கத்தரி, முருங்கை பொரியல்

தேதி: June 11, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 250 கிராம்
முருங்கைக்காய் - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 2 சில்
மிளகாய்ப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் நீளமாக நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், சீரகம், சோம்புத்தூள் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து கிளறி 1/2 கிளாஸ் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
நன்கு வெந்தவுடன் தேங்காயை தண்ணீர் விடாமல் அரைத்து சேர்த்து கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி மேடம் இன்றைக்கு உங்க கத்தரி முருங்கை பொரியல் செய்தேன் நல்லா இருந்தது.நான் எப்பவுமே வெரும் கத்தரிக்காய் போட்டுதான் பொரியல் பண்ணுவேன்,இன்னைக்கு முருங்கைகாய் போட்டு வித்தியாசமா வந்தது,இதோட வாசனையே நல்லா இருந்தது. நன்றி மேடம்.