சிக்கன் 65

தேதி: June 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (12 votes)

 

சிக்கன் - அரை கிலோ
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
முட்டையின் வெள்ளைக்கரு - ஒன்று
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
வினிகர் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 300 மி.லி


 

கோழி எலுப்பில்லாமல் கிடைத்தால் வாங்கி கொள்ளலாம். எலும்புடன் இருக்கும் கோழியிலும் செய்யலாம்.
கொடுத்துள்ளவற்றை கோழியில் பிசறி ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் 6 (அல்லது) 7 துண்டுகளாக போட்டு மீடியம் தீயில் பொரித்து எண்ணெய்யை நன்கு வடித்து விடவும்.


சிக்கன் 65 பொடி கடையில் வாங்காமல் நம்ம வீட்டு தயாரிப்பில் செய்யும் முறை இது. சூப்பராக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Saraswathi madam,

We tried your chicken 65 today. It came out well and taste is very nice more than hotel one.Thanks for this nice recipe.

சகோதரி சரஸ்வதி!

சிக்கன் 65 பொடி எப்படி வீட்டில் தயாரிப்பதென சொல்ல முடியுமா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

முதலில் எனது நன்றியை சொல்லிக்கொள்கிரேன்.சிறு கிழங்கிற்க்கு விளக்கம் கொடுத்ததர்க்கு.
ஆமாம்,கடையில் வாங்கும் சிக்கன் மசாலா பொடி உடம்புக்கு கேடு தான் விளைவிக்கும்.இது படி செய்யலாம்.நன்றி திருமதி சரஸ்வதி அவர்களே.

முதலில் நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்தியன் கடைகள் வெகு தூரத்தில்தான் இருக்கும். நினைத்தவுடன் வாங்கமுடியாது. அவர்கள் வீட்டிலிருக்கும் பொருளை வைத்து செய்துவிடலாம். நீங்கள் செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று பின்னூட்டம் அனுப்பினால் நன்றாக இருக்கும். நன்றி கேஆர். கேஆர் என்றால் பெயர் என்ன.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அம்மா,

சிக்கன் 65 செய்து பார்க்க விருப்பம்.இந்த சிக்கன் 65 எந்த உணவுக்கு பொருத்தமாக இருக்கும். நீங்கள் ஸ்பூன் என்று கொடுத்திருப்பது டீஸ்பூன் அளவா அல்லது டேபிள்ஸ்பூன் அளவா.ப்ரீஸரில் ஊறவிட்டால் கட்டியாக ஆகிவிடுமே. உடனே பொரிக்க முடியுமா.உங்கள் பதில் கண்டதும் செய்ய விரும்புகிறேன் அம்மா.நன்றி.

சாரி அனுபா. டேபுள் ஸ்பூன் தான். நீங்கள் இருக்கும் கிளைமேட்டிற்கு இறுகி விடும் என்றால் பிரிஜ்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்து பின் வெளியில் 30மணி நேரம் ஊறவைத்து பொரிக்கலாம். பிரியாணிக்கு சூப்பரான சைடிஷ். சாம்பார், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு எல்லாவற்றிர்க்குமே நன்றாக இருக்கும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அம்மா,நலமா.உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.நான் எப்போதும் சிக்கன் 65 மசாலா யூஸ் பண்ணி தான் செய்திருக்கிறேன்.நேற்று உங்கள் சிக்கன் 65,சிக்கன் குழம்பிற்கு சைட்டிஷ்ஷாக செய்தேன்.சுவை வித்தியாசமாகவும்,மிகவும் நன்றாகவும் இருந்தது.எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது.எங்கள் வீட்டில் இனி அடிக்கடி செய்வேன்.மிக மிக நன்றி .

சிக்கன்65 செய்து பின்னூட்டம் நன்றாக இருந்தது என்று பின்னுட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

சரஸ்வதி மேடம் எப்படி இருக்கீறீகள்.

இந்த சிக்கன் 65 நேற்று செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது கொஞ்சம் மிளகு தூள் மட்டும் சேர்த்து கொண்டேன், மீதியை இன்று பொடியா அரிந்து சிக்கன் பரோட்டா சாண்ட்விச் செய்து விட்டேன்.

ஜலீலா

Jaleelakamal