தைராய்ட்

ஹலோ தோழிகளே,
நான் உங்களிடம் முதல் முறையாக பேசுகிறேன்.எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும். உங்கள் அரட்டை , டிப்ஸ் எல்லாம் மிகவும் ரசிப்பேன் .. எனக்கும் உதவுங்களேன்.....

எனக்கு தொண்டையில் ஒரு கட்டி இருந்தது டாக்டரிடம் check செய்தத்தில் எனக்கு தைராய்ட் என தெரிந்தது. இந்த கட்டி திடீர் எனத்தான் வந்தது , எனவே blood test (t3,t4), secan ,needle test எல்லாம் எடுத்தகிவிட்டது, அதில் தைராய்ட் தான் என தெரிந்துவிட்டது, எனக்கு இது cancer ஆக மாறி விடுமோ என பயம்மாக உள்ளது ..... யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் உதவுங்கள்
நன்றி

ஒம் முருகா....வருக,வருக...
உங்களுக்கு ஆயுசு நூறு.
நான் ஒரு 4 நாட்களாகவே இது பற்றி எழுத வேண்டும் ஏன்று நினைத்துகொண்டிருந்தேன்.எப்படிஅட்மின் இதை அனுமதிக்கிறார் என்று. சில சமயங்களில் நாம் பொது மன்றத்தில் தான் இருக்கிறொமா இல்லை மத ப்ரச்சாரம் நடக்கும் இடத்திலா என்று சந்தேகமே வருகிறது

அம்மாடி ஆசியா ஃபசிலா...உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
ஏற்கனவே நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் போதாதா?நீங்கள் வேறு ஏன் ஒரு பொது தளத்தில் உங்களின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறீர்கள்?
முதலில் மணுஷியாக பேச,நடக்க கற்று கொள்ளுங்கள்.அப்புறமாக இறைவனை வேண்டிக்கொள்(ல்)ளலாம்.

இன்று நம் தாய் திருநாட்டில் நடக்கும் பாம் வெடிக்கும் வைபவங்களை கண்ட பிறகும்,
எல்லா மதத்தினரும் சந்திக்கும் பொது மன்றத்தில் நீங்கள் வேறு எக்ஸ்ட்ரா பாம் போடாதீர்கள்.
சரவண பவ ஓம்.
நட்புடன்.
ப்ரியா.

you dont worry. god is always with you.

அன்பு தோழிகளே,

எனக்கு இதில் பதிவுகள் போட்டு இருக்கும் பெயரை பார்த்து தனி தனியா பதிவுகள் போட முடிய வில்லை எனவே பொதுவாக ஒரே பதிவாக போட்டுடறேன்! இதில் இருக்கும் பதிவுகளைலாம் முன்பு படித்தேன் அப்ப பதில் போட முடியல

இதில் ஒருத்தங்க அருசுவையிலும் பாம் போடாதீங்கன்னு சொல்லி இருந்தாங்க அது என் மனசை ரொம்பவே பாதித்தது..வார்த்தையை இப்படி விடாதீங்க ந்னு அவங்களை கேட்டுகறேன்..அப்ப்டி தீவிரவாத எண்னத்தோட பொது மக்களை தாக்கும் யாரும் முஸ்லிம் மதமாக இருந்தாலும் கூட அவங்களை நாங்க முஸ்லிம்ஸ்ன்னு சொல்ல மாட்டோம் தவறான எண்ணத்தில் இப்படி செய்பவர்கள் கண்டிப்பாக இஸ்லாத்தில் இடம் இல்லை..இதுவே என்னாலும் பதிலாக அவங்களை வார்த்தைகளால் வருத்தபட வைக்க முடியும் நானும் அப்படி செய்தால் அவங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்காது!ஒரு சிலதை வைத்து இப்படி பேசுவது சரி இல்லை இனியேனும் வாந்த்தைகளை எழுதும் முன் கவனித்து எழுதுங்க மதம் அவங்கவங்க தனிப்பட்டது ஆனால் மனித ஒற்றுமை அனைவருக்கும் வேண்டும் நாங்க (நாங்க ந்னு சொல்லி இருப்பது மற்ற மதத்தவர்களையுதான்)அனைவரும் அருசுவையில் ஆகட்டும் வெள்யில் ஆகட்டும் இந்து முஸ்லிம்னு பாகுபாட்டுடன் பழகுவது இல்லை அது இங்கு அனைவருக்கும் தெரியும் தவறாக புரிந்து கொள்ளும் ஒரு சிலரை தவிர!செல்விக்கா,ஜெ.மாமி,இலா,விஜி,மேனு,ரஜினி,காயு,மஹா இப்படி எண்ணற்ர பேர் இதில் இருகோம் நாங்க அனைவருமே சரியான கண்ணோடத்தில் மனதில் ஒன்னும் இல்லாமல் பழகி வருகிறோம் எங்கள் நட்பு இன்னும் தொடறும்..அதோட இன்னும் ஒரு சிலர் இது முஸ்லிம் இணைய தளமா என கேட்டுள்ளனர் தவரான எண்னத்தோட் பார்த்தா எல்லாம் தவறே!

