மீன் குழம்பு

தேதி: June 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

மத்தி மீன் - அரை கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சைமிளகாய் - 4
வரமிளகாய் - 2
மிளகாய்பொடி - 3 தேக்கரண்டி
மல்லிபொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி


 

வெங்காயத்தை அரைத்து கொள்ளவும். தக்காளியை அரைக்கவும். மிளகு, சீரகம், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைத்த வெங்கயத்தை சேர்த்து வதக்கி, தக்காளி, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து கிளறவும்.
மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் மீனை போட்டு 2 கொதி வந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்