தேதி: June 23, 2008
பரிமாறும் அளவு: இரண்டு குழந்தைகளுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டை - இரண்டு
கெட்டி பால் - கால் டம்ளர்
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
நெய் - ஒரு சொட்டு
முட்டையை சர்க்கரை சேர்த்து நல்ல அடிக்க வேண்டும்.
பிறகு பால் கலந்து அதில் ஏலக்காய், நெய் சேர்த்து ஒரு சிறிய மூடி போட்ட சில்வர் டிபன் பாக்ஸில் வைத்து சின்ன குக்கரில் அடியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இந்த டிபன் பக்ஸை உள்ளே வைத்து மூடி போட்டு மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும்.
குக்கர் ஆவி அடங்கியதும் மெதுவாக வெளியில் எடுத்து குழந்தைகளுக்கு ஸ்பூனால் ஊட்டி விட வேண்டும்.
இந்த முட்டை புட்டிங் குழந்தைகளுக்கு ஈசியாக உள்ளே போகும். ஆறு மாதத்திலிருந்து இதை கொடுக்கலாம்.
இதை குழந்தைகளுக்கு இடியாப்பம், தோசைக்கு கூட தொட்டு கொடுக்கலாம். இதுவும் முட்டை வட்லாப்பம் மாதிரி தான் ஆனால் பாலில் சீக்கிரம் நொடியில் தயாரித்து விடலாம்.
Comments
எக் புட்டிங் (பாபு தம்பி)
எக் புட்டிங்
பாபு தம்பி சாரி இத நான் பார்க்காமலே நேற்று உங்களிடம் கேட்டு விட்டேன் இன்னும் போடலையான்னு .
மிக்க நன்றி.
ஜலீலா
Jaleelakamal
சந்தேகம்
கட்டி பால் எப்படி தயார் செய்வது. ஆவின் பால் சரியக இருக்குமா.
டியர் ஸ்ரீ ஜீவிதா எக் புட்டிங்
டியர் ஸ்ரீ ஜீவிதா
எக் புட்டிங்
ஆவின் பாலே போது கொஞ்சமா தண்ணீர் ஊற்றி கட்டியா காய்ச்சி கொள்ள வேண்டும்.
இது தேங்காய் பாலில் கூட ரொம்ப ஜோரக இருக்கும். அது பெயர் முட்டை வட்லாப்பம்.
இது நினைத்த நேரம் உடனே செய்யலாம்.
இல்லை பால் பவுடர் கூட சேர்த்து காய்ச்சி கொள்ளலாம்.
ஜலீலா
Jaleelakamal
நன்றி
நன்றி. இந்த பதார்தத்தை செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
jaleela akka
hi jaleela akka,
still nw i hve nt given cows milk 2my son(9 mnths)is it possible 2 prepare with formula milk.waiting for ur reply
viji
விஜி நீங்க என்ன மில்க்
டியர் விஜி நீங்க என்ன மில்க் பயன் படுத்துகிறீகளோ அதிலேயே செய்யுங்கள்.
ஜலீலா
Jaleelakamal
இல்லை
இல்லை அக்கா,
formula milk கொதிக்க வைக்கலாமான்னு doubt?
thts y i asked u.
உங்கள் குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அக்கா. thank u very much akka.
பசும்பால்
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்..அட்மின் ரெண்டு நாள் முன்னாடி தான் முந்திரிகொட்டைத் தனம் பன்ன கூடாதுன்ன் சொன்னார் இருந்தாலும் பொறுக்க மாட்டாமல் சொல்கிறேன்..இது மாதிரி உணவு விஷயங்களுக்கு அதாவது திடமாக எது கொடுக்கவும் பசும்பால் கலந்து செய்யுங்கள்..அதற்கு ஃபார்முலா நல்லதல்ல.அதனை 6 மாதத்திலேயே பழக்க படுத்தலாம்.
ஜலீலாக்கா
ஜலீலாக்கா இந்த புட்டிங் என் அம்மா செய்வாங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும்.அம்மா இதோட 10முந்திரி பருப்பும் அரைத்து சேர்த்து செய்வாங்க.நாளைக்கு முந்திரிபருப்பெ சேர்க்காம செய்துட்டு எப்படி இருந்தத்னு சொல்ரேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
எக் புட்டிங்
ஜலீலாக்கா,
இந்த புட்டிங் இப்போ தான் செய்து தட்டில் கொட்டி வைத்து இருக்கிறேன். என் சிறுமிக்காக வெயிட்டிங். பார்க்க அழகாக இருக்கு. உண்மைதான் நொடியில் தயார். நன்றி.
ஜலீலா அக்கா
ஜலீலா அக்கா உங்களின் எக் புட்டிங் செய்து பார்க்க ஆசை உள் வைக்கும் பாக்சிலும் மூடி போடானுமா ப்ளீஸ் சொல்லுங்களேன்.
நம்ம ஊர் தேன் மிட்டாய் செய்வீங்கலா.தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா.ப்ளீஸ்
டியர் சித்தி மூடி போட வில்லை
டியர் சித்தி மூடி போட வில்லை என்றால் குக்கர் தண்ணீர் உள்ளே வந்துவிடும்.
ஜலீலா
Jaleelakamal
akka i like pudding today i
akka i like pudding today i am going to do this
எக் புட்டிங் (குழந்தைகளுக்கு)
6 மாத குழந்தைக்கு முட்டையின் மஞ்சள் கரு மட்டும் தான் முதலில் குடுக்க சொல்றாங்க. முழு முட்டையும் கொடுக்கலாமா. தயவு செய்து தெளிவுபடுத்தவும். என் மகளுக்கு வயது எட்டு மாதம் ஆகிறது. பசும் பால் அல்லது பாக்கெட் பால் கொடுக்கலாமா?