HELP... HELP.....

யாராவது சொல்லுங்களென், என் இரண்டு வயது பெண்ணிற்கு ரொம்ப சளி, லெசான ஜுரம்..
chesty cough, blocked nose.she's not taking steam also.marliya, jalila akka,jayanti mami or any friends help pls.....

குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி இருக்கீங்க பார்த்துட்டு பதில் போடாமல் இருக்க மனசு கேட்கலை. சளி அதிகமாக இருந்தால் உடனே டாக்டரிடம் காமிக்கவும். ஏன்னா லேசான காய்ச்சல்னு அசால்டா இருக்கக்கூடாது. சளி காய்ச்சல் ரெம்பவும் மோசமாக இருக்கும். சளி குறைந்தால் தான் காய்ச்சல் சுத்தமாக போகும். மூக்கு அடைப்பு,சளிக்கு சாப்பாடு வேற குழந்தைக்கு சாப்பிட முடியாது. சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லைன்னு பாலாவது கொடுக்கலாம்னு பார்த்தால் இந்த சளி காய்ச்சலுக்கு குழந்தைக்கு பாலும் குடிக்க முடியாது வாமிட் வந்துவிடும். அதனால் உடனே டாக்டரிடம் காமிப்பதுதான் நல்லது. கூடிய விரவில் குழந்தை குணமடைய என்னுடைய பிரார்த்தனைகள்.மற்றவர்களும் வந்து பதில் தருவார்கள்

அன்புடன் கதீஜா.

ஆமாம் கதீ ரொம்ப கஷ்டம் தான்..என் பொண்ணுக்கு நேற்றிலிருந்து இருக்கு.
குழந்தைகள் ஸ்டீம் பன்னாது அப்படியே பன்னினாலும் கை தட்டி விட்டால் பெரும் ஆபத்து..நான் குக்கரில் தண்ணீரை நல்ல கொதிக்க வச்சு கிச்சன் கதை சாத்திட்டு குழந்தையோட கிச்சனில் நின்றேன் அது கொதிச்சு தண்ணீர் வற்ற வற்ற கிச்சனே ஆவிபறக்கும்.மூக்கடைப்பு திறந்துடும்.அடுப்பு கிட்ட நிக்காம தூரமா நில்லுங்க
விக்ஸ் தேய்க்கக் கூடாது என்பதாக் தேய்க்கவில்லை இல்லையென்றால் விக்ஸ் சீக்கிரம் குணம் கிடைக்கும்.
சுடு தண்ணீர்,சூடுள்ள சாத கஞ்சி இதை அவ்வளவு கஷ்டப்படுத்தாஅமல் சாப்பிடும் தொண்டைக்கு இதமாக இருப்பதால்..ஜலீலக்காவின் தக்காளி சுப்ப் கொடுங்க குடிக்கும்..
ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பார்க்குக்கு கொண்டு போய் விடுங்கள்..சுத்தமான காற்று கிடைத்தாலும் பலன் கிடைக்கும்..இரவில் பெட்டுக்கடியில் குழந்தை தலை வைக்குமிடத்தில் அடியில் துணி வைத்து தலை பாகம் கொஞ்சம் மேலே வரும்படி இருந்தால் தூங்கும்..ரொம்ப அடைத்திருந்தால் ஃபார்மசியில் சலைன் ட்ராப்ஸ் கிடைக்கும்..அதை மூக்கில் 1 சொட்டு விடலாம் அல்லது 1 பின்ச் உப்பை 1 கப் தண்ணீரில் கலக்கியும் மூக்கில் விடலாம்..மருத்துவரை கண்டிப்பாக அனுகவும்

அல்லாஹு அக்பர் ...சிவவேல் கவலை படாதீங்கப்பா..இரவு பகல் வருவது போல் குழந்தைன்னா நோய் வந்து போகத்தான் செய்யும். கம்ப்யூட்டரை முதலில் ஆப் பண்ணிட்டு குழந்தையை தூக்கிட்டு ஹாஸ்பிடல் போங்கப்பா..கதீஜா.. டாண்னு பதில் பதிவு பண்ணிடுர்றீங்ககுழந்தை க்கு காய்ச்சல் என்றதும்..நல்ல ஹெல்ப்பிங் மைன்ட்தான்..என்ன மர்ழி இன்னும் தூக்கமா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

