முருங்கைக்காய் ஊறுகாய்

தேதி: June 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்காய் - 6
மிளகாய் பொடி - 3 தேக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி
கடுகு பொடி - 3 தேக்கரண்டி
தனியா பொடி - 3 தேக்கரண்டி
சீரக பொடி - 2 தேக்கரண்டி
வெந்தய பொடி - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி


 

முதலில் தேவையான அளவில் துண்டுகளாக முருங்கைக்காயை வெட்டி கொள்ளவும்.
அதை மெல்லியதான துணியில் கட்டி 2 நிமிடம் ஆவியில் வேகவிடவும்.
நீர் போக ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
ஒரு கிண்ணதில் மிளகாய் பொடி, உப்பு, கடுகு பொடி, தனியா பொடி, சீரக பொடி, வெந்தய பொடி, இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொறிய விட்டு அதை பொடி கலவையில் கொட்டி கலக்கவும்
இந்த விழுதை முருங்கைக்காயுடன் கலந்து வைக்கவும்
இது கைப்படாமல் இருந்தால் ஒரு மாதம் வரை இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்