இந்து சகோதரிகளுக்கு வழக்கத்தில் உள்ல சொல் வணக்கம் அது இயல்பே!அது போல நாங்க சொல்லுவது அஸ்ஸலாமுஅலைக்கும் அவ்லவுதான்..நானாகட்டும் மர்ற மத சகோதிரிகளாகட்டும் பேசுறப்ப இறைவன்,கடவுள் என்றுதான் உபயோகிப்போம் இதே போல்தான் மர்றவர்களும் வணங்கும் கடவுள் வேறாக இருக்கலாம் ஆனால் நாங்கலாம் நட்புடன் பழகிவருகிறோம் ..இதே முஸ்லிம்களிடம் பேசுறப்ப அல்லாஹ் ந்னு உபயோகிப்போம் ஏன்னா நாங்க இருவரும் வணங்கும் கடவுள் ஒன்றுதானே இதில் தப்பா எடுக்க என்ன இருக்கோ தெரியல அதோட இது முக்கியமா என் பழக்கத்தில் உள்ள வார்த்தை அருசுவைக்காக பொய் வேஷமிட்டு பேச எனக்கு தெரியாது..
மர்ற மதத்தவர்களை நாங்க இப்படி அல்லாஹ்ன்னு பேஇச்னா அது கண்டிப்பா தவறேதான்!

மதத்தை நம்முள் வைத்துகலாம்..மனிதனிடம் இருக்கும் பாசமான குணத்தை பாருங்க பிளீஸ்...என் மனதில் ரொம்ப நாளாக உருத்திட்டு இருந்தது இப்ப கொட்டிட்டேன்..

இது லேட்டான பதிவுதான் ஆனால் அப்ப என்னால் பார்க்க மட்டுமே முடிஞ்சது பதிவு போட முடியல(உடல் நிலைதான் காரணம்)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி.....முந்திய பதிவில் நான் வேறு யாரையும் குறிப்பிடவில்லையே.
தீவிரவாத எண்ணம் மட்டும் இல்லை,இது போல் மற்ற மதத்தினரை புண்படுத்தும் எண்ணம் கொண்டோரையும் இஸ்லாம் ஏற்காது என்றால்,இந்தகருத்து சொன்னவருக்கு பரிந்து வர வேண்டாமே.
நன்றாக படித்தீர்களென்றால்...நான் அந்த கருத்தை சொன்னவரை தான் கண்டித்து இருக்கிறேன்..இவரை நீங்களோ வேறு இஸ்லாமிய சகோதரியோ உடனே கண்டித்திருந்தீர்களென்றால் பெருமைபட்டிருப்போம்.
again I WANTED TO PINPOINT THAT I GAVE THIS COMMENT AS A REPLY TO THE PERSON (I HAD EVEN ADDRESSED HER NAME) WHO PROVOKED FIRST...

நட்புடன்
ப்ரியா..