அல்லாஹு அக்பர்..என்னமா தளிகா..அட்வைஸ் அரசி..நிறைய டிப்ஸ் ஸ்டாக் இருக்கும் போல் தெரிகிறது..ஆமாம் உங்க உண்மையான பெயர் தளிகா தான?
ஸாதிகா

arusuvai is a wonderful website

இங்க வேற ஒரு வித்யா இருக்கிறதுனால் நான் உங்கள சிவவேல்னே கூப்பிடுறேன். குழந்தைக்கு உடம்பு முடியலனோன்ன ரொம்ப கஷ்டமா இருக்கு. பீவர் இருந்த முதல்ல டாக்டர் கிட்ட காமிங்க வித்யா,அதோட நீங்க அவக்கூடவே இருங்க, ஏன்னா இப்ப தான் நம்ம கூட யாராவது இருக்க மாட்டாங்காளான்னு இருக்கும். ரசம் சாதத்த நல்லா குழைய பிசைந்து குடுங்க வாய்க்கு நல்லா இருக்கும். முடிந்தால் மிக்ஸியில் அடித்து கூட குடுக்கலாம். கொஞ்சமா வெந்நீர் சேர்த்து பிசைந்துக் கோங்க. ஆனா கம்பல் செய்து கொடுக்காதீங்க. அவ விரும்பரப்ப கொடுங்க. சீக்கிரம் குணமடைஞ்சிடும் கவலைப்படாதீங்க.
வித்யா பச்சரிசிய மூட்டையா கட்டி அவ தூங்கின பிறகு தலையனையில் வைங்க, சளி குறையும்.

உங்க பேர் ஷாதிகாவா அல்லது சதீகாவா?டிப்ஸ் எல்லாம் கூகில் பன்னி கிடைப்பது தான் :-)..அது மனதில் பதிந்து போயிற்று..கொஞ்சம் சொந்த சரக்கும்.
ஒரு நாள் புட்டு செய்ய குக்கரில் தண்ணீர் கொதிக்க விட்டு மறந்து விட்டேன் உள்ளே திறந்து பார்த்தால் கிச்சன் முழுக்க டைல்ஸ் எல்லாம் நனைந்து ஆவி வந்து கொண்டிருந்தது நல்ல உடம்பே வியர்த்தது அப்ப தான் யோசித்தேன் ஜலதோஷம் பிடிக்கிரப்ப தூரமா நின்றால் குழந்தைக்கு ஆவி பிடிக்கலாமே என்று அதன் பிறகு இப்படி தான்:-D
எனது பெயர் தளிகாவல்ல.இங்க வந்து என் பேர் எனக்கே மறந்து போச்சு:-).இந்த மன்றத்தில் எங்காவது இருக்கும் என் பேர் கண்டுபிடிச்சு கூப்பிடுங்க பாக்கலாம்.கவிதை எழுதுவீர்களா?இருந்தால் அட்மினுக்கு அனுப்புங்கள் அவர் வெளியிடுவார்.உங்க பேரப்பிள்ளை சவுக்கியமா.10 மாதம் ரொம்ப அழகான வயது.நேரம் போவதே தெரியாது.சமையலில் நீங்கள் ஜாம்பவான் தானே கூட்டாஞ்சோறில் இனைந்து குறிப்பு அனுப்புங்க சரியா.வர்டா:-D

சிவ வேல் காய்ச்சல் சளிள குழந்தைகள் வளற வளற அதுவும் கூடவே வரும்.

ஒன்றும் கவலை வேண்டாம், முதலில் காய்ச்சி ஆறிய தண்ணீர் எடுத்து ஒரு மெல்லிய துணிய உள்ளங்கை நீளத்துக்கு நனைத்து நெற்றியில் பற்று போடுங்கள்.
மெல்லிய ஆடை உடுத்தவும்.

சளிக்கு ஆவி பிடிக்க வையுங்கள் வெரும் கொதி வெண்ணீர் ஜாக்கிரதையா நீங்களும் சேர்ந்து பிடிங்க அப்ப தான் சேப் .

அடுத்து கஞ்சி வெள்ளை கஞ்சி,தக்காளி சூப், சேமியா கஞ்சி இதேல்லாம் செய்து கொடுங்கள்
ஆனா கொஞ்சமா செய்யுங்கள் ஹர்லிக்ஸ் தான் மெயின் அது ரொம்ப தெம்பா இருக்கும்.
கால் டம்ள குடித்தால் கூட போதும். அரை மணி ஒரு முறை கொடுத்து விடுங்கள்
சாப்பிடவில்லை என்று கவலை வேண்டாம் ஆறு நாளைக்கு ஒன்றும் உடம்புக்கு ஏற்காது.

