பாகற்காய் தீயல்

தேதி: June 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

இந்த தீயல் கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பாரம்பரிய உணவு வகை. இதனை முருங்கைக்காய், சின்ன வெங்காயம், பச்சை தக்காளி என்று பல காய்கறிகள் பயன்படுத்தி தயாரிக்கலாம். இறால், செம்மீன் போன்ற கடல் உணவுகளைக் கொண்டும் தயாரிக்கலாம். அறுசுவை நேயர்களுக்காக கேரள உணவுக்குறிப்புகளை வழங்கி வரும் <b> திருமதி. விஜி சத்யா </b>அவர்கள் இந்த உணவினை தயாரித்து காட்டியுள்ளார். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

பாகற்காய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
கடுகு - அரைத் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 3 இணுக்கு
புளி - நெல்லிகாய் அளவு
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தீயல் பொடி
தேங்காய் துருவியது - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 7
மல்லி - ஒரு தேக்கரண்டி
நல்ல மிளகு - அரைத்தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு


 

முதலில் தீயல் பொடியினை தயார் செய்துகொள்ளவும். மேலே பொடி செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் தேங்காய் தவிர அனைத்தையும் வெறும் கடாயில் போட்டு வறுக்கவும். கடைசியில் தேங்காயும் போட்டு சிவக்க வறுக்கவும். சூடு ஆறினவுடன் மிக்ஸியில் போட்டு பொடி செய்துகொள்ளவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. தேங்காய் சேர்ப்பதினால் அதில் உள்ள எண்ணையினாலேயே நன்கு அரைபட்டு பேஸ்ட் போல் ஆகிவிடும். பாகற்காயை அரை அங்குல நீளத்தில் மெல்லிய துண்டுகளாக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்(சிறிய வெங்காயம் நல்லது). தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போடவும். அது வெடித்த பிறகு நறுக்கின வெங்காயம் சேர்க்கவும்.
அத்துடன் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் துண்டங்களைச் சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் புளி தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
சுமார் ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தீயல் பொடியை (அது பேஸ்ட் போல் இருக்கும்) சேர்த்து, தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பாகற்காய் நன்கு வெந்தவுடன் மேலே சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையும் போடவும். இப்போது சுவையான தீயல் ரெடி. இதனை சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இதே முறையில் பாகற்காய்க்கு மாற்றாக, முருங்கைக்காய், சேனை, சின்ன வெங்காயம், வழுதலங்காய் போன்றவற்றை சேர்த்தும் செய்யலாம். தீயல் பொடி இல்லை என்றால் மல்லி பொடி, காரத்தூள், மஞ்சள் தூள், தேங்காய் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, அதனை சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தீயல் பொடி செய்வது எப்படி

தீயல் பொடி செய்வது எப்படி

பிரியா, முதல் பாராவில் பாருங்கள். கடைசி 6 ஐட்டங்களில் தேங்காய் தவிர மற்றவற்றை வறுத்து, கடைசியில் தேங்காயை வறுத்து தண்ணீர் விடாமல் அரைக்கவும் என்று போட்டிருக்கிறார்களே. அதுதான் தீயல் பொடி. சரிதானே விஜி.
அன்புடன்
ஜெயந்தி மாமி

இன்ட்ரு மதிய உணவுக்கு தீயல் செய்தேன் விஜி அருமை.உருளயும் சின்ன வெஙாயமும் நீட்டுவாக்கில் அரிந்து இந்த முறயில் செய்தாலும் நன்ட்ராக இருக்கும்.

Today is a new day.

ஹாய் விஜி

எனக்கு சேனை தீயல் மற்றும் கொண்டைக்கடலை தீயலும் மிகவும் பிடிக்கும்.அதுப்போல் நீங்க தீயல் பொடி என்று சொல்லுகிறீர்களே அதை அரைத்தே வைத்துவிடுவீங்களா? (அதாவது இஞ்சி,பூண்டு பேஸ்ட் போல)ஏன் என்றால் நாங்கள் பிரஷ்ஷா தான் கிரைண்ட் பண்ணுவோம் அதுதான் கேட்டேன்.
அதுப்போல் நீங்க தென்மாவட்டத்தை சேர்ந்தவரா?இந்த தீயல் என்ற வார்த்தை கன்னியாகுமரி மாவட்டாத்தில் பிரசித்தி அதனால் கேட்டேன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

தீயல் பொடி அதிலே உள்ளது போல வெறும்னே வறுத்து பொடி செய்ய வேண்டும்.. தண்னிர் விட கூடாது. தேவைகேற்ப்ப செய்து வைத்து கொள்ளவும். இதில் தேங்காய் சேர்ப்ப்பதால் நிற்ய்ய நாள் வைக்க முடியாது. அப்ப அப்ப ப்ர்ஸா பொடித்து செய்தால் நல்லது.