இன்று காலை தான் உங்களுக்கு thanks சொல்லனும்னு அருசுவை ஒப்பன் செய்தேன்.எங்கள் மகன் birthday partyயில் உங்களின் chicken gravy recipe எனக்கு மிகவும் பாராட்டுக்களை வாங்கி தந்தது. ஆனால் உங்கள் பதிவை கண்டதும் உடனே எனது பதிவை எழுத மனம் வரவில்லை.
எனவே இப்போது இப்பதிவோடு சேர்த்து அதற்கு தாங்க்ஸ் சொல்லிக்கொள்கிறேன்.
thanks
priya

மர்ழி.....முந்திய பதிவில் நான் வேறு யாரையும் குறிப்பிடவில்லையே.
தீவிரவாத எண்ணம் மட்டும் இல்லை,இது போல் மற்ற மதத்தினரை புண்படுத்தும் எண்ணம் கொண்டோரையும் இஸ்லாம் ஏற்காது என்றால்,இந்தகருத்து சொன்னவருக்கு பரிந்து வர வேண்டாமே.
நன்றாக படித்தீர்களென்றால்...நான் அந்த கருத்தை சொன்னவரை தான் கண்டித்து இருக்கிறேன்..இவரை நீங்களோ வேறு இஸ்லாமிய சகோதரியோ உடனே கண்டித்திருந்தீர்களென்றால் பெருமைபட்டிருப்போம்.
again I WANTED TO PINPOINT THAT I GAVE THIS COMMENT AS A REPLY TO THE PERSON (I HAD EVEN ADDRESSED HER NAME) WHO PROVOKED FIRST...

நட்புடன்
ப்ரியா..

இன்று காலை தான் உங்களுக்கு thanks சொல்லனும்னு அருசுவை ஒப்பன் செய்தேன்.எங்கள் மகன் birthday partyயில் உங்களின் chicken gravy recipe எனக்கு மிகவும் பாராட்டுக்களை வாங்கி தந்தது. ஆனால் உங்கள் பதிவை கண்டதும் உடனே எனது பதிவை எழுத மனம் வரவில்லை.
எனவே இப்போது இப்பதிவோடு சேர்த்து அதற்கு தாங்க்ஸ் சொல்லிக்கொள்கிறேன்.
thanks
priya

இதற்க்குதான் போன பதிவில் எழுதும் முன் யோசித்து எழுதுங்கன்னு சொல்லி இருந்தென்..அதை இப்பவும் கவனிக்க வில்லை போல..முன்பு பதில் போடாமல் இருக்கும் மற்றவர்களை பற்றி ஏன் போட வில்லை என் ஆராட்சி பண்ன விருப்பவில்லை நான் உடன் பதில் அளிப்பாமைக்கு மட்டும் பதில் ஏற்கனவே சொல்லி இருக்கேன் எனக்கு உடல் நிலை சரி இல்லைன்னு இது என் அருசுவை தோழிகளுக்கேலாம் நன்கு தெரியும்..இப்ப கூட ஒருத்தங்க பதிவு போட்டு இருக்கு போய் பாருங்கன்னு சொன்னதால்தான் வந்தேன்..தீவிர வாதத்தை இஸ்லாம் மட்டும் இல்லை இந்துவாகட்டும்,கிரிஸ்டின் ஆகட்டும் எந்த மதமும் ஏற்காது..அது போல இப்படி அடுத்தவர்களை புண் படுத்தும் வார்த்தைகளும்தான்

அதுக்கு வர வேண்டாம்னுதான் இருந்தேன் பொதுவாக பேசிடலாம்னு இதனால் அட்மினுக்கும் தலைவலி..நீங்கள் தனிப்பட்ட முறையில் கருத்தை சொல்லி இருக்காலாமே அது என்ன பாம் அது இதுன்னு தகாத வார்த்தைகள்???உங்களுக்கு மட்டும் இல்லை அனைத்து மத மனிதர்களுக்கு இது பொதுவாகவே கசப்பான இழப்புதான் அதை முதலில் புரிஞ்சுகங்க!
மர்றொன்று சொல்லிகொள்ல விரும்புகிரேன் இதில் நன் யாரையும் பரிந்து பேச வில்லை இதில் ஆசியா என்றோ,ஓம் முருகன் என்றோ எதிலாவது சொல்லி இருக்கேனா?இல்லை அவங்க குறைகளை சொல்லி இருகேனா?இப்ப நீங்கலாக கேட்கின்றீர்கள் அதனால் மட்டுமே அதற்க்கு வருகிறேன்..ஆனால் இந்த திரட்டில் இதுக்கு மேல் கண்டிப்பாக தொடர மாட்டேன் ..இந்த பிரட்சனையால் அருசுவைக்கு பிராப்லம் ஆகிட கூடாது..உங்கள் ஒரு சிலரின் வார்த்தைகள் ரொம்பவே மனசை காயப்படுத்தியது அதற்க்காகவே பதில் போட வந்தேன் இனியும் தொடர்ந்தால் எனக்கோ உங்களுக்கோ இழப்பு இல்லை அருசுவைக்குதான் எல்லா பாதிப்பும்...சரி விஷயத்திற்க்கு வருகிறேன்..