ஜலீலா

Jaleelakamal

அல்லாஹு அக்பர் விசாரிப்புகளுக்கு நன்றி தளிகா..அறுசுவையில் கலந்து உங்கள் அனைவரிடமும் பேச ஆரம்பித்ததும் என் எழுத்தாசை அதிகமாக தலை தூக்குகிறது.படம் இல்லாத சமையல் குறிப்பு அறுசுவைக்கு மெய்ல் அனுப்பினேன்.இனி படத்துடன் அனுப்புகிறேன்.
நேரமின்மையால் என் ஆர்வத்திற்கு வடிகாலாய் அவ்வப்போது சிறு சிறு பதிவுகள் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.என் இரு மகன்களும் 10 ,+2 வகுப்புகளில் படிப்பதால் அதிக சிரத்தை அவர்கள் மீதுஎடுக்க வேண்டியுள்ளது.விரைவில் முழுமூச்சாய் அறுசுவையில் உங்களுடன் கலந்து கொள்வேன்.

arusuvai is a wonderful website

தலைக்கு மேல் வெலை இருக்கு அருசுவை பக்கமே வரல..என் பொண்னுக்கு கேம் வைத்து சாப்பாடு கொடுக்கதான் வந்தேன் அப்ப எதார்தமா உங்க பதிவை பார்த்தேன் பதில் போடாமல் இருக்க மடியல குழந்தைக்கு ஒன்னுனா நமக்கு கஸ்டம்தான் ரொம்ப பாவமா இருக்கும் அவங்களை பார்த்தாலே ஆனால் பயம் ஒன்னும் வேனாம் அதிக சளியால் வந்த காய்ச்சல்தான் இது 1 வரம் வரை இருக்கும் வாமிட் வந்தா எடுக்க விடுங்க அதில் சளி வரும்..சரியா சாப்ப மாட்டாங்க..கொஞ்சமாவது ஏதாவது கொடுங்க..பட்னியா போட கூடாது அதுக்காக ரொம்ப தினிக்கவும் வேணாம்..டாக்டரிடம் போனா சளிக்குள்ள மருந்து தருவார் மோஷன் அல்லது வாமிட்ட்டுடன் சளி வரும் விக்ஸ் பாவிக்க வேண்டாம்..அவளை பாவம் ந்னு பக்கத்திலேயே வத்துக்காதீங்க பிரீயா விடுங்க தளி சொன்னது போல சுத்தமான இடத்துக்கு கூட்டு போங்க..ஜாலியா இருக்கட்டும்''என் பொண்ணுக்கு இந்த மாதுரி டைமில் 2 நாள் பார்த்துட்டு இப்படிதான் மாலுக்கு எட்த்து போயிடுவென்..அங்கு போன காய்ச்சல் இருக்காது ஆடுற ஆட்டத்தில் ஜில்லுன்னு ஆகிடும் வீட்டுல்க்கு வந்தா காய்சல் வர்ர்ம் ஹா ஹா..உ டோண்ட் வொரு சிவாவேல் சரியாகிடும்..பீவர் டானிக் மட்டும் கண்டிப்பா டைம் பிரகாரம் கொடுக்கனும் சளி காய்ச்சள் ஹெவி பீவரில் வைக்கும்..அதோட இருமலும் வர நிறைய சான்ஸ் இருக்கு சோ காப் டானிக் கைவசம் வைத்துக்கனும் ஓகே அவசத்தில் எழுதி இருக்கேன் பிழை இருந்தால் சாஇப்பா வேலை இருக்கு அப்புறம வாரேன்...ரூபி உன் ஆப் லைன் மெச்சேஜ் பார்த்தேன் அப்புறமா ரிப்லெ ஒக்கே அக்கா,கதீஜா,ரஜினி,காயத்ரி,மஹா,ரேனுகா,சாதிகா(உங்க மேல் கோபம்)சபிதா அய்யோ வேலை இருக்கு நா பாட்டுக்கு கூவிட்டு இருக்கேன் மொத்தமா அல்லோரும் சவுகரியமா இஉக்கீஹலா?பதிவு போட்டு வைய்யுங்க வந்துடறேன் வர்ட்டா!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சிவா வேல் பிலேன் கங்ஜி,ஜலீலாக்கா சூப்.,அதோட கஞ்சி சோறும் கொடுங்க..சாப்ட ஈஸியா இருக்கும்..வாமிட் பண்ண விடுங்கன்னு சொன்னேன் இல்லையா அதுக்காக ரொம்ப எடுக்க விடாதீங்க...சண்ணி சத்து குறைந்துடும் கவனம்..அப்புறம் ஏதோ சஒல்லனும்னு நினைத்தேன் மறந்துட்டே ! ஒக்கேப்பா இது போதும்னு நினைக்கிறேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்