கல் தோசை

தேதி: June 9, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கோப்பை
புழுங்கலரிசி - ஒரு கோப்பை
உளுந்து - ஒரு கோப்பை
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


 

மேற்கூறியுள்ள பொருட்களில் உப்பைத்தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாளன்று அவைகளை மையாக அரைக்கவும்.
பிறகு அதில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும் புளிக்கவைக்க வேண்டிய அவசியமில்லை.
தோசைக்கல்லில் எண்ணெயைத் தடவி மிதமான அனலில் காயவைத்து அதில் ஒரு கரண்டி மாவை வார்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
தோசை முழுவதும் வெந்ததும், திருப்பி போடாமல் அப்படியே எடுத்துவிடவும்.
இந்த சுவையான தோசைக்கு காரக் குழம்பு அல்லது கார சட்னி பொருத்தமாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி ஆன்டி்,
கல் தோசை சாப்பிட ஆசையாக இருக்கு.
Extra Long grain rice பச்சரிசியா??
எப்படி பாஸ்மதி அரிசியில் இட்லி செய்வது என்று குறிப்பு தந்தால் என் போல் இட்லி அரிசி கிடைக்தவங்களுக்கு பயன் உள்ளதாக இ்ருக்கும். மிகவும் நன்றி.
கீதாஆச்சல்

இட்லி அரிசிக்குப் பதிலாக "இட்லி ரவா" என்று ஒரு சாதனம் உள்ளது.ஆந்த்ரா மக்கள் எல்லொரும் அதைத் தான் இட்லிக்கு உபயோகிக்கிறார்கள்.

I have tasted that idli.Its gud.U just need to wash & soak Idli rava for 30 min or so.Grind Urad dal as usual and mix it with this soaked "Idli rava"and mix with ground Urad batter.Plz check for the proportion thro' web.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

அன்புச் சகோதரி கீதாச்சல் எப்படி இருக்கீங்க? கல் தோசைக்கு நீங்கள் குறிப்பிட்ட அரிசியில் Extra long அல்லது long grain white rice என்ற அரிசியை பயன்படுத்தலாம் அதுதான் பச்சரிசி.

பாஸ்மதி அரிசியில் சாம்பார் இட்லி ரொம்ப நன்றாக இருக்கும்.அதில் பாஸ்மதி அரிசி நான்கு கோப்பை ,புழுங்கல்(long grain par boiled) அரிசி ஒரு கோப்பை, உளுந்து இரண்டு கோப்பை சேர்த்து மொத்தமாக ஊறவைத்து அரைத்து இட்லி செய்யலாம்.மற்றபடி இதில் ஒரு கோப்பை உளுந்தை குறைத்து, அதனுடன் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தோசைக்கும் அரைத்துக் கொள்ளலாம்.