தக்காளி குருமா

தேதி: June 13, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தக்காளி - ஐந்து அல்லது ஆறு (சுமாரான அளவு)
பெரிய வெங்காயம் - இரண்டு(சுமாரான அளவு)
ஃபுரோசன் பச்சைபட்டாணி - இரண்டு மேசைக்கரண்டி
நசுக்கிய இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா இரண்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய்ப்பூ - ஒரு கோப்பை
கசகசா - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - நான்கு
மிளகாய்தூள் - ஒருதேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி


 

தக்காளியை சுடுநீரில் போட்டு இரண்டு நிமிடம் வேகவிட்டு அதன் தோலை நீக்கி, நன்கு கரைத்து வைக்கவும்.
மிக்ஸியில் அரைக்கத் தேவையான பொருட்களைப் போட்டு மையாக அரைத்து தக்காளி கரைசலில் சேர்த்து, இரண்டு கோப்பை நீரையும் ஊற்றி கலக்கி வைக்கவும்.
இஞ்சிப் பூண்டை நசுக்கிவைக்கவும். வெங்காயத்தை சற்று பெரியத் துண்டுகளாக்கவும்.
சட்டியில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் தக்காளி கரைசலை ஊற்றி உப்பைப் போட்டு நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.
குருமா கொதித்து கெட்டிபதம் வந்தவுடன் பட்டாணி மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடவும்.
இந்த சுவையான குருமா இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்கு நல்லபொருத்தமாக இருக்கும்.


இதற்கு நன்கு பழுத்த தக்காளியாக தேர்வுச் செய்வது அதிக சுவையைக் கூட்டும். தேங்காய்ப்பூ உலர்ந்தாக இருந்தால் அரைக்கோப்பை போதுமானது. பொதுவாக கசகசா எளிதில் அரைப்படாது ஆகவே அதை சுடுநீரில் ஊறவைத்தோ அல்லது லேசாக வறுத்த பின்பு அரைத்தால் நன்கு மையாக அரைப்படும். அல்லது காஃபி கிரைண்டரில் போட்டு பொடித்த பின்பும் மற்ற பொருட்களுடன் சேர்த்தும் அரைத்துக் கொள்ளலாம். கசகசா கிடைக்காத பட்சத்தில் அதற்கு பதிலாக இந்த குறிப்பிற்கு முந்திரி பருப்பு ஆறு அல்லது ஒரு மேசைக்கரண்டி உடைத்தகடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று உங்களின் தக்காளி குருமா செய்தேன். சூப்பராக இருந்தது. பாராட்டுபெற்றேன். நன்றி.

All is well

தக்காளி குருமா செய்தேனா வீட்டில் எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. நன்றி மேடம். இட்லி கூட சாப்பிட்டோம் தக்காளி குருமாவ. கசகசா சேர்க்கல முந்திரி தான் வச்சி அரைச்சேன் சூப்பர் டேஸ்ட்.

ஹலோ மொழி ரொம்ப சந்தோசமாய் உள்ளது. இந்த குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி.

தக்காளி குருமா சூப்பர்.இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷன்.ஒரு தடவை செய்தால் சட்டி நிறய கிடைக்கிறது.என் வீட்டில் இது போன்ற ரெசிபிகள் தான் தேவை.
நன்றி.
அருணா.

aruna

நேற்று உங்களின் தக்காளி குருமா இட்லிக்கு வைத்து பிரமாதமாக இருந்தது.ரொம்ப ஈசியா பன்னிட்டேன்.
thanks 4 ur fabulous receipe