......ஓம் முருகா ஆசியா

நீங்கள் தேடும் குழந்தை உங்களுக்கு சீக்கிரம் கிடைக்க அந்த முருகன் துணை புரிவான். முருகனை நாடினால் நொடிகூட ஆகாது. ஓம் முருகா. உங்களுக்கு சீக்கிரமே குழந்தை கிடைக்க நான் வேண்டிகொள்கிறேன்....

இதில் இவர்கள் பொதுவாக கடவுள் என சொல்லி இருக்காலாமே அதை ஏன் நீங்க கவனிக்கல?நாங்கள் மர்றும் மர்ற மத சகோதிகள் யாரும் வேறு மத சகோதிரிகளை இப்படி பேசுவது இல்லை இதனால் அவங்க மனசு பாதிக்கப்படும் என தெரிய வேண்டாமா?பொதுவாக கடவுள் இல்லை இறைவன் என பொதுவான பதிவு கொடுத்து இருக்கலாம்..அதோட ஆசியா மேட்டெரில் அவங்க நிதானமன முறையில் ஓம் முருகா அவர்கள் செய்து இருக்கும் தவறை சொல்லி இருக்கலாம் அவங்களும் வார்த்தைகளை ஏய் இப்படி படியான தகாத வார்த்தைகளை விட்டு இருக்காங்க அதும் தவறுதான்..

உங்கள் மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! கடவுள் ஆசியால் எல்லா நலனையும் பெற்று சந்தோசமாக வாழனும் என வேண்டி கொள்கிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா,

உங்கள் பதிவு நான் எப்பொழுதும் விரும்பி படிக்கும் ஒன்று. யாருக்காவது கஸ்டம் என்றால் விரைந்து வந்து பதில் அளிக்கும் பாங்கு அனைவரும் அறிந்தது.

ஆனால் ஆறிப்போன பதிவை எடுத்து பதிவு போட்டு, அரட்டை திரட்டில் மத கலவரம் ஆரம்பித்து விட்டது என்றும் வேறு சொல்கிறீர்கள். என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. இங்கு கருத்து சொன்ன அனைவரும் "யோசியும்கள்" என்று தான் சொல்லியிருக்கிறார்கள். யாரும் கலவரத்தை தூண்டவில்லை. பாம் என்ற வார்த்தை எப்படி தவறாக தோன்றுகிறதோ அது போல் இதுவும் தவறே!

ஆசியா, உறுதி(உண்மை) மொழி என்று கூறிவிட்டு குரல்வளையை நெரிப்பது போல் பதிவு எழுதுகிறார்.

நீங்கள், மனிதனை மனிதனாய் பாருங்கள் என்றுவிட்டு, மனிதனை மதத்தால் இனம் பிரித்து , வணக்கத்தை நாங்கள் இப்படித்தான் கூரூவோம் என்கிறீர்கள். பொதுவாக பேசி நடிக்க தெரியாது என்கிறீர்.

அனைத்தும் முன்னுக்குபின் முரணாக உள்ளது.

தவறாக பார்த்தால் எல்லாம் தவறே என்ற கூற்றுக்கு வருவோம்,ஒரு பொது தளத்தில், திரும்பிய பக்கமெல்லாம் நம சிவாய வாழ்க என்றோ கர்த்தர் ஆரிவதிக்கட்டும் என்றோ இருந்தால், படிப்பவர் நாம் இருப்பது சமய சார்ந்த தளமா என்று எண்ணுவது இயல்பே! இதில் என்ன தவறான கண்ணோட்டம் இருக்கிறது?

