றாக இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான மற்றும் எளிமையாக செய்யக்கூடிய பணியாரம் தயார்.
Comments
maha madam and other friends
இதுல முட்டை போடுறதுல விருப்பம் இல்லை முட்டை போடாமல் செய்யலாமா? கொஞ்சம் சொல்லுங்களேன் இன்று மாலை செய்ய வேண்டும் அதற்கு கேட்கிறேன். நீங்கள் பார்த்தீர்களானால் சொல்லுங்கள் ல்லது வேறு யாருக்காவது தெரிந்தாலும் சொல்லவும்.
தீபா முட்டை
தீபா முட்டை போடாமலும் செய்யலாம்.
வேண்டுமால் இட்லி சோடா கால் தேக்கரண்டி சேர்த்து கொள்லுங்கள்.
அது புஸுன்னு பந்து மாதிரி வர தான் முட்டை, எனக்கு தெரிந்தது இது தான் பார்க்கலாம் மகா என்ன சொல்கிறார் என்று.
ஜலீலா
Jaleelakamal
தீபா/ ஜலீலா அக்கா
தீபா/ ஜலீலா அக்கா
எப்படியிருக்கிறீங்க? தீபா, ஜலீலா அக்கா சொன்னமாதிரி தான் முட்டை சேர்ப்பது புஸ் என்று வருவதற்கும் ஒரு Richness flavour ருக்கும் தான்.எனது மாமியார் non - veg எடுக்கமாட்டார். அவர் 1சிட்டிகை சோடாஉப்பு சேர்ப்பார்.சிலபேருக்கு முட்டை smell அதிகம் வேண்டாம் என்றால் 1முட்டை, மற்றும் சோடா உப்பு 1 சிட்டிகை சேர்த்துக்கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் பார்த்துவிடவும்.
ஜலீலா அக்கா ரொம்ப நன்றி தீபாவின் அவசர கேள்விக்கு பதில் கொடுத்ததற்கு.நான் இப்பொழுதுதான் அறுசுவைபக்கம் வருகிறேன்.
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
மஹா
மஹா எப்படி இருக்கீங்க. இப்போத்தான் அறுசுவைப்பக்கம் காத்து வாங்கலாம்ன்னு வந்தேன். நீங்க என்ன சன்டே கூட இங்க வந்து இருக்கீங்க. வேலையெல்லாம் முடிஞ்சுதா?.
Rajini
Hai Rajini
ரஜினி நன்றாக இருக்கிறேன்,நான் சண்டே பொதுவாக அறுசுவை பக்கம் வருவதில்லை வீட்டில் வேலை இருக்கும்,அவங்களும்(ஹஸ்பண்ட்) இருப்பாங்க.ஆனால் அவர் வேலை விஷயமாக வெளியூர் போய்யிருப்பதால் தான் அறுசுவை பக்கம் வந்தேன்.ரஜினி நீங்க எங்கே இருக்கிறீங்க........... US யா?
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
நன்றி மகா மேடம், ஜலீலா அக்கா
முட்டை சேர்க்கல மேடம் சோடா உப்பு சேர்த்து தான் செய்தேன். நான் எதிர்பார்த்ததை விட நல்லாவே வந்துச்சு, உங்களுக்கு தான் நன்றிகள் நிறைய சொல்லனும். சாஃப்டாவும் டேஸ்டாவும் இருந்துச்சு. உங்களோட அந்த கோதுமை கேசரி செய்ய போறேன் செய்துட்டு சொறேன். உங்களுக்கு பையன் தானே எப்படி இருக்கான்?
ஹாய் தீபா
ஹாய் தீபா
மிகவும் சந்தோஷம் பணியாரம் செய்து பார்த்து நன்றாக இருக்கிறது என்றதற்கு.கேசரி செய்து பார்த்து பின்னுட்டம் அனுப்புங்க மேனகா கலர் சேர்த்து செய்தேன் என்றார்கள் நீங்களும் டிரை பண்ணி பாருங்க, அப்புறம் இந்த "மேடம்" எல்லாம் "வேண்டாம்" சும்மா "மஹா" என்றே குறிப்பிடுங்க ,நீங்க எங்கே இருக்கிறீங்க, எனக்கு பையன் தான் ரொம்ப நன்றாக இருக்கிறான். அவன் பெயர் Yuuvanraj 1 1/2ஆகிறது, என்னை அவங்க அப்பா கூட வேலை வாங்கமாட்டார் எல்லாத்திற்கும் சேர்த்து என் பொடியன் வாங்குறான்.ஆனாலும் ஜாலிதான்.
Think Positively U Will Achieve Everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China