விஜி சத்யாஆஆஆஆஆ நீங்கதானா?

ஹாய் விஜி எப்படியிருக்கிறீங்க?வீட்டில் அத்தை மாமா எப்படியிருக்கிறங்க?மற்றும் குட்டீஸ்
நான் தீயல் என்ற வார்த்தை பார்த்தவுடன் ஒன்று தமிழ் நாட்டில் தென்மாவட்டம் அல்லது திருவனந்தபுரம் ஏரியா என்று நினைத்துக்கொண்டேன்.அந்த மீன் என்ற வார்த்தையை பார்த்தால் அப்பம் இந்த விஜி வேற விஜி சத்தியா என்று நினைத்துவிட்டேன்.
ஏரி,ஃபால்ஸ் பிக்கினிக்கு போகும் போது சாப்பாடுகட்டிகொண்டு போபவர்கள் என்றால் அதுவும் கத்திரிக்காய், முருங்காக்காய் தீயல் நல்ல வற்றவிட்டு எடுக்கொள்ளவும் இட்டிலிக்கு தொட்டுக்கொள்ளவும் வாவ்...........................................அம்மா நான் மிஸ் பண்ணுகிறேன் அம்மா உன் தீயலைகுழம்பை
ஹரிகாயத்திரி தீயல் குழம்பு செய்து மிகவும் நன்றாக இருந்த்து என்று சொன்னீங்களே இங்கே பாருங்கள் படத்துடன் விளக்கம் உள்ளது
சாரி விஜி இங்கே பதிவு மிகவும் நீளமாக போட்டு விட்டேன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Yesterday I had perpared your பாகற்காய் தீயல் .
came out very well and taste was really super.

Thanks

நன்றி. சூடு சாததிற்க்கு விட்டு சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். கசப்பே தெரியாமல் நல்லா இருக்கும். நன்றி. இதே மாதிரி நிங்க முருங்கைகாய், சின்ன வெங்காயத்திலும் செய்யலாம். ட்ரை

ஹாய் விஜி மேடம்,
பாகற்க்காய் தீயல் செய்தேன், நல்லா இருந்தது.என்னவருக்கு office க்கு கொடுத்து அனுப்பினேன்,அவருக்கு பார்க்கும் போதே நாவில் நீர் ஊறியதாம்.ஆஹா, என் மனைவி எனக்கு புடிச்ச மாதிரி குழம்பு செய்திருக்காளேன்னு நெனைசிட்டெ சாப்பிட்டாராம்,ஒரே வார்த்தையில் சூப்பர்ன்னு சொல்லிட்டார்.கொஞ்சம் புளி கூட போல் தெரிந்தது.தேங்காய் அதிகமாகவும் , புளி குறைவாகவும் சேர்க்கனுமோ?அடுத்ததடவை பார்த்து சரியா செய்திடுவேன். பாகற்காய் கசப்பே தெரியலை.இதுக்கு என்ன side dish நல்லா இருக்கும்னு சொல்லுங்களேன்...

நான் கன்னியாகுமரிதான்.தீயல் எப்பொதும்செய்வதுதான்.ஆனால் பாகற்காயில் பிட்லை,ஃப்ரை,அவியல், வேறு வகைகள் செய்திருக்கிறேன்.உங்க குறிப்பு பார்த்துதான் பாகற்காயில் செய்தேன்.நன்றாக இருந்தது.நன்றி.
விஜிடிவிஎம் என்றால் நீங்கள் திருவனந்தபுரம் நினைக்கிறேன்.என் நாத்தனார் மற்றும் நிறைய உறவினர்கள் எல்லாம் திருவனந்தபுரம் தான்.
அநேகமாக ஏதாவது ஒரு வகையில் உங்களை தெரிந்து
இருக்கலாம்.
உங்களுக்கு எழுத்தாளர் கலைமாமணி மாதவன்(முன்னாள் தமிழ்சங்கதலைவர்) தெரியுமா? என சொல்லுங்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.