நான் உங்களுக்காக வேண்டிக்கொண்டால் ,நான் எனது கடவுளிடம் தான் வேண்டிக்கெள்வேன். நீங்களும் அவ்வாறே! அது போல் ஓம்முருகாவின் வேண்டுதலை எடுத்துக் கொள்ளளாமே தவறான கண்ணோட்டம் இல்லாமல்?

மேலும் வணக்கம் என்பது தமிழ்ச்சொல், யார் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்.

சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தின் போது கிருத்துவர்களை இனம் கண்டு அவர்களிடம் மட்டும் 'கர்தர் ஆசிர்வதிக்கட்டும் ' என்றால் எப்படி இருக்கும்? பொது சபையில் இது போல் பேசுவது நாகரிகம் அற்ற செயலே!

இந்தியனாக ஒன்றுபடுவது இருக்கட்டும், தமிழ் இனத்தாலாவது ஒன்றுபடலாமே!
மதம் வேறாக இருக்கலாம், இனம் என்பது எப்பொழுதும் மாறாதது.

அனைத்து தோழிகளுக்கும் ஒரு ஹாய்

இந்த பதிவிற்கு நானும் பதில் போட நானும் நினைத்து பின் தயங்கி விடுவேன். என் மனதில் தோன்றியதை நான் இங்கே சொல்லி விடுகிறேன்.

பிரச்சனை பசீலா & ஓம்முருகா இருவருக்கும்தானே அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டுமே. இருவருமே பேச தெரியாதவர்கள் அல்லவே. இதில் மற்ற தோழிகள் எதற்கு தலையிட வேண்டும். sk & malar உங்களுக்கு ஏன் கோவம். மலர் நீங்க இது இஸ்லாமிய தளம் என்று நினைக்க என்ன இருக்கிறது

இங்கு ஏதெனும் இஸ்லாமிய தோழி அல்லாஹ்வின் புகழ்பாடுகிராறா? அல்லாஹ்வை நம்பு என்று சொற்பொழிவாற்றினாரா? நான் படித்த வரை அப்படி ஏதுவும் இல்லை. என்ன இன்ஷா அல்லாஹ் ( இறைவன் விரும்பினால்), அஸ்ஸலாமு அலைக்கு (இறைவனின் அருள் உண்டாகட்டும்) வ அலைக்கும் ஸலாம் (உங்களுக்கும் அவ்வாறே உண்டாகட்டும்) இப்படித்தான் கூறியுள்ளார்கள்.இதற்கு அர்த்தம் எல்லாமத தோழியருக்கும் தெரியும். ஒரு இஸ்லாமிய தோழி மற்றொறு இஸ்லாமிய தோழியுடன் பேசும்போதுதானே பயன்படுத்துகிறார் அதுவும் இத்தளத்திற்கு வரும் எல்லாதோழியருக்கும் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியும். மற்ற தோழிகளுடன் பேசும்போது இறைவன் என்று பொதுவாகத்தானே கூறுகிறோம்.

எத்தனை தோழிகள் இங்கு ஆங்கிலத்தில் பதிவு போடுகிறார்கள். ஆனால் அரபியில் ஒருவார்த்தை சொன்னால் அது தவறா. அது உங்களை ஏன் காயப்படுட்த்துகிறது. நீங்கள் வணக்கம் சொல்வது போல்தானே நாங்களும் சொல்கிறோம். இதனால் நீங்கள் ஏன் இந்த தளத்தை பார்வையிட்டு மட்டுமே செல்ல வேண்டும்.

இங்கு எத்தனையோ நல்ல தோழிகள் இருக்கிறார்கள். ஜெயந்திமாமி,இலா,விஜி,மேனு,ரஜினி ,காயு,மஹா,ஜானகி,சரஸ்வதி மேடம்,தேவா,சரண்யா, பிரதிபாலா, அஞ்சலி, அனு, மேனகா, சகி, ஹாசினி, சசிகலா, கவிஎஸ், கவிசிவா இன்னும் நிறைய தோழிகள் யாருமே மதம் சார்ந்து பேசவில்லை.

