கத்திரிக்காய் பஜ்ஜி

தேதி: June 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பஜ்ஜி மாவு - 1 கப்
சிறிய கத்திரிக்காய் - 6
வெங்காயம் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
காரப் பொடி - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

பஜ்ஜி மாவை தேவையான தண்ணீரில் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
கத்திரிக்காயை காம்பை விட்டு விட்டு நீளவாக்கில் 4 ஆக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கின கத்தரிக்காயை சிறிது உப்பு போட்ட தண்ணீரில் 2 நிமிடம் வேக விடவும். பின் நீரை வடித்து விட்டு வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட், காரப்பொடி, வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்த விழுதை வேக வைத்த கத்திரிக்காய் உள்ளே வைத்து பஜ்ஜி மாவு கரைசலில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

காரபொடி என்றால் மிளகாய்பொடியா?
நான் கத்தரிக்காய் பஜ்ஜி செய்திருக்கீறேன். அது வழக்கமான பஜ்ஜி மாவில். இந்த sunday இதை try செய்றேன்.

hai sarada
காரபொடி என்றால் மிளகாய்பொடிதான்
இதை செய்து பார்த்து எப்படி இருக்கு சொல்லவும்