செட் தோசை

தேதி: June 9, 2008

பரிமாறும் அளவு: 8- 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - மூன்று கோப்பை
புழுங்கலரிசி/parboiled - ஒரு கோப்பை
உளுந்து - முக்கால் கோப்பை
வேகவைத்த சாதம் - அரைக்கோப்பை
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி
ஆப்பச்சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு.


 

அரிசி வகைகள், உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
பின்பு அவற்றை குறைந்தது நான்கு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் சாதத்தைச் சேர்த்து மையாக அரைக்கவும்.
பிறகு அரைத்த மாவில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி இரவு முழுவதும் புளிக்க விடவும்.
அடுத்த நாளன்று சோடாவைச் சிறிது நீரில் கரைத்து ஊற்றி மாவை நன்கு கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி வழக்கமான தோசை அளவை விட சற்று தடிமனாக இருக்குமாறு தோசை வார்க்க வேண்டும்.
தோசை ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு சுற்றிலும் எண்ணெயை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
செட் தோசைக்கு வடகறி, மீன் குழம்பு, தக்காளி சட்னி போன்றவை பொருத்தமாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி மேடம் செட் தோசை செய்தேன்.நன்றாக இருந்தது.இனிமேல் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரும் அரிசியின் சுமை எனக்கு குறையும்.பச்சரிசியும் கலந்து தோசை செய்யலாமே.அது இங்கே கிடைக்குமே! என் சுமையை குறைத்ததற்கு நன்றி மேடம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹலோ கவிசிவா எப்படி இருக்கீங்க? செட் தோசை செய்து பின்னூட்டம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. இந்த தோசையில் மேலும் கொஞ்சம் வெந்தயம் அதிகமாக சேர்த்துக் கொண்டால்கூட இன்னும் சுவையாய் இருக்கும் மீண்டும் நன்றி.

டியர் மனோகரி மேடம் இன்று உங்கள் செட் தோசை செய்து தொட்டுக்க ரஸியா நிஸ்ரினாவின் தக்காளி சட்னியோடு சாப்பிட்டாச்சு , ரொம்ப நல்ல இருந்தது.

ஜலீலா

Jaleelakamal

மனோகரி மேடம் ,

உங்களுடைய செட் தோசை செய்தேன். ரொம்ப சாப்டா மிகவும் நன்றாக இருந்தது. என்னுடைய மகளும் குட்டி தோசை வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டது மிகவும் சந்தோசமாக இருந்தது. என் மகளை சாப்பிட வைப்பதற்குள் சாப்பாடு செய்யும் ஆசையே போய் விடும். அவளே கேட்டு சாப்பிடாள் என்பதில் நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். உங்கள் குறிப்பிற்க்கு ஒரு சபாஷ்.ஒரு சந்தேகம் இதில் மஞ்சள்தூள் சேர்த்து செய்யலாமா? நான் ஹோட்டலில் மஞ்சள் கலரில்தால் சாப்பிட்டு இருக்கேன்.

நன்றி
காயத்ரி பாபு

மனோகரி மேடம் ,

உங்களுடைய செட் தோசை செய்தேன். ரொம்ப சாப்டா மிகவும் நன்றாக இருந்தது. என்னுடைய மகளும் குட்டி தோசை வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டது மிகவும் சந்தோசமாக இருந்தது. என் மகளை சாப்பிட வைப்பதற்குள் சாப்பாடு செய்யும் ஆசையே போய் விடும். அவளே கேட்டு சாப்பிடாள் என்பதில் நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். உங்கள் குறிப்பிற்க்கு ஒரு சபாஷ்.ஒரு சந்தேகம் இதில் மஞ்சள்தூள் சேர்த்து செய்யலாமா? நான் ஹோட்டலில் மஞ்சள் கலரில்தால் சாப்பிட்டு இருக்கேன்.

நன்றி
காயத்ரி பாபு

==

ஹலோ மனோகரி மேடம், எனக்கு ஒரு சந்தேகம், இதனை மிக்சி இல் அரைக்கலாமா? அப்படி அரைத்தால் எவ்வளவு நேரம் அரைப்பது என்று சொல்லுங்கள், அப்புறம் ஆப்பச்சோடா போடாமல் இதனை செய்யலாமா? please சொல்லுங்கள்