டைபாய்ட் க்கு என்ன டயட்?

அல்லாஹுஅக்பர்..
என் மகனுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல்.நேற்று டெஸ்ட் பண்ணியதில் டைபாய்ட் எனத்தெரிய வந்தது.ஹை ஆண்ட்டி பயாடிக் மருந்துகள் டாக்டர் எழுதி தந்துள்ளார்.
என்ன டயட் கொடுக்க வேண்டும்?
சகோதரிகள் தெரிந்தால் சொல்லுங்களேன்.
முன்பெல்லாம் இப்படி ஆலோசனைகளுக்கு போனை தூக்கி விடுவேன்.உறவினர்களிடம் ஆலோசனை கேட்க.இப்போது சினேகித சகோதரிகளிடம் கேட்கிறேன் .ப்ளீஸ் ஹெல்ப்.
---ஸாதிகா

சாதிகா அக்கா மாதுளை பழம் கொடுங்கள், எண்ணை அயிட்டம் அரவே கொடுக்காதீங்க. அவித்த அயிட்டம் மட்டும் கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

சாதிகா

தங்கள் மகனுக்கு விரைவாக குணம் ஆகிவிடும் கவலை படாதீர்கள்.
என்ன சாப்பிட குடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் நிறைய ஜூஸ் கொடுங்கள்.

நலமா,மகன் எப்படி இருக்கிறார் நல்ல படியாக பார்த்துக்கொள்ளவும். இந்த டய்பாய்டு நாம எவ்வளவு டயட்டா இருக்கோமோ அவ்வளவு சீக்கிரத்தில் சரியாகிடும். இல்லைன்னா திரும்ப வந்துடும். என் அனுபவத்தில் கண்டது 2 வாட்டி வந்துட்டு.ஏன்னா கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாகிட்டுன்னு டயட்டை விட்டது தான் காரணம். அதனால் அக்கா மகனை நல்ல படியா பார்த்துக்கோங்க. டயட் அவசியம். எனக்கு பார்த்துட்டு பதில் போகாமல் இருக்க மனசு கேட்க்கலை அதான் உடனே பதில் போட்டேன்.

என் அம்மா எனக்கு செய்து தந்ததை சொல்கிறேன்.

சாதம் நல்ல குழைத்து கொடுங்க. அப்புறம் இட்லி கொடுக்கலாம். காரம் கூடவே செய்யாது.அசைவம்,முட்டைலாம் கொடுக்காதீங்க காய்ச்சல் விட்ட பிறகு வேண்டா நிறைய நாள் கழித்து அதுவும் கூட டாக்டரிடம் கேட்டு கொடுங்க.

ஜூஸ் நிறைய கொடுங்க. ஆரஞ்சு,சாத்துகுடி,மாதுளை இதை பிழிந்து குளுகோஸ் சேர்த்து கொடுங்க. நிறைய தண்ணீர் கொடுங்க.இளநீர் கொடுங்க. தண்ணீரில் குளுகோஸை சேர்த்து சேர்த்தே கொடுங்க.

சாதம் கொதித்த உலை நீர் கொடுக்கலாம்.பேரீத்தம்பழம் கொடுக்கலாம். இது குடலில் புண்ணை ஏற்படுத்தும்.மோஷன் ப்ளேக் கலர்ல போகும் அதுவும் டைட்டாக போகும் பயம் வேண்டாம்.வாழைபழம் கொடுங்க உடம்பு சரியானால் எல்லாம் சரியாகிடும் அதனால் குளிர்ச்சியான வஸ்து கொடுங்க கடல்பாசி தண்ணீரில் காய்ச்சி,சீனி சேர்த்துஆறினதும் அப்படியே குடிக்க கொடுங்க.பாலிலும் கடல் பாசி காய்ச்சி கொடுக்கலாம்.இந்த காய்ச்சல் விட்ட பிறகு நிறைய சத்து சேர்க்கனும் ஏன்னா ரெம்பவும் வீக்காகிவிடுவோம்.
வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.

அன்புடன் கதீஜா.

சுப்ஹானல்லாஹ் டைபாய்டா?அல்லாஹ் லேசாக்குவானாக ஆமீன்.மாதுளை ரொம்ப நல்லது..அதும்,தோலும் மருந்துதான்..கவனமா [பார்த்துகங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஸ்னேகிதிகளே.. நலம்தானே?
அறுசுவையில் உள்நுழைவில் ஏற்பட்ட பிரச்சினையால் என்னால் உங்கள் அனைவரிடமும் அளாவளவ முடியாமல் போய் விட்டது.
நீங்கள் அரட்டையில் பங்கு கொள்வதை எட்டி இருந்து ரசிப்பதுடன் சரி.இன்றுதான் அட்மின் தம்பி சரி செய்துவிட்டார்.
என் மகனுக்குகாய்ச்சல் சரியாகி,பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டான்.அல்ஹம்துலில்லாஹ்.
டைபாய்டுக்கு டயட் கேட்டதும் டயட் முறைகளையும்,விசாரிப்புகளையும்,பிரார்த்தனைகளையும் தந்து என்னை நெகிழவைத்த என் அருமை சகோதரிகள் ஜலீலாபானு, வித்யாசரவணன்,கதீஜா,மர்ழியா அனைவருக்கும் எனது அன்பையும் நன்றியையும் சமர்பிக்கின்றேன்.
அன்புடன்,
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்