பிரியா நீங்கள் பேசியிருப்பது உங்களுக்கு சரியெனப்படுகிறதா

// ஒம் முருகா....வருக,வருக...
உங்களுக்கு ஆயுசு நூறு.

இன்று நம் தாய் திருநாட்டில் நடக்கும் பாம் வெடிக்கும் வைபவங்களை கண்ட பிறகும்,
எல்லா மதத்தினரும் சந்திக்கும் பொது மன்றத்தில் நீங்கள் வேறு எக்ஸ்ட்ரா பாம் போடாதீர்கள்.
சரவண பவ ஓம்//

நீங்கள் போட்டுள்ள இந்த பதிவிற்கு என்ன அர்த்தம் பிரியா. உங்கள் பதிவு மதவாதத்தை தூண்டவில்லையா? தனிப்பட்டு நாம் ஒரு கருத்து சொல்லும் போது அது இருபாலருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். எல்லோரும் பசீலாவை திட்டுவது மட்டும் முறையா? தவறு இருவர் பேரிலுமே உள்ளது. நீங்கள் இஸ்லாமிய சகோதரி யாரும் பசீலாவைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளீர்கள், ஆனால் நீங்களும் உங்கள் மதத்தை சார்ந்தவருக்கு மட்டும்தானே சப்போர்ட் பண்ணியுள்ளீர்கள். இது மட்டும் சரியா? நீங்கள் குண்டு போடுகிறீர்கள் என்று குறிப்பிட்ட வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை பிரியா. உங்களுடைய இந்த வார்த்தையில் எவ்ளோ பெரிய பிரச்சனை அடங்கியுள்ளது தெரியுமா. நான் விவரிக்க விரும்பவில்லை. எனக்கு இஸ்லாமிய தோழிகளை விட பிறமத தோழிகள்தான் அதிகம் நாங்கள் ஒருநாளும் இதைப்பற்றி பேசி சண்டையிட்டு கொண்டதில்லை. இன்றும் நட்புறவோடு இருக்கிறோம்.

ஓம்முருகா நீங்கள் இறைவன் அருளால் குழந்தை கிட்டும் என்று முடித்திருக்கலாம்

பசீலா நீங்களும் இவ்ளோ கோபப்பட்டு இருக்க்கூடாது. இறைவன் பெயரால் பதிவு போட வேண்டாம் என்று மட்டும் கூறியிருக்கலாம்.

தீவிர வாதத்தை இஸ்லாம் மட்டும் இல்லை இந்துவாகட்டும்,கிரிஸ்டின் ஆகட்டும் எந்த மதமும் ஏற்காது..அது போல இப்படி அடுத்தவர்களை புண் படுத்தும் வார்த்தைகளும்தான். மர்லி உங்க கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்.

பிரியா, மலர், ஓம்முருகா,பசீலா, எஸ்.கே நான் மதம் சார்ந்து பேசவில்லை. மதத்தை மட்டுமே பார்க்காதீர்கள். ஒரு தளத்தில் நாம் பேசும்போது அது எந்தவிதத்திலும் மற்றவர் மனதை காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் எல்லோருக்குமே நல்லது.

தவறை நம்மீது வைத்துக் கொண்டு அட்மின் வரவில்லை. தீர்வு தரவில்லை என்று அவரை ஏன் இந்த பிரச்சனையில் இழுக்க வேண்டும். எல்லோரும் தொலைநோக்கு பார்வையுடன் இருங்கள். மதத்தை மறந்து விடுங்கள் மனதில் நட்பை மட்டும் வைத்துக் கொண்டு வாருங்கள். இந்த தளத்தில் நாம் மகிழ்ச்சியுடன் உரையாடுவோம்.

பிரியா உங்கள் மகனுக்கு என்னுடைய வாழ்த்துகள். இறைவன் அவனுக்கு எல்லா செல்வத்தையும் கொடுக்கட்டும். அவனுக்காக இறைவனை பிராதிக்கின்றேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நான் எப்பொழுது கோபமாக பேசினேன்?

மேலும் சில பதிவுகள்